Tuesday, December 29, 2009

கன்றுக்குட்டி நெற்றியில் சிலுவை

 

holy-cow

மெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது கனக்டிகட் நகரம். இங்குள்ள உள்ள சின்ன ஊர் ஸ்டெர்லிங். இங்குள்ள ‘பட்டர் கப்’ என்ற மாட்டுப்பண்ணையில் கடந்த வாரம் கன்றுக்குட்டி ஒன்று பிறந்தது. இதன் உடல் முழுக்க காப்பி நிறத்தோலால் சூழப்பட்டிருக்க, நெற்றிப்பொட்டில் மட்டும் கிறிஸ்துவின் சின்னமான க்ராஸ் வடிவில் வெண்மையான தோல் அமைந்திருக்கிறது. இதைப்  பார்த்து ஆச்சரியமடைந்த பண்ணை முதலாளி ப்ராடு டேவிஸ், ‘இது புனிதமான கன்றுக்குட்டி. இதன் மூலம் ஆண்டவன் ஏதோ தகவலை பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்’ என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்.  அதிசயத் செய்திகளைத் தேடி அலையும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி சேனல்களும் ‘பட்டர் கப்’  மாட்டுப்பண்ணையில் குவிந்து, மோசஸ் என்ற இந்த அதிசயக் கன்றுக்குட்டி மீது தொடர்ந்து கேமிரா ப்ளாஷை அடித்து வருகின்றன.

ஆயிரம் பெரியார் வந்தாலும்…..

2 comments:

  1. நாங்க ஃபிஜியில் இருந்தப்ப பக்கத்துகிராமத்துலே ஒரு கருப்புக் கண்ணுக்குட்டிக்கு நெற்றியில் ஹார்ட் ஷேப்லே வெள்ளையா இருந்துச்சு. எப்பவும் அதை ரோட்டோரம் வீட்டுவாசலில் கட்டி வச்சுருப்பாங்க. தினம் மாலை ரைடு போகும்போது பார்ப்போம். நாங்க அதுக்கு நாங்க வச்ச பேரு லவ் மாடு பாப்பா.

    கூடுதல் தகவல்: அப்போ அந்த நாட்டுலே டிவி வரலை:-))))

    ReplyDelete
  2. உங்கள் தகவல் சுவாரசியமாய் இருந்தது துளசி கோபால். நன்றி.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails