Tuesday, December 29, 2009

கன்றுக்குட்டி நெற்றியில் சிலுவை

 

holy-cow

மெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது கனக்டிகட் நகரம். இங்குள்ள உள்ள சின்ன ஊர் ஸ்டெர்லிங். இங்குள்ள ‘பட்டர் கப்’ என்ற மாட்டுப்பண்ணையில் கடந்த வாரம் கன்றுக்குட்டி ஒன்று பிறந்தது. இதன் உடல் முழுக்க காப்பி நிறத்தோலால் சூழப்பட்டிருக்க, நெற்றிப்பொட்டில் மட்டும் கிறிஸ்துவின் சின்னமான க்ராஸ் வடிவில் வெண்மையான தோல் அமைந்திருக்கிறது. இதைப்  பார்த்து ஆச்சரியமடைந்த பண்ணை முதலாளி ப்ராடு டேவிஸ், ‘இது புனிதமான கன்றுக்குட்டி. இதன் மூலம் ஆண்டவன் ஏதோ தகவலை பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்’ என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்.  அதிசயத் செய்திகளைத் தேடி அலையும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி சேனல்களும் ‘பட்டர் கப்’  மாட்டுப்பண்ணையில் குவிந்து, மோசஸ் என்ற இந்த அதிசயக் கன்றுக்குட்டி மீது தொடர்ந்து கேமிரா ப்ளாஷை அடித்து வருகின்றன.

ஆயிரம் பெரியார் வந்தாலும்…..

Wednesday, December 16, 2009

காசேதான் கடவுளடா… (உண்மையாகவே)

சென்னிமலை : பக்தர் கனவில் தோன்றி ஆண்டவன் உத்தரவிட்டதன் படி, சிவன்மலை முருகன் கோவிலில், 500 ரூபாய் நோட்டை வைத்து பூஜை நடக்கிறது. இதனால், நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்குமென பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

tblSambavamnews_21900576354 உலகில் எந்த முருகன் கோவிலிலும் இல்லாத சிறப்பு, திருப்பூர் மாவட்டம் சிவன்மலை முருகன் கோவிலுக்கு உண்டு. இங்கு மூலவராக வீற்றிருக்கும் சுவாமி சுப்பிரமணியர், பக்தர்களின் கனவில் தோன்றி கூறும் பொருட்களை, கோவிலில் உள்ள கண்ணாடி பெட்டியில் வைத்து, அதற்கு தினமும் சிறப்பு பூஜை நடத்துவது தொன்றுதொட்டு நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டம் வெள்ளோடு மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது கனவில் தோன்றிய முருகப் பெருமான், "500 ரூபாய் பணத்தை வைத்து பூஜிக்குமாறு' உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி கிருஷ்ணமூர்த்தி, திருக்கோவில் நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தார். முறைப்படி மூலவர் சன்னிதியில் பூ மூலம் உத்தரவு கேட்கப்பட்டது.

பூ உத்தரவு கிடைத்ததால், கடந்த வெள்ளிக்கிழமை முதல், 500 ரூபாய் பணத்தை, கோவிலில் உள்ள கண்ணாடி பெட்டிக்குள் வைத்து தினமும் பூஜை நடக்கிறது. இதன்மூலம் நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என பக்தர்கள் கூறுகின்றனர். கடைசியாக இக்கோவிலில் வெற்றிலை, பாக்கு வைத்து பூஜை நடந்தது. இதனால், நாடெங்கும் சுபகாரியங்கள் அதிகம் நடந்தன. அதற்கு முன் விபூதி வைத்து பூஜை நடந்தது. அப்போது, நாட்டில் அதிகப்படியான கோவில்களில் குடமுழுக்கு நடந்தது; மக்களிடம் ஆன்மிக ஈடுபாடும் அதிகரித்தது. அதற்கு முன், மண்ணை வைத்து பூஜை நடந்த போது, ரியல் எஸ்டேட் தொழில் செழித்து, பூமி விலை பல மடங்கு அதிகரித்தது. அதற்கு முன் ஒரு படி அரிசியும், நூறு ரூபாய் பணமும் வைத்து பூஜை நடந்தது. அதனால், அரிசி விலை பல மடங்கு உயர்ந்தது. இக்கோவிலில் துப்பாக்கியை வைத்து பூஜித்தபோதுதான் கார்கில் யுத்தம் துவங்கி; அது வெற்றியில் முடிந்தது. தற்போது 500 ரூபாய் பணம் வைத்து பூஜை நடப்பதால், அன்னிய செலாவணி பல மடங்கு உயர்ந்து, நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்குமென சிவன்மலை முருக பக்தர்கள் பெரிதும் நம்புகின்றனர்.

