Wednesday, February 24, 2010

ஆபாசப்படம் ”பார்த்து” ரசித்தவர் கைது

மேட்டூர் : பத்து ஆண்டாக, இரவில் ஆபாசப்படம் பார்த்து ரசித்து வந்த ஓவியர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து, 750 ஆபாசப்பட, "சிடி, டிவிடி'க்கள், பறிமுதல் செய்யப்பட்டன.

tblSambavamnews_21288698912 சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகாவைச் சேர்ந்தவர், சந்திரசேகர்(45); ஓவியர். இவருக்கு மனைவி, எட்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளனர். சந்திரசேகர், லாரி, கார், ஆட்டோ போன்றவற்றில், பெயர் எழுதுதல், ஓவியம் வரைதல் போன்ற வேலைகளை செய்கிறார். இவர், கொளத்தூர் முனியப்பன் கோவில் அருகே, தனியாக ஒரு அறையை வாடகைக்கு எடுத்துள்ளார். அந்த அறையில், "டிவிடி' ப்ளேயர், கலர் "டிவி' உள்ளது. இரவில் சந்திரசேகர் அந்த அறைக்கு வந்து விடுவார். அங்கு, இரவு முதல் காலை வரை "டிவி' ஓடிக் கொண்டே இருக்கும். பல ஆண்டுகளாக இது தொடர்ந்தது.

இது பற்றிய சந்தேகத்தின் பேரில், நேற்று போலீசார், சந்திரசேகர் அறைக்கு சென்றனர். அப்போது, "டிவி'யில் ஆபாசப் படம் ஓடிக் கொண்டிருந்தது. இதையடுத்து, சந்திரசேகரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், 1990ம் ஆண்டு முதல் ஆபாசப் படத்தை தீவிரமாக பார்க்க துவங்கியதும், அதற்காக ஒரு அறை வாடகைக்கு எடுத்து, "டிவி' மற்றும் ப்ளேயர் வைத்து, அதில் ஆபாசப் படம் போட்டு தனிமையில் ரசித்ததும் தெரிந்தது. அவர், 2000ம் ஆண்டில் இருந்து வாங்கிய ஆபாச, "சிடி, டிவிடி'க்களை பொக்கிஷமாக சேமித்து வைக்க துவங்கியுள்ளார். அவரிடம் இருந்து 750 ஆபாசப் பட, "சிடி, டிவிடி'க்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆபாசப் பட, "டிவிடி'க்கள் சேதமடைந்து விடக்கூடாது என்பதற்காக, அதை, "ரிக்கார்டு' செய்ய தனியாக ஒரு, "ப்ளேயரை'யும் சந்திரசேகர் வைத்திருந்தார்.

இப்படி போனா நாட்ல 90 சதவீதம் பேர் உள்ளல்ல இருக்கணும்.  விக்றவங்கள பிடிங்கன்னா, பார்கறவன பிடிக்கிறாங்க. என்ன ஒரு அநியாயம்.

4 comments:

  1. //இப்படி போனா நாட்ல 90 சதவீதம் பேர் உள்ளல்ல இருக்கணும். விக்றவங்கள பிடிங்கன்னா, பார்கறவன பிடிக்கிறாங்க. என்ன ஒரு அநியாயம்.//

    சாட்டையடி. இந்த ஆக்கத்தை பிரின்ட் பண்ணி பொலிஸ் கொமிசனருக்கு அனுப்புங்கப்பா.

    ReplyDelete
  2. உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.tamildaily.com ல் சேர்த்துள்ளோம்.

    இதுவரை இந்த www.tamildaily.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

    உங்கள் நண்பர்களுக்கும் இத் தளத்தை அறிமுகம் செய்து வையுங்களேன்...

    ReplyDelete
  3. ஆஹா இதெல்லாம் ரொம்ப அநியாயம்.....
    இது தனி மனித ஒழுக்கம் சம்பந்தமான விஷயம்....... போலிஸ் கைது செய்ய எந்த உரிமையும் இல்லை.... அவர் செய்கையின் மூலம் யாருக்காவது தொல்லை ஏற்பட்டால் ஒழிய இது ஒரு குற்றமே அல்ல..........It seems like India/TamilNadu is becoming dictatorial!

    ReplyDelete
  4. கடைசி நெத்தி அடி குடுத்திருக்கீங்க. நல்ல பதிவு.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails