Wednesday, December 16, 2009

காசேதான் கடவுளடா… (உண்மையாகவே)

சென்னிமலை : பக்தர் கனவில் தோன்றி ஆண்டவன் உத்தரவிட்டதன் படி, சிவன்மலை முருகன் கோவிலில், 500 ரூபாய் நோட்டை வைத்து பூஜை நடக்கிறது. இதனால், நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்குமென பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

tblSambavamnews_21900576354 உலகில் எந்த முருகன் கோவிலிலும் இல்லாத சிறப்பு, திருப்பூர் மாவட்டம் சிவன்மலை முருகன் கோவிலுக்கு உண்டு. இங்கு மூலவராக வீற்றிருக்கும் சுவாமி சுப்பிரமணியர், பக்தர்களின் கனவில் தோன்றி கூறும் பொருட்களை, கோவிலில் உள்ள கண்ணாடி பெட்டியில் வைத்து, அதற்கு தினமும் சிறப்பு பூஜை நடத்துவது தொன்றுதொட்டு நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டம் வெள்ளோடு மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது கனவில் தோன்றிய முருகப் பெருமான், "500 ரூபாய் பணத்தை வைத்து பூஜிக்குமாறு' உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி கிருஷ்ணமூர்த்தி, திருக்கோவில் நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தார். முறைப்படி மூலவர் சன்னிதியில் பூ மூலம் உத்தரவு கேட்கப்பட்டது.

பூ உத்தரவு கிடைத்ததால், கடந்த வெள்ளிக்கிழமை முதல், 500 ரூபாய் பணத்தை, கோவிலில் உள்ள கண்ணாடி பெட்டிக்குள் வைத்து தினமும் பூஜை நடக்கிறது. இதன்மூலம் நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என பக்தர்கள் கூறுகின்றனர். கடைசியாக இக்கோவிலில் வெற்றிலை, பாக்கு வைத்து பூஜை நடந்தது. இதனால், நாடெங்கும் சுபகாரியங்கள் அதிகம் நடந்தன. அதற்கு முன் விபூதி வைத்து பூஜை நடந்தது. அப்போது, நாட்டில் அதிகப்படியான கோவில்களில் குடமுழுக்கு நடந்தது; மக்களிடம் ஆன்மிக ஈடுபாடும் அதிகரித்தது. அதற்கு முன், மண்ணை வைத்து பூஜை நடந்த போது, ரியல் எஸ்டேட் தொழில் செழித்து, பூமி விலை பல மடங்கு அதிகரித்தது. அதற்கு முன் ஒரு படி அரிசியும், நூறு ரூபாய் பணமும் வைத்து பூஜை நடந்தது. அதனால், அரிசி விலை பல மடங்கு உயர்ந்தது. இக்கோவிலில் துப்பாக்கியை வைத்து பூஜித்தபோதுதான் கார்கில் யுத்தம் துவங்கி; அது வெற்றியில் முடிந்தது. தற்போது 500 ரூபாய் பணம் வைத்து பூஜை நடப்பதால், அன்னிய செலாவணி பல மடங்கு உயர்ந்து, நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்குமென சிவன்மலை முருக பக்தர்கள் பெரிதும் நம்புகின்றனர்.

வந்தவாசிலேயும், திருச்செந்தூர்லயும், பலன் கிடைச்சிருக்கு. நீங்களும் வேண்டிக்கங்க, உங்க தொகுதில இடைத்தேர்தல் வரணும்னு.

3 comments:

  1. ஓட்டு போட்டுட்டேன், சேதி போய் சேந்துச்சான்னு நம்ம ப்ளாக் பக்கம் வந்து சொல்லுங்க

    ReplyDelete
  2. ம்ம் சுவாரஸ்ய கடவுள்தான்

    ReplyDelete
  3. "பெட்ரோல்" வைத்து வணங்கினால் நம் நாட்டில் பெட்ரோல் கிடைக்குமா என்ன?
    இதெல்லாம் வெறும் மூட நம்பிக்கைதான்.இவர்களெல்லாம் எப்போதுதான் திருந்தபோகிறார்களோ தெரியவில்லை.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails