Monday, December 20, 2010

சேவல் "கைது'!!!!

சேலம்: சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த வக்கீல் விஜயகுமார் இரு தினங்களுக்கு முன், தேவேந்திரபுரம் எக்ஸ்டென்ஸன் பகுதியில் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது, வழியில் நின்ற சேவல், வக்கீல் விஜயகுமாரை கொத்தியுள்ளது.பொதுவாக கொத்திய சேவலை "கல்'லால் அடித்து துரத்தி விடுவர். ஆனால், சாலையில் நடந்து சென்ற போது சேவல் கொத்தியது குறித்து, வக்கீல் விஜயகுமார் சேலம் செவ்வாய்பேட்டை போலீஸில் புகார் தெரிவித்தார்.செவ்வாய்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, வக்கீல் விஜயகுமாரை கொத்திய சேவலை தேடிப்பிடித்து "கைது' செய்து, ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். large_142299சேவல் கைது செய்யப்பட்டது பற்றி தகவல் அறிந்த சேவலின் உரிமையாளர் கமலா என்பவர் நீதிமன்றத்திற்கு வந்து 200 ரூபாய் அபராதம் செலுத்தி, சேவலை மீட்டுச் சென்றார்.சேவல் மட்டுமல்ல, சாலையில் செல்லும் போது, எந்த விலங்கு தொந்தரவு செய்தாலும், போலீசில் புகார் தெரிவிக்கலாம் என, சேவலை "கைது' செய்த போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது

Tuesday, November 16, 2010

அதிசய வீடியோ: 360 டிகிரியிலும் பார்க்கலாம்!!!

 

ஒரு பாடல் காட்சி ஓடிக்கொண்டு இருக்கும் போது,அந்தக் காட்சியை நம் விருப்பத்திற்கு ஏற்ப camera angle வைக்க முடிந்தால் எப்படி இருக்கும்,இந்த வீடியோவை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப 360 degree-ல் rotate செய்து பார்க்கலாம்,முயன்று பாருங்கள்.....

நன்றி: http://denimmohan.blogspot.com/

Sunday, November 14, 2010

திருமணமானதும் சீன ஜோடிகள் செய்யும் முதல் காரியம்?!!!

ஷாங்காய்: திருமணமானதும் சீன ஜோடிகள் செய்யும் முதல் காரியம் என்ன தெரியுமா... 'முதலிரவுதானே' என்று கேட்டு விடாதீர்கள்.

அதற்கு முன்பே, இந்த ஜோடிகள் நேராக ஸ்டுடியோக்களுக்குப் போகிறார்களாம்.  நிர்வாணமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை எடுத்துக் கொள்கிறார்களாம்.

ஏன் இந்த விபரீதம்?

chinese-naked-wedding-foto-thumb'வேறு ஒன்றுமில்லை... திருமணமான பிறகு கணவன் -மனைவி இருவரின் உடல் அமைப்புமே மாறிப்போகிறது. இளமையாக, வனப்பாக இருக்கும்போதே ஒரு நிர்வாணப் படம்  எடுத்துக் கொண்டால், பின்னாளி்ல் பார்த்து மகிழ உதவுமே.. இன்னொன்று அதில் இருக்கும் கிக்கே தனி...!'

- இதுதான் அந்த ஜோடிகள் தரும் விளக்கம்.

சீன நாட்டு சட்டப்படி, இப்படி நிர்வாண புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது தப்பில்லையாம். அவற்றை பொதுவில் பார்வைக்கு விடுவதுதான் பெரிய குற்றமாம்.

இதற்கிடையே, இந்தமாதிரி படம் எடுக்க எந்த ஸ்டுடியோவையும் இனி அனுமதிக்கக் கூடாது என ஷாங்காய் திருமண வர்த்தக சங்கம் அரசை வலியுறுத்தியுள்ளது. ஆனால் தடைவிதிக்கக் கூடாது என நிர்வாணப் படம் எடுத்துக் கொண்ட ஏராளமான திருமண ஜோடிகள் குரல் கொடுத்துள்ளனர்

Thursday, October 21, 2010

ராசியில்லாத ‘4’-ம் எண்ணுக்கு சீனா தடை

பீஜிங் : சீனாவில் வாகன ஓட்டிகள் "4' என்ற எண்ணை ராசியில்லாததாகக் கருதுவதால், அந்த எண் கொண்ட நம்பர் பிளேட்டை வழங்குவதை அந்நாட்டு அரசு நிறுத்தியுள்ளது.

4 கம்யூனிச நாடான சீனாவில், மூட நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஆனால், சமீப காலமாக அந்நாட்டு மக்கள் மூடப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். 10-10-10 என்ற எண்ணில் வரும் தேதியன்று திருமணம் செய்து கொள்வதை அரிய வாய்ப்பாகக் கருதுகின்றனர். இதே போல அங்குள்ள வாகன ஓட்டிகள், நம்பர் பிளேட்டில் 4 என்ற எண் இடம் பெறுவதை விரும்புவதில்லை. இந்த எண்ணை புறக்கணித்து வந்தனர். இதனால், எந்த நம்பர் பிளேட்டிலும் 4ம் எண் வராதவாறு பதிவு செய்யும்படி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறையை பீஜிங் போக்குவரத்து நிர்வாகம் உடனடியாகச் செயல்படுத்தியுள்ளது. இந்த நடைமுறையை பலரும் வரவேற்றுள்ளனர். இருப்பினும் 4ம் எண்ணை ராசி எண்ணாகக் கருதுவோரும் அங்கு இருக்கத்தான் செய்கின்றனர். இது குறித்து குய் வென்(24) என்பவர் குறிப்பிடுகையில், "நான் 4ம் தேதி பிறந்தேன்; எனவே, எனக்கு ராசியான எண் 4. இந்த எண்ணை நம்பர் பிளேட்டிலிருந்து நீக்கிய அரசின் நடைமுறை ஏற்கத்தக்கதல்ல' என்கிறார்.

‘பகுத்தறிவுள்ள’ கம்னியூச நாட்டிலும் மூடநம்பிக்கையா?

Wednesday, September 8, 2010

'கோடீஸ்வரர் ஒன்லி' பாங்க்

ஹைதராபாத்: கோடீஸ்வர கஸ்மர்களுக்கு மட்டுமே சேவை வழங்கும் சிறப்புக் imagesகிளையை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தொடங்கியுள்ளது.
இந்த சிறப்புக் கிளை முதலில் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது. பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள இந்தக் கிளையில் அக்கெளண்ட் தொடங்க குறைந்தபட்சம் ரூ. 1 கோடி செலுத்த வேண்டும். இந்தக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பே ரூ. 1 கோடியாக இருக்க வேண்டும். அதுவும் வங்கியிலிருந்து அழைப்பு வந்தால் மட்டுமே யாரும் கணக்குத் தொடங்க முடியும்.

'Kohinoor Banjara Premium Banking Centre' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கிளை 4,000 சதுர அடியில் மிக நவீன பைவ் ஸ்டார் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.


இங்கு கணக்கு வைக்கும் வாடிக்கையாளர்களுக்கு வரிகள், சார்ட்டர்ட் அக்கெளண்டன்ட் தொடர்பான உதவிகளையும் ஸ்டேட் பாங்க் வழங்கும். லாக்கர் வசதி, வீட்டுக்கே வந்து கார்களில் வங்கிக்கு அழைத்துச் செல்லும் வசதியும் உண்டு.வீடியோ கான்பரன்ஸ் வசதிகள், கம்பியில்லா இண்டர்நெட் வசதி, காபி பார்கள் என வங்கியில் ஏகபபட்ட வசதிகள்.

இந்தக் கிளைக்காக ரூ. 80 லட்சத்தை செலவிட்டுள்ளது வங்கி

Thursday, June 10, 2010

"ஒரே ஒரு மாணவர்' மட்டும் படிக்கும் பள்ளி

வடமதுரை:வடமதுரை அருகே, அரசு துவக்க பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டும் படிக்கிறார். அவரும், வெளியேற இருப்பதால் பள்ளி மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை பேரூராட்சியிலுள்ள சீத்தப்பட்டியில், பல ஆண்டுகளாக அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. உள்ளூர் மக்கள் வேலைவாய்ப்பு உட்பட காரணங்களால், அருகிலுள்ள நகர பகுதியில் குடியேறிவிட்டனர். விவசாயம் சார்ந்துள்ள மக்கள் மட்டுமே இங்கு தங்கியுள்ளனர்.கடந்த கல்வியாண்டு வரை, இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆறு மாணவர்கள் படித்தனர்.

large_16625

தற்போது ஐந்தாம் வகுப்பு முடித்தவர்கள், வேறு பள்ளிக்கு சென்றுவிட்டதால், இந்த கல்வியாண்டில் ஒரு மாணவர், ஒரு மாணவி மட்டும் இருந்தனர்.இதில் மாணவி இரண்டு நாட்களுக்கு முன்பு, வடமதுரை தனியார் பள்ளிக்கு மாறி சென்று விட்டார். எஞ்சியுள்ள தினேஷ்குமார் என்ற இரண்டாம் வகுப்பு மாணவர் மட்டுமே பள்ளியில் உள்ளார்.அவருக்கு மட்டும் தலைமையாசிரியர் தமிழரசி பாடம் சொல்லி தருகிறார்.ஓரிரு நாட்களில் கூடுதலாக மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்படவில்லை எனில், தினேஷ்குமாருக்கும் டி.சி., தர வேண்டுமென, அவரது பெற்றோர் கெடு விதித்துள்ளனர்.

கல்வி அதிகாரிகள் கூறியதாவது:இக்கிராமத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை எட்டு தான். ஒருவர் மட்டும் இங்கு படிக்கிறார். மற்றவர்கள் அருகிலுள்ள தென்னம்பட்டி, வடமதுரை தனியார் பள்ளிக்கு செல்கின்றனர். எவ்வளவோ எடுத்துக்கூறியும், உள்ளூர் அரசு பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுக்கின்றனர். இதனால் பள்ளியை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு கல்வி அதிகாரிகள் கூறினர்.

Friday, May 21, 2010

உலகின் முதல் எஸ்.எம்.எஸ்?!

ங்கும், எதிலும், எப்போதும் தாங்கள்தான் முந்தி இருக்க feminine_cells_html_289e151fவேண்டும் என்று நினைக்கும் அமெரிக்கர்கள், செல்போன்களை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன? உலக அளவில்  செல்போன்களைப் பயன்படுத்துவதிலும் அமெரிக்கர்கள்தான் நம்பர் ஒன்! சராசரியாக, ஒரு அமெரிக்கர் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட செல்போன்களைப் பயன்படுத்துகிறாராம். பரம ஏழையாக இருந்தாலும் அதிகபட்சம் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஒரு செல்போனை உபயோகிப்பது இல்லையாம்

அமெரிக்கர்கள். 2.3% பேர் மட்டுமே தங்களுடைய பழைய செல்போனை மறுசுழற்சி செய்ய உபயோகப்படுத்துவதாகவும் மீதி 7% பேர் அதைக் குப்பையில் வீசுவதாகவும் சமீபத்திய சர்வே சொல்கிறது. நீண்ட நாட்கள் பயன்பாட்டில் இருக்கும் செல்போனில் உள்ள கேட்மியம், லெட், பெரிலியம் போன்ற தனிமங்களால் நோய் எதிர்ப்புச் சக்தி, நரம்பு மண்டலம், மூளை, ஈரல், நுரையீரல் போன்றவை எளிதாகப் பாதிக்கப்படும். இதனால், அடிக்கடி செல்போன்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள் அமெரிக்காவில்.

நடப்பு நிலவரப்படி சுமார் 250 ஆயிரம் டன் எடை மதிக்கத்தக்க 500 மில்லியன் செல்போன்கள் குப்பைத் தொட்டிகளுக்குக் காத்திருக்கின்றன. இந்த வருடம் மட்டும், புதிதாக ஐந்து மில்லியன் செல்போன்கள் அங்கு பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன. இவை கிட்டத்தட்ட 75 சதவிகித உலக மக்கள் தொகைக்குச் சமம் என்று International Telecommunication Union சமீபத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.

நிற்க... 1973-ல் செல்போனை முதன்முதலில் உபயோகப்படுத்தியவர் டாக்டர் மார்ட்டின் கூப்பர். 'மேரி கிறிஸ்துமஸ்' என்பதுதான் உலகின் முதல் குறுஞ்செய்தி. அனுப்பியவர் நீல்டேப்வொர்த் (டிசம்பர் 1992). இன்று அமெரிக்காவில் மட்டுமே நாளன்றுக்கு 4.1 மில்லியன் எஸ்.எம்.எஸ் அனுப்புகிறார்கள். யு.எஸ் முழுக்க எஸ்.எம்.எஸ்தான்போல!

நன்றி: விகடன்

Thursday, May 13, 2010

உலகின் முதல் விளம்பரம்!!

ப்போது, எப்படி ஆரம்பித்தன விளம்பரங்கள்?

p102a

'மனிதன் தனக்குத் தேவையானதை மட்டும் உற்பத்தி செய்தபோது விளம்பரம் தேவைப்படவில்லை. தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்துதபோதுதான் விளம்பரம் பிறந்தது' என்கின்றனர் ஆய்வாளர்கள். முதன்முதலில் பாபிரஸ் இலைகள் மூலம் சுவரில் எழுதி விற்ப னையை மக்களிடம் விளம்பரப்படுத் தியவர்கள் எகிப்தியர் கள். பின்னர், வீடுகளுக்கு முன்சென்று கூவுவது, முச்சந்தியில் நின்று கத்துவது என்று விளம்பரம் படிப்படியாக வளர்ந்தது.

அப்போது படித்தவர் களின் எண்ணிக்கை சொற்பமாக இருந்ததால் வியாபாரிகள் தங்கள் பொருட்களை ஓவிய மாக வரைந்து விளம் பரங்கள் செய்தார்கள். அச்சு இயந்திரங்கள் தோன்றியபோது, விளம்பரங்கள் வேறு வடிவம் பெற்றன. 17-ம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் பத்திரிகைகளில் முதல் முறையாக மருந்து, மாத்திரைகள் பற்றிய விளம்பரங்கள் p103aஇடம்பிடித்தன.

ஜூன் 1836-ல் பிரெஞ்சுப் பத்திரிகையான La Presse முதன்  முதலாக விளம்பரங்களுக்குக் கட்டணம் வசூலித்தது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெரும்பாலான வீடுகளில் பெண்கள்தான் முடிவு எடுத்தார்கள். எனவே, பெண்களைக் குறி வைத்தே வீட்டு உபயோகப் பொருட்களை விளம்பரம் செய்தார்கள். 'அதையும் பெண் களைவைத்தே விளம்பரம் செய்யலாமே?' என்று நினைத்தபோதுதான் 'விளம்பர மாடல்கள்' என்றொரு புதிய இனம் உருவானது. ஒரு குளியல் சோப் விளம்பரம்தான் பெண் மாடலைவைத்து எடுக்கப்பட்ட முதல் விளம்பரம். 'நீங்கள் தொட விரும்பும் சருமம்'(The skin you love to touch) என்பதுதான் விளம்பர உலகில் எழுதப்பட்ட முதல் ஸ்லோகன்.

1920-களில் ரேடியோ புழக்கத்துக்கு வந்தவுடன் விளம்பர உலகம் விரிவு அடைந்தது. 1950-களில் டுமான்ட் டெலி விஷன் நெட்வொர்க் என்ற தொலைக் காட்சி நிலையம் முதல் முறையாக விளம் பரங்களை ஒளிபரப்பியது. 1960-களில் என்ன செய்தியோ, அதை மட்டுமே விளம்பரம் என்று சொல்லி வந்தனர். அதற்கடுத்துதான் 'கிரியேட்டிவிட்டி' முக்கிய அம்சம் ஆனது.

இன்று எல்லாமே விளம்பரமயம். தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்ளத் தெரிந்தவர்கள் மட்டுமே விலைபோகிறார்கள். இல்லை என்றால், செல்லாக் காசுதான்!

நன்றி: ஆனந்த விகடன்

Wednesday, May 12, 2010

எருமை விலை ரூ. 5 லட்சத்து 72 ஆயிரம்

ஆலமூரு(ஆந்திரா) :கறவை மாடுகளில் அதிக பால் தரும் போட்டியில், முதல் பரிசு பெற்ற எருமை, ஐந்து லட்சத்து 72 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.அரியானா மாநிலம் பரீதாபாத் அருகே, நீம்கா கிராமத்தில் விவசாயி ஒருவர் வைத்திருந்த எருமை மாடு ஒன்று, தினமும், 31 முதல் 32 லிட்டர் பால் தருவதாக செய்தி பரவியது.இதையடுத்து, ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ஆலமூருவை சேர்ந்த விவசாயி கோரா வீரபத்திரராவ், அரியானா சென்று எருமையின் உரிமையாளர் தர்மாபாயை சந்தித்து, எருமையை விலைக்கு வாங்க விரும்புவதாக கூறினார்.tblHumanTrust_70941889287

அவரிடம் தர்மாபாய் கூறுகையில், 'அந்த எருமையை வளர்ப்பதற்காக, அரியானா அரசு, ஊக்கத்தொகையாக ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கி என்னை கவுரவித்தது. எங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்பட்டது. இந்த எருமையின் படம், இன்டர்நெட் மற்றும் உள்ளூர் பத்திரிகைகளில் செய்தியாக வெளியானது' என்றார். இந்த எருமை மீது ஆர்வம் கொண்ட ஆந்திர விவசாயி, வீரபத்திரராவ் ஐந்து லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் கொடுத்து, எருமையை விலைக்கு வாங்கினார். இதை ஆந்திராவுக்கு ஏற்றிவர லாரி வாடகையாக 22 ஆயிரம் ரூபாய் செலவு செய்தார்.தற்போது ஏழு மாத சினையாகி உள்ள எருமை, இப்போதும், தினமும் 15 லிட்டர் பால் தருவதாகவும் அவர் கூறினார்

Saturday, April 17, 2010

பார்வை இல்லாதவர்களுக்கு 'அந்த' புத்தகம்

லண்டன்:கண் பார்வை இல்லாதவர்களுக்கான செக்ஸ் பத்திரிகை விற்பனைக்கு வந்துள்ளது.பிரபல செக்ஸ் பத்திரிகை, 'பிளே பாய்,' கண்பார்வை இல்லாதவர்களுக்காக சில ஆண்டுகளுக்கு முன், 'பிரெய்லி' எழுத்துக்களுடன் கூடிய, ஆபாச பத்திரிகையை வெளியிட்டது. 

tacticle_mind_17-300x225இந்த பத்திரிகையில் எழுத்துக்கள் மட்டும் தான் இருக்கும்; படங்கள் கிடையாது. ஆனால், தற்போது கனடா நாட்டைச் சேர்ந்த லிசா மர்பி என்ற பெண், கண்பார்வை இல்லாதவர்களுக்கான ஆபாச படங்களுடன் கூடிய பத்திரிகையை துவக்கியுள்ளார். 100414150726_male_466

இந்த புத்தகத்தில் ஆபாச படங்கள் சற்று மேடாக அச்சிடப்பட்டிருக்கும். கண்பார்வை இல்லாதவர்கள், புத்தகத்தின் பக்கத்தை தடவி பார்த்து ஆபாசத்தின் அளவை தெரிந்து கொள்வர். இந்த புத்தகத்தில், 17 கவர்ச்சி படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. விலை 10 ஆயிரம் ரூபாய். பிரிட்டனில் இந்த புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.பார்வை இல்லாதவர்களுக்கு செக்ஸ் பட புத்தகங்கள் இல்லை என்ற குறையை போக்கவே, இந்த பத்திரிகையை ஆரம்பித்துள்ளதாக, லிசா தெரிவித்துள்ளார்.

Wednesday, March 17, 2010

நான்காம் வகுப்பு தேர்வு 70 வயதில் எழுதினார்

இரிட்டி :வயது எழுபதானாலும், கண் பார்வை மங்கினாலும் பரவாயில்லை, படித்தே தீருவது என்ற லட்சியத்துடன், நான்காம் வகுப்பு தேர்வு எழுதி அசத்தினார் குஞ்ஞிப் பாத்தூம்மா.

tblgeneralnews_35481989384 அவருடன் தேர்வெழுத அவரது மகள், இரு பேத்திகள் உட்பட, 48 பேர் உடன் இருந்தனர்.கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் இரிட்டி ஊராட்சி உளியில் ஜி.யு.பி., பள்ளியில், சிறு வயதில் கல்வி கற்காதவர்களுக்காக அரசு அறிவித்துள்ள, துல்யதா பரிக்ஷ� திட்டத்தின் கீழ் தேர்வு நடத்தப்பட்டது.  சிறு வயதில் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்று, தற்போது எழுபது வயதை கடந்து நிற்கும் குஞ்ஞிப் பாத்தூம்மாவும் தேர்வு எழுதச் சென்றார்.அவர், நான்காம் வகுப்பு தேர்வெழுதினார்.  கண் பார்வை சற்று மங்கியிருந்தாலும் சளைக்காமல் ஆர்வத்துடன் தேர்வெழுதினார். அவருடன், அவரது 40 வயது மகள் சுகாராவும், பேத்தி ஷாஜிதா மற்றும் நசீமாவும் தேர்வெழுதினர்.அவர்களுடன், நடுத்தர வயதை கடந்த 48 பேரும் தேர்வெழுதினர். அந்த ஊராட்சியில் உள்ள பல பள்ளிகளில் 14ம் தேதி நடந்த இத்தேர்வில் மட்டும் 856 பேர் தேர்வெழுதினர்.

Monday, March 1, 2010

இந்தோனேசியத் தீவில் இந்துக் கோவில்

யோக்யகர்த்தா : இந்தோனேசியத் தீவுகளில் ஒன்றான ஜாவாவில், 1,100 ஆண்டுகள் பழமையான இந்துக் கோவில், அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில், முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகளில் ஒன்றாக  தற்போது இந்தோனேசியா இருக்கிறது. ஆனால், அதன் தீவுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் புத்த மதமும், இந்து மதமும் இருந்தன என்பது வரலாறு.

18indo_CA0-articleLarge

அதற்குச் சான்றாக இந்தோனேசியாவின் பல இடங்களில் இரு மதங்களின் கோவில்கள் இன்றும் இருக்கின்றன. சில அகழ்வாய்வில் வெளிப்பட்டிருக்கின்றன.
ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரன், மலேசியாவிலுள்ள கடாரத்தை வென்று, "கடாரம் கொண்டான்' என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டான்; மேலும் அவன் முன்னேறி, இந்தோனேசியாவிலுள்ள சில தீவுகளையும் வென்றான் என்பது வரலாறு. புத்த மதம் வந்து 300 ஆண்டுகளுக்குப் பின், கி.பி., 5ம் நூற்றாண்டில் இந்து மதம் இந்தோனேசியாவில் பரவியது. பின், வந்த இந்தோனேசிய மன்னர்கள் இருமதங்களையும் தழுவியவர்களாகவே இருந்திருக்கின்றனர். கடைசியாக கி.பி., 15ம் நூற்றாண்டில் இஸ்லாம் வந்தது. தற்போது இந்தோனேசியாவில் 90 சதவீதம் முஸ்லிம்களும், 10 சதவீதம் பவுத்தர்கள், இந்துக்களும் வாழ்கின்றனர்.

ஜாவாவில், யோக்யகர்த்தா என்ற இடத்தில் "இந்தோனேசிய இஸ்லாமியப் பல்கலைக் கழகம்' இருக்கிறது. இந்த வளாகத்தில் ஒரு பிரம்மாண்டமான மசூதியும் உள்ளது. இதன் அருகில் உள்ள இடத்தில் நூலகம் அமைப்பதற்காக, 2009 டிசம்பர் மாதம் வேலைகள் துவங்கின. அஸ்திவாரத்துக்காக மண் தோண்டும் போது, கல் சுவர் தென்பட்டது. அரசு தொல்பொருள் துறையினர் இதைக் கேள்விப்பட்டு நேரில் வந்து களப்பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 35 நாட்களாக நடந்த அகழ்வாய்வில், 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இரண்டு கோவில்கள் வெளிப் பட்டன. முதல் கோவில் ஆறு மீட்டர் நீள உயரத்துக்கு அமைந்துள்ளது.

இதில் ஒரு விநாயகர் சிலை, ஒரு லிங்கம், ஒரு யோனி பீடம் (இது சக்தி வழிபாட்டைக் குறிப்பது) ஆகியவை இருந்தன. இந்தக் கோவிலின் அருகில் அமைந் துள்ள,  ஆறு மீட்டர் நீளமும் நான்கு மீட்டர் உயரமும் கொண்ட மற்றொரு கோவிலில் ஒரு லிங்கமும், யோனி பீடமும், இரண்டு பலி பீடங்களும், இரண்டு நந்திகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் அனைத்தும் தொல் பொருள் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளன. கோவிலைச் சுற்றி வேலி போடப்பட்டு, பாதுகாப்பும் பலப்படுத்தப் பட்டுள்ளது. "இக்கோவில் எல்லாரும் பார்க் கும்படியாக கண்காட் சிக்கு அமைக்கப் படும்' என்று பல்கலையின் அதிகாரியான சுவர்சோனோ முகமது தெரிவித்தார்.

இந்தக் கோவிலின் அருகில் ஒரு நதி ஓடுகிறது. கோவிலுக்கு வடக்கில், 12 கி.மீ., தூரத்தில் மெரபி என்ற எரிமலை இருக் கிறது.  இந்தக் கோவில் கட்டப்பட்ட 100 ஆண்டுகளுக்குள் இந்த எரிமலையிலிருந்து வெளிப்பட்ட தீக்குழம்பு, அருகிலுள்ள நதியின் வழியாக வந்து இந்தக் கோவிலை மூடியிருக்கலாம்;  அதனால் தான் இந்தக்கோவில் பெருமளவில் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருக்கிறது என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தொல்பொருள் ஆய்வாளரான இன்டுங் பஞ்ச புத்ரா என்பவர், "இந்தக் கோவிலில் கிடைத்துள்ள விவரங்கள் இதுவரை நடந்த அகழாய்வுகளில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது' என்கிறார்.

"கி.பி., 15ம் நூற்றாண்டில் இங்கு அடியெடுத்து வைத்த இஸ்லாம், இங்கு ஏற்கனவே இருந்த புத்த, இந்து மதக் கலாசாரங்களை உள்வாங்கித்தான் வளர்ந்தது' என்று கதீஜா மாதா பல்கலைக் கழகத்தின் தொல்பொருள் துறைப் பேராசிரியரும் தெற்காசியாவில் இந்துமத ஆய்வில் சிறந்த நிபுணருமான திம்புல் ஹர்யோனா தெரிவித்தார். மேலும் அவர், "இந்தோனேசியா மூன்று மதங்களும் கலந்த கலவையாக இன்று வரை இருக் கிறது. அகழாய்வில் வெளிப்பட்ட சிலகோவில்கள், பாதி இந்துக் கோவில் அமைப்பிலும், பாதி புத்தக் கோவில் அமைப்பிலும் இருக்கின்றன.

சில நூற்றாண்டுப் பழமையான மசூதிகளின் கூரைகள், இந்துக் கோவில் களைப் போலவே இருக்கின்றன. அதேபோல் அவை மெக்காவை நோக்கி அமைக்கப்படாமல் இந்துக் கோவில்களைப் போலவே கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமைக்கப் பட்டுள்ளன. இந்தோனேசியக் கலைகள், முஸ்லிம்களின் வாழ்க்கை முறை, உணவு, உடை,  சடங்குகள் ஆகியவை முந்தைய இந்து, புத்தக் கலாசாரத்தின் அடையாளங்களைக் கொண்டிருக்கின்றன. இந்து மதம் 1,000 ஆண்டுகளாக இங்கு இருந்துள்ளது. அதன் தாக்கமும் ஆழமாகத் தான் இருக்கும்' என்கிறார்.

Friday, February 26, 2010

கதவில்லா வீடு : திருட்டில்லா கிராமம்

ராமநாதபுரம்: பூட்டிவிட்டு செல்லும் போதே, கதவை உடைத்து திருடும் இக்காலத்தில்,  கமுதி அருகே உள்ள மீட்டான்குளம் nmalarnews_48008364440கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு கதவுகளே இல்லை என்பது ஆச்சரியம் தானே. இக்கிராமத்தில் உள்ள அனைத்தும் கூரை வீடுகள். ஒரு வீட்டில் கூட கதவுகள் இல்லை என்றாலும், இதுவரை இங்கு திருட்டு நடந்ததே இல்லை என்பது தான் உண்மை.

நூறு ஆண்டுகளாக இதே நிலைதான் நீடிக்கிறது. வீடுகளில் ஆள் இல்லாத போதும், பல மாதங்களாக வீடுகள் திறந்தே கிடக்கின்றன. வீடுகளில் வைக்கப்படும் பணம், நகை போன்றவை இதுவரை திருடு போனதில்லை என்கின்றனர் இக்கிராமத்தினர்.

"இந்த அதிசயத்திற்கு ஊர் காவல் தெய்வம் முனியப்பசாமி தான் காரணம். யாராவது திருடினால், ஒரு வார காலத்திற்குள் கிராம காவல் தெய்வம் முனியப்பசாமியே கண்டு பிடித்து, சம்பந்தப்பட்டவருக்கு தண்டனை வழங்கும் என்ற நம்பிக்கை இருப்பதால், யாரும் திருடுவதில்லை. வெளியூர்காரர்களும் இங்கு வந்து திருட பயப்படுகின்றனர்' என்கின்றனர் மீட்டான்குளம் மக்கள்.

Thursday, February 25, 2010

ஆனந்த விகடனில் “அழியாச் சுடர்கள்”

vikatan

untitled (1)_thumb[7]

vikatan-mar-9-2008 இந்த வார ஆனந்த விகடன் வரவேற்பறையில் நமது சக தளம் ”அழியாச் சுடர்கள்”  இடம் பெற்றிருக்கிறது. போன வாரம் ”வச்சுடான்யா ஆப்பு” இடம்பெற்றது. தொடர்ந்த இருவாரங்களில் நமது இரு தளங்களும் விகடன் வரவேற்பறையில் இடம் பெற்றது மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. நன்றி நண்பர்களே.

நன்றி: விகடன் வரவேற்பறை

படம் உதவி : தமிழ் மகன் S.Senthilathiban

மனநோயாளி வரைந்த ஓவியம்!!!

tblHumanTrust_10370600224

ராமநாதபுரம் : இடிந்த சுவரில் கையில் கிடைத்தவற்றை கொண்டு மனநோயாளி ஒருவர் வரைந்த தத்ரூபமான ஓவியத்தை காண, ஏராளமானோர் குவிந்ததால் போக் குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத் தில் புண்ணிய தலங்களுக்கு நிகராக மனநோயாளிகளின் எண்ணிக்கைக் கும் பஞ்சமிருக்காது. இது போன்ற நோயாளிகளுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு "ஸ்பெஷல்' தன்மை இருக்கும். அந்த வகையில் ராமநாதபுரத்தில் சிறிது நாட்களாக சுற்றித்திரியும்,தஞ்சாவூரை சேர்ந்த சதானந்தம் என்ற மனநோயாளியின் செயல், நேற்று பலரையும் சிந்திக்க வைத்தது. ராமநாதபுரம் தலைமை மருத்துவமனை அருகே உள்ள இடிக்கப் பட்ட கட்டடத்தில் சில நாட்களாக முடங்கிய,

இவரின் நடவடிக்கைகள் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. "என்ன தான் உள்ளே நடக்கிறது, என, பார்க்க அந்த இடிந்த கட்டடத்தில் உள்ளே நுழைந்தவர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி மட்டும் தான். ""இயற்கை எழில் கொஞ்சும் ஒரு பகுதியின் வழித்தடத்தில் சிலர் நடந்து செல்வதை போல'' தத்ரூபமான ஓவியம் ஒன்று அந்த சுவரில் வரையப்பட்டிருந்தது. கையில் கிடைத்த செங்கல், செடிகளின் இலை, குச்சிகள், கட்டைகள் போன்றவற்றை கொண்டு அந்த ஓவியத்தை சதானந்தம் வரைந்ததை கண்டு அங்கு கூடியவர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். சிறிது நேரத்தில் இந்த தகவல் காட்டு தீ போல பரவ,பலரும் ஆர்வமுடன் வந்து அந்த ஓவியத்தை பார்த்து ரசித்து, போட்டோ எடுத்து சென்றனர். இதை பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் ஓவியத்தல் மறுதிசையில் அமர்ந்திருந்த சதானந்தத்திடம், ""சார், வாங்க உங்களுக்கு சாப்பாடு வேணுமா? என்ன வேணும் கேளுங்க,'' என, ஒருவர் கேட்டார்.

""இன்று நீ வாங்கி தருவ, நாளைக்கு நீ வாங்கி தருவியா? , போ, போ, போய் வேலையை பாருங்க...,'' என, தனக்கே உரிய பாணியில் தத்துவம் கசிந்தார் சதானந்தம். "திறமைக்கு "மனம்' ஒரு பொருட்டல்ல,' என, பலரும் முணுமுணுத்தபடி களைந்தனர்

Wednesday, February 24, 2010

ஆபாசப்படம் ”பார்த்து” ரசித்தவர் கைது

மேட்டூர் : பத்து ஆண்டாக, இரவில் ஆபாசப்படம் பார்த்து ரசித்து வந்த ஓவியர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து, 750 ஆபாசப்பட, "சிடி, டிவிடி'க்கள், பறிமுதல் செய்யப்பட்டன.

tblSambavamnews_21288698912 சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகாவைச் சேர்ந்தவர், சந்திரசேகர்(45); ஓவியர். இவருக்கு மனைவி, எட்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளனர். சந்திரசேகர், லாரி, கார், ஆட்டோ போன்றவற்றில், பெயர் எழுதுதல், ஓவியம் வரைதல் போன்ற வேலைகளை செய்கிறார். இவர், கொளத்தூர் முனியப்பன் கோவில் அருகே, தனியாக ஒரு அறையை வாடகைக்கு எடுத்துள்ளார். அந்த அறையில், "டிவிடி' ப்ளேயர், கலர் "டிவி' உள்ளது. இரவில் சந்திரசேகர் அந்த அறைக்கு வந்து விடுவார். அங்கு, இரவு முதல் காலை வரை "டிவி' ஓடிக் கொண்டே இருக்கும். பல ஆண்டுகளாக இது தொடர்ந்தது.

இது பற்றிய சந்தேகத்தின் பேரில், நேற்று போலீசார், சந்திரசேகர் அறைக்கு சென்றனர். அப்போது, "டிவி'யில் ஆபாசப் படம் ஓடிக் கொண்டிருந்தது. இதையடுத்து, சந்திரசேகரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், 1990ம் ஆண்டு முதல் ஆபாசப் படத்தை தீவிரமாக பார்க்க துவங்கியதும், அதற்காக ஒரு அறை வாடகைக்கு எடுத்து, "டிவி' மற்றும் ப்ளேயர் வைத்து, அதில் ஆபாசப் படம் போட்டு தனிமையில் ரசித்ததும் தெரிந்தது. அவர், 2000ம் ஆண்டில் இருந்து வாங்கிய ஆபாச, "சிடி, டிவிடி'க்களை பொக்கிஷமாக சேமித்து வைக்க துவங்கியுள்ளார். அவரிடம் இருந்து 750 ஆபாசப் பட, "சிடி, டிவிடி'க்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆபாசப் பட, "டிவிடி'க்கள் சேதமடைந்து விடக்கூடாது என்பதற்காக, அதை, "ரிக்கார்டு' செய்ய தனியாக ஒரு, "ப்ளேயரை'யும் சந்திரசேகர் வைத்திருந்தார்.

இப்படி போனா நாட்ல 90 சதவீதம் பேர் உள்ளல்ல இருக்கணும்.  விக்றவங்கள பிடிங்கன்னா, பார்கறவன பிடிக்கிறாங்க. என்ன ஒரு அநியாயம்.

Monday, February 22, 2010

பா(ப)ட்டுப் புடவை

ஐதராபாத் : "ஸ்வரம்மதூரி' எனும் பெயரில் புதிதாக 67888_2_468அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாட்டுப்  பாடும் பட்டு புடவைகள் தென் மாநிலங்களில் பிரபலமடைந்து வருகின்றன. இதுகுறித்து, ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், தர்மாவரம் பகுதியை சேர்ந்த உடை வடிவமைப்பாளரான பி.மோகன் என்பவர் கூறுகையில், "பாட்டுப் பாடும் பட்டுப் புடவையில் முந்தானையில், ஐபாட் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அதில், பதியப்பட்டுள்ள 200 பாடல்கள், 4 மணி நேரங்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகும். இதற்காக, இந்த வகை பட்டுப்புடவையில், 2 ஜி.பி., மெமரி சிப் பயன்படுத்தப்படுகிறது. இரண்டு மாதங்கள் கடினமாக உழைத்து, இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது' என்றார்.

இந்த சேலையின் உரிமையை பெற்றுள்ள நெசவாளர் பி.தத்தா சிவா கூறியதாவது: தமிழகம், கேரளா மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த ஷோரூம்களில் இருந்து, இந்த சேலைகளுக்கு ஆர்டர்கள் வந்த வண்ணம் உள்ளன. ஒரு சேலை உருவாக்க, ஒரு மாதம் ஆகிறது. எங்கள் யூனிட்டை சேர்ந்த பத்து உறுப்பினர்கள் தொடர்ந்து பணியாற்றி, இந்த சேலையை முழுவதுமாக உருவாக்கி உள்ளனர். இதற்கு முன், எல்.இ.டி., கொண்டு "ஒளிரும்' சேலை உருவாக்கினோம். அதே போன்று, சந்தனக் கட்டை கொண்டும் முன்னர் பட்டுப்புடவை தயாரித்திருந்தோம். அவற்றிற்கு ஏராளமான ஆர்டர்கள் வந்தன. ஆனால், நேரமின்மை காரணமாக, எங்களால் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. இவ்வாறு தத்தா சிவா கூறினார்.

Sunday, February 7, 2010

“காபி கப்” ஜோதிடம்

புதுடில்லி : காபி கப்பை வைத்து எதிர்காலத்தை சொல்லும் புதிய ஜோதிட முறை ஜோதிட நிபுணர்களிடம் பரவி வருகிறது. இதன் மூலம் ஒருவர் காபி குடித்து முடித்த கப்பை வைத்து அவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என சொல்லப்படுகிறது. இம்முறை புதிதாக இருப்பதாகவும், ஜோதிடம் பற்றிய ஆர்வத்தை பெரிதும் அதிகரிப்பதாகவும் சர்வதேச புத்தக கண்காட்சியில் வைக்கப்பட்ட 5வது நட்சத்திர அரங்கில் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

astrological-coffee-mug-selection

காபி மட்டுமின்றி மெழுகுவர்த்தியைக் கொண்டும் ஜோதிடம் சொல்லப்படுகிறது. இம்முறையில் ஜோதிடம் பார்க்க விரும்புபவரால் வண்ண மெழுகுவர்த்தி ஏற்றப்படுகிறது. அது முழுவதும் உருகியவுடன் மெழுவர்த்தி பொடி செய்யப்படுகிறது. அந்த பொடியை பாத்திரத்தில் உள்ள நீரில் போட்டவுடன், அதில் ஒரு சில வடிவங்களை உருவாக்குகிறது. அந்த வடிவங்களைக் கொண்டு ஜோதிடர்கள், மெழுகுவர்த்தி ஏற்றிய நபரின்எதிர்காலத்தை சொல்கின்றனர். காபி கப்பில் ஜோதிடம் பார்ப்பது மற்றும் மெழுகுவர்த்தியில் ஜோதிடம் பார்ப்பது ஆகிய இரண்டிற்கும் சேர்த்து ரூ.500 வசூலிக்கப்படுகிறது.

Thursday, February 4, 2010

அமெரிக்க நகருக்கு மகாத்மா காந்தியின் பெயர்!

மெரிக்காவில் டெக்சாஸ் நகருக்கு அருகே தென்மேற்கு ஹூஸ்டனில் வரும் ஒரு பகுதியான ஹில்க்ராப்ட் என்ற இடத்துக்கு மகாத்மா காந்தியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் 141 ஆவது பிறந்த ஆண்டையொட்டி இந்த கெளரவம் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

mahatma-gandhi-district ஹில்கிராப்ட் பகுதிக்குள் நுழைந்தால் இந்தியாவிலுள்ள ஏதோ ஒரு நகருக்குள் நுழைந்தது போன்ற தோற்றம் தானாகவே ஏற்படும். எங்கு திரும்பினாலும் இந்தியத் தலைகளாகவே தெரியும். இங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருவதால் இந்தப் பகுதி ‘லிட்டில் இந்தியா’ என்று செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறது.

இங்கு வசிக்கும் இந்தியர்கள், தாங்கள் வசிக்கும் ஹில்கிராப்ட் பகுதிக்கு மகாத்மா காந்தியின் பெயரை வைக்குமாறு நகர நிர்வாகத்திடம் கேட்டு வந்தனர். அவர்களுடைய 7 வருட ஆசை தற்போது நிறைவேறியுள்ளது. கடந்த மாதம் ஹில்கிராப்ட் பகுதி மகாத்மா காந்தி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இதற்கான விழாவில், நகர மேயர் ஆன்னைஸ் பார்க்கர் இந்த பெயர் மாற்றத்தை அறிவித்தார். அப்போது ஹூஸ்டன் நகரத்தில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரி சஞ்சீவ் அரோரா உடன் இருந்தார்.

ஊரின் பெயரை மாற்ற வேண்டுமானால் குறிப்பிட்ட பகுதியில் உள்ள வர்த்தக கட்டட உரிமையாளர்களில் 75 சதவிகிதம் பேர் சம்மதம் தெரிவித்து கடிதம் அளிக்கவேண்டும். அப்போது தான் அந்த கோரிக்கையை நகர நிர்வாகம் பரிசீலிக்கும். ஹில்கிராப்ட் பகுதியை பெயர் மாற்றிக் கோரி 75 சதவிகிதம் பேர் சம்மதம் தெரிவித்ததால் இந்த பெயர் மாற்றம் நிகழந்துள்ளது.

ஹூம்ம்ம்ம்ம்ம்…. இங்கயோ

cartoon30a

Thursday, January 28, 2010

No Pants Day – இப்படியும் ஒரு ‘தினம்’

no-pants-day

து எதற்குதான் ஒரு தினத்தை அனுஷ்டிப்பது என்ற விவஸ்தை இல்லாமல் அதை  அனுஷ்டிப்பவர்கள் மேற்கத்தைய நாட்டைச் சேர்ந்தவர்கள். கடந்த ஞாயிறு அன்று அமெரிக்கா, இங்கிலாந்து  மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கால்சராய் அணியா தினம் (No Pants Day) அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த கால்சராய் அணியா தினக் கொண்டாட்டம் 2002இல் நியூயார்க் நகரில் தொடங்கி வைக்கப்பட்டது. நகைச்சுவை கலாட்டா குழுவான Improv Everywhere தான் இந்த தினத்தை  தொடங்கி, தொடர்ந்து நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் ‘கால்சராய் அணியா தினம்’ கொண்டாடி வருபவர்கள் அன்றைய தினத்தில் இரயில், பேருந்து, கடைத்தெரு, பொழுதுபோக்கும் இடங்கள் என எதையும் விட்டுவைக்காமல், மக்களோடு மக்களாக  சென்று வருவார்கள். பார்ப்பதற்கு அசூயையாக இருந்தாலும் சிரிப்பும் கொப்பளித்துக்கொண்டு வரும்.

no-pants-day1

உலகம் முழுக்க இந்த கால்சராய் அணியா தினம் சரசரவென வளர்ந்து வருவதாகத் தகவல். இங்கிலாந்தில் இந்த வருடம்தான் இதை தொடங்கி வைத்திருக்கிறார்கள். முதல் முறைதான் என்றாலும் அங்கு நிலவும் கடுங்குளிரிலும், 30 பேர் வரை கால்சராய் எதுவும் அணியாமல் லண்டன்  தெருக்களில் நடமாடினார்கள்.

nopants

நியூயார்க் நகரில் கூடிய சுமார் 3000 பேர் கால் சராய் இல்லாமல் நகரம் முழுக்க நகர்ந்து தங்கள் கொள்கையை பொதுமக்களிடையே பரப்பினர். அப்படி என்ன கொள்கை என்கிறீர்களா? இதுவும் ஒரு சுதந்திரம் தான். ஆண்டு முழுக்க போட்டு போட்டு அலுத்துப்போக வைக்கும் பேண்ட் இல்லாமல் ஒருநாள் இருப்போமே குறிப்பாக மக்களுக்கு இடையே என்பதுதான் கொள்கை. அதுவும் சரிதான்… நமக்கே கூட அலுப்புத் தட்டுவதில்லை? அவர்கள் தங்கள் மனத்தில் இருப்பதை வெளியில் கொட்டி விடுகிறார்கள். நாமோ குப்பையாக வைத்திருக்கிறோம்.

விடியோ:

அடுத்த ஜென்மத்திலாவது…

Tuesday, January 26, 2010

விபசார அழகிகளை திருமணம் செய்ய 1,400 இளைஞர்கள் சபதம்

hop9

விபசார தொழிலில் தள்ளப்பட்டு, அதில் இருந்து வெளியேற விரும்பும் அழகிகளை திருமணம் செய்து கொள்ளப் போவதாக 1,400 இளைஞர்கள் சபதம் எடுத்துக் கொண்டனர். இவர்கள் தேரா சச்சா சவுதா என்ற சீக்கிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். பஞ்சாப் மாநிலம் சிர்சாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர்கள் இதுதொடர்பாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

dera_leadernew இன்று நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில், முதல்கட்டமாக 3 இளைஞர்கள் மட்டும் விபசார அழகிகளை திருமணம் செய்து கொள்கின்றனர். மற்றவர்கள், ஓராண்டுக்குள், கொல்கத்தா மற்றும் டெல்லியைச் சேர்ந்த அழகிகளை திருமணம் செய்து கொள்ளுவார்கள்.

எய்ட்ஸ் பரவலை தடுக்கும் வகையிலும், அழகிகள் கவுரவமான வாழ்க்கை நடத்த உதவும் வகையிலும், இந்த இளைஞர்கள் இத்தகைய புரட்சிகர முடிவை எடுத்துள்ளனர். அழகிகளையும், அவர்களது குழந்தைகளையும் சட்டப்படி தத்து எடுக்கவும் சில குடும்பங்கள் முன்வந்துள்ளன.

LinkWithin

Related Posts with Thumbnails