Friday, February 26, 2010

கதவில்லா வீடு : திருட்டில்லா கிராமம்

ராமநாதபுரம்: பூட்டிவிட்டு செல்லும் போதே, கதவை உடைத்து திருடும் இக்காலத்தில்,  கமுதி அருகே உள்ள மீட்டான்குளம் nmalarnews_48008364440கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு கதவுகளே இல்லை என்பது ஆச்சரியம் தானே. இக்கிராமத்தில் உள்ள அனைத்தும் கூரை வீடுகள். ஒரு வீட்டில் கூட கதவுகள் இல்லை என்றாலும், இதுவரை இங்கு திருட்டு நடந்ததே இல்லை என்பது தான் உண்மை.

நூறு ஆண்டுகளாக இதே நிலைதான் நீடிக்கிறது. வீடுகளில் ஆள் இல்லாத போதும், பல மாதங்களாக வீடுகள் திறந்தே கிடக்கின்றன. வீடுகளில் வைக்கப்படும் பணம், நகை போன்றவை இதுவரை திருடு போனதில்லை என்கின்றனர் இக்கிராமத்தினர்.

"இந்த அதிசயத்திற்கு ஊர் காவல் தெய்வம் முனியப்பசாமி தான் காரணம். யாராவது திருடினால், ஒரு வார காலத்திற்குள் கிராம காவல் தெய்வம் முனியப்பசாமியே கண்டு பிடித்து, சம்பந்தப்பட்டவருக்கு தண்டனை வழங்கும் என்ற நம்பிக்கை இருப்பதால், யாரும் திருடுவதில்லை. வெளியூர்காரர்களும் இங்கு வந்து திருட பயப்படுகின்றனர்' என்கின்றனர் மீட்டான்குளம் மக்கள்.

Thursday, February 25, 2010

ஆனந்த விகடனில் “அழியாச் சுடர்கள்”

vikatan

untitled (1)_thumb[7]

vikatan-mar-9-2008 இந்த வார ஆனந்த விகடன் வரவேற்பறையில் நமது சக தளம் ”அழியாச் சுடர்கள்”  இடம் பெற்றிருக்கிறது. போன வாரம் ”வச்சுடான்யா ஆப்பு” இடம்பெற்றது. தொடர்ந்த இருவாரங்களில் நமது இரு தளங்களும் விகடன் வரவேற்பறையில் இடம் பெற்றது மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. நன்றி நண்பர்களே.

நன்றி: விகடன் வரவேற்பறை

படம் உதவி : தமிழ் மகன் S.Senthilathiban

மனநோயாளி வரைந்த ஓவியம்!!!

tblHumanTrust_10370600224

ராமநாதபுரம் : இடிந்த சுவரில் கையில் கிடைத்தவற்றை கொண்டு மனநோயாளி ஒருவர் வரைந்த தத்ரூபமான ஓவியத்தை காண, ஏராளமானோர் குவிந்ததால் போக் குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத் தில் புண்ணிய தலங்களுக்கு நிகராக மனநோயாளிகளின் எண்ணிக்கைக் கும் பஞ்சமிருக்காது. இது போன்ற நோயாளிகளுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு "ஸ்பெஷல்' தன்மை இருக்கும். அந்த வகையில் ராமநாதபுரத்தில் சிறிது நாட்களாக சுற்றித்திரியும்,தஞ்சாவூரை சேர்ந்த சதானந்தம் என்ற மனநோயாளியின் செயல், நேற்று பலரையும் சிந்திக்க வைத்தது. ராமநாதபுரம் தலைமை மருத்துவமனை அருகே உள்ள இடிக்கப் பட்ட கட்டடத்தில் சில நாட்களாக முடங்கிய,

இவரின் நடவடிக்கைகள் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. "என்ன தான் உள்ளே நடக்கிறது, என, பார்க்க அந்த இடிந்த கட்டடத்தில் உள்ளே நுழைந்தவர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி மட்டும் தான். ""இயற்கை எழில் கொஞ்சும் ஒரு பகுதியின் வழித்தடத்தில் சிலர் நடந்து செல்வதை போல'' தத்ரூபமான ஓவியம் ஒன்று அந்த சுவரில் வரையப்பட்டிருந்தது. கையில் கிடைத்த செங்கல், செடிகளின் இலை, குச்சிகள், கட்டைகள் போன்றவற்றை கொண்டு அந்த ஓவியத்தை சதானந்தம் வரைந்ததை கண்டு அங்கு கூடியவர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். சிறிது நேரத்தில் இந்த தகவல் காட்டு தீ போல பரவ,பலரும் ஆர்வமுடன் வந்து அந்த ஓவியத்தை பார்த்து ரசித்து, போட்டோ எடுத்து சென்றனர். இதை பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் ஓவியத்தல் மறுதிசையில் அமர்ந்திருந்த சதானந்தத்திடம், ""சார், வாங்க உங்களுக்கு சாப்பாடு வேணுமா? என்ன வேணும் கேளுங்க,'' என, ஒருவர் கேட்டார்.

""இன்று நீ வாங்கி தருவ, நாளைக்கு நீ வாங்கி தருவியா? , போ, போ, போய் வேலையை பாருங்க...,'' என, தனக்கே உரிய பாணியில் தத்துவம் கசிந்தார் சதானந்தம். "திறமைக்கு "மனம்' ஒரு பொருட்டல்ல,' என, பலரும் முணுமுணுத்தபடி களைந்தனர்

Wednesday, February 24, 2010

ஆபாசப்படம் ”பார்த்து” ரசித்தவர் கைது

மேட்டூர் : பத்து ஆண்டாக, இரவில் ஆபாசப்படம் பார்த்து ரசித்து வந்த ஓவியர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து, 750 ஆபாசப்பட, "சிடி, டிவிடி'க்கள், பறிமுதல் செய்யப்பட்டன.

tblSambavamnews_21288698912 சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகாவைச் சேர்ந்தவர், சந்திரசேகர்(45); ஓவியர். இவருக்கு மனைவி, எட்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளனர். சந்திரசேகர், லாரி, கார், ஆட்டோ போன்றவற்றில், பெயர் எழுதுதல், ஓவியம் வரைதல் போன்ற வேலைகளை செய்கிறார். இவர், கொளத்தூர் முனியப்பன் கோவில் அருகே, தனியாக ஒரு அறையை வாடகைக்கு எடுத்துள்ளார். அந்த அறையில், "டிவிடி' ப்ளேயர், கலர் "டிவி' உள்ளது. இரவில் சந்திரசேகர் அந்த அறைக்கு வந்து விடுவார். அங்கு, இரவு முதல் காலை வரை "டிவி' ஓடிக் கொண்டே இருக்கும். பல ஆண்டுகளாக இது தொடர்ந்தது.

இது பற்றிய சந்தேகத்தின் பேரில், நேற்று போலீசார், சந்திரசேகர் அறைக்கு சென்றனர். அப்போது, "டிவி'யில் ஆபாசப் படம் ஓடிக் கொண்டிருந்தது. இதையடுத்து, சந்திரசேகரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், 1990ம் ஆண்டு முதல் ஆபாசப் படத்தை தீவிரமாக பார்க்க துவங்கியதும், அதற்காக ஒரு அறை வாடகைக்கு எடுத்து, "டிவி' மற்றும் ப்ளேயர் வைத்து, அதில் ஆபாசப் படம் போட்டு தனிமையில் ரசித்ததும் தெரிந்தது. அவர், 2000ம் ஆண்டில் இருந்து வாங்கிய ஆபாச, "சிடி, டிவிடி'க்களை பொக்கிஷமாக சேமித்து வைக்க துவங்கியுள்ளார். அவரிடம் இருந்து 750 ஆபாசப் பட, "சிடி, டிவிடி'க்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆபாசப் பட, "டிவிடி'க்கள் சேதமடைந்து விடக்கூடாது என்பதற்காக, அதை, "ரிக்கார்டு' செய்ய தனியாக ஒரு, "ப்ளேயரை'யும் சந்திரசேகர் வைத்திருந்தார்.

இப்படி போனா நாட்ல 90 சதவீதம் பேர் உள்ளல்ல இருக்கணும்.  விக்றவங்கள பிடிங்கன்னா, பார்கறவன பிடிக்கிறாங்க. என்ன ஒரு அநியாயம்.

Monday, February 22, 2010

பா(ப)ட்டுப் புடவை

ஐதராபாத் : "ஸ்வரம்மதூரி' எனும் பெயரில் புதிதாக 67888_2_468அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாட்டுப்  பாடும் பட்டு புடவைகள் தென் மாநிலங்களில் பிரபலமடைந்து வருகின்றன. இதுகுறித்து, ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், தர்மாவரம் பகுதியை சேர்ந்த உடை வடிவமைப்பாளரான பி.மோகன் என்பவர் கூறுகையில், "பாட்டுப் பாடும் பட்டுப் புடவையில் முந்தானையில், ஐபாட் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அதில், பதியப்பட்டுள்ள 200 பாடல்கள், 4 மணி நேரங்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகும். இதற்காக, இந்த வகை பட்டுப்புடவையில், 2 ஜி.பி., மெமரி சிப் பயன்படுத்தப்படுகிறது. இரண்டு மாதங்கள் கடினமாக உழைத்து, இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது' என்றார்.

இந்த சேலையின் உரிமையை பெற்றுள்ள நெசவாளர் பி.தத்தா சிவா கூறியதாவது: தமிழகம், கேரளா மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த ஷோரூம்களில் இருந்து, இந்த சேலைகளுக்கு ஆர்டர்கள் வந்த வண்ணம் உள்ளன. ஒரு சேலை உருவாக்க, ஒரு மாதம் ஆகிறது. எங்கள் யூனிட்டை சேர்ந்த பத்து உறுப்பினர்கள் தொடர்ந்து பணியாற்றி, இந்த சேலையை முழுவதுமாக உருவாக்கி உள்ளனர். இதற்கு முன், எல்.இ.டி., கொண்டு "ஒளிரும்' சேலை உருவாக்கினோம். அதே போன்று, சந்தனக் கட்டை கொண்டும் முன்னர் பட்டுப்புடவை தயாரித்திருந்தோம். அவற்றிற்கு ஏராளமான ஆர்டர்கள் வந்தன. ஆனால், நேரமின்மை காரணமாக, எங்களால் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. இவ்வாறு தத்தா சிவா கூறினார்.

Sunday, February 7, 2010

“காபி கப்” ஜோதிடம்

புதுடில்லி : காபி கப்பை வைத்து எதிர்காலத்தை சொல்லும் புதிய ஜோதிட முறை ஜோதிட நிபுணர்களிடம் பரவி வருகிறது. இதன் மூலம் ஒருவர் காபி குடித்து முடித்த கப்பை வைத்து அவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என சொல்லப்படுகிறது. இம்முறை புதிதாக இருப்பதாகவும், ஜோதிடம் பற்றிய ஆர்வத்தை பெரிதும் அதிகரிப்பதாகவும் சர்வதேச புத்தக கண்காட்சியில் வைக்கப்பட்ட 5வது நட்சத்திர அரங்கில் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

astrological-coffee-mug-selection

காபி மட்டுமின்றி மெழுகுவர்த்தியைக் கொண்டும் ஜோதிடம் சொல்லப்படுகிறது. இம்முறையில் ஜோதிடம் பார்க்க விரும்புபவரால் வண்ண மெழுகுவர்த்தி ஏற்றப்படுகிறது. அது முழுவதும் உருகியவுடன் மெழுவர்த்தி பொடி செய்யப்படுகிறது. அந்த பொடியை பாத்திரத்தில் உள்ள நீரில் போட்டவுடன், அதில் ஒரு சில வடிவங்களை உருவாக்குகிறது. அந்த வடிவங்களைக் கொண்டு ஜோதிடர்கள், மெழுகுவர்த்தி ஏற்றிய நபரின்எதிர்காலத்தை சொல்கின்றனர். காபி கப்பில் ஜோதிடம் பார்ப்பது மற்றும் மெழுகுவர்த்தியில் ஜோதிடம் பார்ப்பது ஆகிய இரண்டிற்கும் சேர்த்து ரூ.500 வசூலிக்கப்படுகிறது.

Thursday, February 4, 2010

அமெரிக்க நகருக்கு மகாத்மா காந்தியின் பெயர்!

மெரிக்காவில் டெக்சாஸ் நகருக்கு அருகே தென்மேற்கு ஹூஸ்டனில் வரும் ஒரு பகுதியான ஹில்க்ராப்ட் என்ற இடத்துக்கு மகாத்மா காந்தியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் 141 ஆவது பிறந்த ஆண்டையொட்டி இந்த கெளரவம் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

mahatma-gandhi-district ஹில்கிராப்ட் பகுதிக்குள் நுழைந்தால் இந்தியாவிலுள்ள ஏதோ ஒரு நகருக்குள் நுழைந்தது போன்ற தோற்றம் தானாகவே ஏற்படும். எங்கு திரும்பினாலும் இந்தியத் தலைகளாகவே தெரியும். இங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருவதால் இந்தப் பகுதி ‘லிட்டில் இந்தியா’ என்று செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறது.

இங்கு வசிக்கும் இந்தியர்கள், தாங்கள் வசிக்கும் ஹில்கிராப்ட் பகுதிக்கு மகாத்மா காந்தியின் பெயரை வைக்குமாறு நகர நிர்வாகத்திடம் கேட்டு வந்தனர். அவர்களுடைய 7 வருட ஆசை தற்போது நிறைவேறியுள்ளது. கடந்த மாதம் ஹில்கிராப்ட் பகுதி மகாத்மா காந்தி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இதற்கான விழாவில், நகர மேயர் ஆன்னைஸ் பார்க்கர் இந்த பெயர் மாற்றத்தை அறிவித்தார். அப்போது ஹூஸ்டன் நகரத்தில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரி சஞ்சீவ் அரோரா உடன் இருந்தார்.

ஊரின் பெயரை மாற்ற வேண்டுமானால் குறிப்பிட்ட பகுதியில் உள்ள வர்த்தக கட்டட உரிமையாளர்களில் 75 சதவிகிதம் பேர் சம்மதம் தெரிவித்து கடிதம் அளிக்கவேண்டும். அப்போது தான் அந்த கோரிக்கையை நகர நிர்வாகம் பரிசீலிக்கும். ஹில்கிராப்ட் பகுதியை பெயர் மாற்றிக் கோரி 75 சதவிகிதம் பேர் சம்மதம் தெரிவித்ததால் இந்த பெயர் மாற்றம் நிகழந்துள்ளது.

ஹூம்ம்ம்ம்ம்ம்…. இங்கயோ

cartoon30a

LinkWithin

Related Posts with Thumbnails