Wednesday, March 17, 2010

நான்காம் வகுப்பு தேர்வு 70 வயதில் எழுதினார்

இரிட்டி :வயது எழுபதானாலும், கண் பார்வை மங்கினாலும் பரவாயில்லை, படித்தே தீருவது என்ற லட்சியத்துடன், நான்காம் வகுப்பு தேர்வு எழுதி அசத்தினார் குஞ்ஞிப் பாத்தூம்மா.

tblgeneralnews_35481989384 அவருடன் தேர்வெழுத அவரது மகள், இரு பேத்திகள் உட்பட, 48 பேர் உடன் இருந்தனர்.கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் இரிட்டி ஊராட்சி உளியில் ஜி.யு.பி., பள்ளியில், சிறு வயதில் கல்வி கற்காதவர்களுக்காக அரசு அறிவித்துள்ள, துல்யதா பரிக்ஷ� திட்டத்தின் கீழ் தேர்வு நடத்தப்பட்டது.  சிறு வயதில் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்று, தற்போது எழுபது வயதை கடந்து நிற்கும் குஞ்ஞிப் பாத்தூம்மாவும் தேர்வு எழுதச் சென்றார்.அவர், நான்காம் வகுப்பு தேர்வெழுதினார்.  கண் பார்வை சற்று மங்கியிருந்தாலும் சளைக்காமல் ஆர்வத்துடன் தேர்வெழுதினார். அவருடன், அவரது 40 வயது மகள் சுகாராவும், பேத்தி ஷாஜிதா மற்றும் நசீமாவும் தேர்வெழுதினர்.அவர்களுடன், நடுத்தர வயதை கடந்த 48 பேரும் தேர்வெழுதினர். அந்த ஊராட்சியில் உள்ள பல பள்ளிகளில் 14ம் தேதி நடந்த இத்தேர்வில் மட்டும் 856 பேர் தேர்வெழுதினர்.

2 comments:

  1. அந்த தாயை பாராட்டுவோம்.அந்த தாய் பெருமை படுத்தவேண்டயவர் .
    அந்த தாயின் ஆர்வத்தினையும் உற்சாகத்தினையும் நாம் பாராட்டி தலை வணங்கு வோம் .
    தலை குனியவேண்டியவர்கள் நமது கல்வி கொள்கை வகுத்தவர்களும் அந்த தாயை முடகியவர்களும்

    காசி ராஜன்
    பாண்டி சேரி

    ReplyDelete
  2. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails