Friday, May 21, 2010

உலகின் முதல் எஸ்.எம்.எஸ்?!

ங்கும், எதிலும், எப்போதும் தாங்கள்தான் முந்தி இருக்க feminine_cells_html_289e151fவேண்டும் என்று நினைக்கும் அமெரிக்கர்கள், செல்போன்களை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன? உலக அளவில்  செல்போன்களைப் பயன்படுத்துவதிலும் அமெரிக்கர்கள்தான் நம்பர் ஒன்! சராசரியாக, ஒரு அமெரிக்கர் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட செல்போன்களைப் பயன்படுத்துகிறாராம். பரம ஏழையாக இருந்தாலும் அதிகபட்சம் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஒரு செல்போனை உபயோகிப்பது இல்லையாம்

அமெரிக்கர்கள். 2.3% பேர் மட்டுமே தங்களுடைய பழைய செல்போனை மறுசுழற்சி செய்ய உபயோகப்படுத்துவதாகவும் மீதி 7% பேர் அதைக் குப்பையில் வீசுவதாகவும் சமீபத்திய சர்வே சொல்கிறது. நீண்ட நாட்கள் பயன்பாட்டில் இருக்கும் செல்போனில் உள்ள கேட்மியம், லெட், பெரிலியம் போன்ற தனிமங்களால் நோய் எதிர்ப்புச் சக்தி, நரம்பு மண்டலம், மூளை, ஈரல், நுரையீரல் போன்றவை எளிதாகப் பாதிக்கப்படும். இதனால், அடிக்கடி செல்போன்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள் அமெரிக்காவில்.

நடப்பு நிலவரப்படி சுமார் 250 ஆயிரம் டன் எடை மதிக்கத்தக்க 500 மில்லியன் செல்போன்கள் குப்பைத் தொட்டிகளுக்குக் காத்திருக்கின்றன. இந்த வருடம் மட்டும், புதிதாக ஐந்து மில்லியன் செல்போன்கள் அங்கு பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன. இவை கிட்டத்தட்ட 75 சதவிகித உலக மக்கள் தொகைக்குச் சமம் என்று International Telecommunication Union சமீபத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.

நிற்க... 1973-ல் செல்போனை முதன்முதலில் உபயோகப்படுத்தியவர் டாக்டர் மார்ட்டின் கூப்பர். 'மேரி கிறிஸ்துமஸ்' என்பதுதான் உலகின் முதல் குறுஞ்செய்தி. அனுப்பியவர் நீல்டேப்வொர்த் (டிசம்பர் 1992). இன்று அமெரிக்காவில் மட்டுமே நாளன்றுக்கு 4.1 மில்லியன் எஸ்.எம்.எஸ் அனுப்புகிறார்கள். யு.எஸ் முழுக்க எஸ்.எம்.எஸ்தான்போல!

நன்றி: விகடன்

Thursday, May 13, 2010

உலகின் முதல் விளம்பரம்!!

ப்போது, எப்படி ஆரம்பித்தன விளம்பரங்கள்?

p102a

'மனிதன் தனக்குத் தேவையானதை மட்டும் உற்பத்தி செய்தபோது விளம்பரம் தேவைப்படவில்லை. தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்துதபோதுதான் விளம்பரம் பிறந்தது' என்கின்றனர் ஆய்வாளர்கள். முதன்முதலில் பாபிரஸ் இலைகள் மூலம் சுவரில் எழுதி விற்ப னையை மக்களிடம் விளம்பரப்படுத் தியவர்கள் எகிப்தியர் கள். பின்னர், வீடுகளுக்கு முன்சென்று கூவுவது, முச்சந்தியில் நின்று கத்துவது என்று விளம்பரம் படிப்படியாக வளர்ந்தது.

அப்போது படித்தவர் களின் எண்ணிக்கை சொற்பமாக இருந்ததால் வியாபாரிகள் தங்கள் பொருட்களை ஓவிய மாக வரைந்து விளம் பரங்கள் செய்தார்கள். அச்சு இயந்திரங்கள் தோன்றியபோது, விளம்பரங்கள் வேறு வடிவம் பெற்றன. 17-ம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் பத்திரிகைகளில் முதல் முறையாக மருந்து, மாத்திரைகள் பற்றிய விளம்பரங்கள் p103aஇடம்பிடித்தன.

ஜூன் 1836-ல் பிரெஞ்சுப் பத்திரிகையான La Presse முதன்  முதலாக விளம்பரங்களுக்குக் கட்டணம் வசூலித்தது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெரும்பாலான வீடுகளில் பெண்கள்தான் முடிவு எடுத்தார்கள். எனவே, பெண்களைக் குறி வைத்தே வீட்டு உபயோகப் பொருட்களை விளம்பரம் செய்தார்கள். 'அதையும் பெண் களைவைத்தே விளம்பரம் செய்யலாமே?' என்று நினைத்தபோதுதான் 'விளம்பர மாடல்கள்' என்றொரு புதிய இனம் உருவானது. ஒரு குளியல் சோப் விளம்பரம்தான் பெண் மாடலைவைத்து எடுக்கப்பட்ட முதல் விளம்பரம். 'நீங்கள் தொட விரும்பும் சருமம்'(The skin you love to touch) என்பதுதான் விளம்பர உலகில் எழுதப்பட்ட முதல் ஸ்லோகன்.

1920-களில் ரேடியோ புழக்கத்துக்கு வந்தவுடன் விளம்பர உலகம் விரிவு அடைந்தது. 1950-களில் டுமான்ட் டெலி விஷன் நெட்வொர்க் என்ற தொலைக் காட்சி நிலையம் முதல் முறையாக விளம் பரங்களை ஒளிபரப்பியது. 1960-களில் என்ன செய்தியோ, அதை மட்டுமே விளம்பரம் என்று சொல்லி வந்தனர். அதற்கடுத்துதான் 'கிரியேட்டிவிட்டி' முக்கிய அம்சம் ஆனது.

இன்று எல்லாமே விளம்பரமயம். தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்ளத் தெரிந்தவர்கள் மட்டுமே விலைபோகிறார்கள். இல்லை என்றால், செல்லாக் காசுதான்!

நன்றி: ஆனந்த விகடன்

Wednesday, May 12, 2010

எருமை விலை ரூ. 5 லட்சத்து 72 ஆயிரம்

ஆலமூரு(ஆந்திரா) :கறவை மாடுகளில் அதிக பால் தரும் போட்டியில், முதல் பரிசு பெற்ற எருமை, ஐந்து லட்சத்து 72 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.அரியானா மாநிலம் பரீதாபாத் அருகே, நீம்கா கிராமத்தில் விவசாயி ஒருவர் வைத்திருந்த எருமை மாடு ஒன்று, தினமும், 31 முதல் 32 லிட்டர் பால் தருவதாக செய்தி பரவியது.இதையடுத்து, ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ஆலமூருவை சேர்ந்த விவசாயி கோரா வீரபத்திரராவ், அரியானா சென்று எருமையின் உரிமையாளர் தர்மாபாயை சந்தித்து, எருமையை விலைக்கு வாங்க விரும்புவதாக கூறினார்.tblHumanTrust_70941889287

அவரிடம் தர்மாபாய் கூறுகையில், 'அந்த எருமையை வளர்ப்பதற்காக, அரியானா அரசு, ஊக்கத்தொகையாக ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கி என்னை கவுரவித்தது. எங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்பட்டது. இந்த எருமையின் படம், இன்டர்நெட் மற்றும் உள்ளூர் பத்திரிகைகளில் செய்தியாக வெளியானது' என்றார். இந்த எருமை மீது ஆர்வம் கொண்ட ஆந்திர விவசாயி, வீரபத்திரராவ் ஐந்து லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் கொடுத்து, எருமையை விலைக்கு வாங்கினார். இதை ஆந்திராவுக்கு ஏற்றிவர லாரி வாடகையாக 22 ஆயிரம் ரூபாய் செலவு செய்தார்.தற்போது ஏழு மாத சினையாகி உள்ள எருமை, இப்போதும், தினமும் 15 லிட்டர் பால் தருவதாகவும் அவர் கூறினார்

LinkWithin

Related Posts with Thumbnails