வந்தவாசிலேயும், திருச்செந்தூர்லயும், பலன் கிடைச்சிருக்கு. நீங்களும் வேண்டிக்கங்க, உங்க தொகுதில இடைத்தேர்தல் வரணும்னு.

Sunday, December 13, 2009

பாரதியின் இதுவரை வெளிவராத சொற்பொழிவு

பாரதியின் இதுவரை வெளிவராத சொற்பொழிவு
  கல்லினுள் உள்ள கடவுள் காயப்படுவதில்லை

ஆ.இரா. வேங்கடாசலபதி

முதலாம் உலகப் போர் முடிவுற்றதைத் தொடர்ந்து தம் புதுச்சேரி கரந்துறை  வாழ்க்கையை முடித்துக்கொண்டு பிரிட்டிஷ் இந்தியாவுக்குள் 20 நவம்பர் 1918இல் நுழைந்ததும் பாரதி கைதுசெய்யப்பட்டார். அரசியல் வாழ்க்கையைத் துறப்பதாக ஒப்புதல் கடிதம் எழுதி, bharathi-1திருநெல்வேலி மாவட்டத்தின் இரண்டொரு இடங்களில் மட்டுமே உறைவதாகவும் தாம் எழுதுவதையும் பேசுவதையும் சி. ஐ. டி துறையின் தணிக்கைக்கு உட்படுத்த உடன்படுவதாகவும் வாக்குறுதி அளித்ததின்பேரில் 14 டிசம்பர் 1918இல் விடுதலை செய்யப்பட்டு, தம் மனைவியின் சொந்த ஊரான கடையம் சென்றார் பாரதி. 1919 ஜனவரி 30இல் தம் எட்டயபுரம் நண்பர் ஒருவருக்குக் கடையத்திலிருந்து பாரதி எழுதிய கடிதத்தை ரா.அ. பத்மநாபன் வெளியிட்டுள்ளார். 1919 மே 2 அன்று எட்டயபுரம் மன்னருக்குப் பாரதி எழுதிய ஓலைத்தூக்கும் கிடைக்கிறது.

இவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் பாரதி சென்னைக்கு வந்திருக்கிறார். மணி அய்யர் என்று அழைக்கப்பட்ட எஸ். சுப்பிரமணிய அய்யரின் தலைமையில் சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் 2 மார்ச் 1919 ஞாயிற்றுக்கிழமையன்று உரையாற்றியிருக்கிறார். சிறையிலிருந்து விடுதலையான பின்பு பாரதி கலந்துகொண்ட முதல் பொதுநிகழ்ச்சி இதுவேயாகலாம்.

எஸ். சுப்பிரமணிய அய்யர் (1842-1924) காங்கிரசின் முதல் மாநாட்டில் (1885) கலந்து கொண்டவர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி. அன்னி பெசண்டின் பிரம்ம ஞான சபையிலும் ஹோம் ரூல் இயக்கத்திலும் முக்கியப் பங்காற்றியவர். ரவுலட் சட்டத்தைக் கண்டித்தவர். பாரதி சிறைபட்டபொழுது அவர் விடுதலை பெற முயன்றவர்களில் இவரும் ஒருவர்.

பாரதி தம் இறுதிக் காலத்தில் கொண்டிருந்த தத்துவ, ஆன்மிகப் போக்கை இவ்வுரை புலப்படுத்துகிறது. இதில் பாரதி வெளிப்படுத்தும் கருத்துகள் ‘பாரதி அறுபத்தாறு’ என அறியலாகும் பாடல்களோடு ஒத்திசைகின்றன. இவ்வுரையினிடையே பாரதி பாடிய இரணியன்-பிரகலாதன் தொடர்பான பாடல் ‘பாரதி அறுபத்தா’றில் (பாடல் எண்: 15) இடம்பெறும் செய்யுளாகலாம். இதன்வழி ‘பாரதி அறுபத்தாறு’ பாடல்கள் இயற்றப்பட்ட காலத்தைக் கணக்கிடலாம்.

பாரதியின் உரை முதன்முறையாக இங்கு அச்சேறுகிறது.

திரு. சுப்பிரமணிய பாரதி, தாம் இயற்றிய தேசபக்திப் பாடல்களைக் கணீரென்ற குரலில் பாடியவாறு தம் உரையைத் தொடங்கினார். ‘எல்லா உயிர்களும் ஒன்று’ என்பதை அவர் முதலில் ஸ்தாபித்தார். சக்தி இல்லாமல் வஸ்து இல்லை, வஸ்து இல்லாமல் சக்தி இல்லை’ என்றார் ஹாக்கெல். இவ்வுலகை வியாபித்திருக்கும் தெய்வாம்சத்தின் - பிரபஞ்சசாரத்தின் - இரு அடிப்படையான தன்மைகள் வஸ்துவும் ஜீவனுமாம். (ஹாக்கெல் எழுதிய) ‘புதிர்’ பிரசுரமான பிறகு வேதியியலில் பல முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஹாக்கெல் தம் ‘புதிர்’ என்ற நூலைப் பிரசுரித்தபோது அணுக்கள், எலெக்ட்ரான்கள் பற்றிய நவீனக் கோட்பாட்டையும் அதன் முழு முக்கியத்துவத்தையும் கணக்கிலெடுத்துக்கொள்ள இயலவில்லை. வஸ்துவின் பிளவுபடாத்தன்மையை எலெக்ட்ரான் கோட்பாடு மிகத் தெளிவாக நிறுவியுள்ளது. மிக அடிப்படையான கூறு மின்தன்மை உடையது என்பது கண்டறியப்பட்டு, வஸ்து என்பது சரீரமற்ற மின்தன்மைகளின் கூட்டு என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ‘சரீரமற்ற’ எனில் அலௌகீகம் எனப் பொருள்படும். லார்மர் மற்றும் லாரெஞ்சு, தாம்சன் மற்றும் ஆலிவர் லாட்ஜ் ஆகியோரின் ஆராய்ச்சிகளின் மொத்த விளைவு என்னவென்றால் ‘வஸ்து’ என்பது சக்தியின் செம்மைப்படாத வடிவம் என்பதே. சக்தி என்பது மனத்தின் வெளிப்பாடே என்றும் பிரசங்கி மேலும் கூறினார். வஸ்துவின் முந்திய நிலையே சக்தி என்பதால், மனமே சக்தியின் மூல வடிவமாகும். ஒரு தனி மனம் பிரபஞ்சமாக வெளிப் படுவதில்லை; எல்லாம் தழுவிய பிரபஞ்ச மனமே எப்போதும் தன்னை வெவ்வேறு பிரபஞ்ச - பௌதீக, ஜீவாதாரமான, மனரீதியான, ஆன்மிக - மண்டலங்களாக வெளிப்படுத்திக்கொள்கின்றது. நெருப்பும் வெப்பமும் எங்கும் பொதிந்துள்ளது போலவே, உயிரும் பிரக்ஞையும் பிரபஞ்சத்தில் பொதிந்துள்ளன; ஆனால் சில குறிப்பிட்ட சூழல்களில் மட்டுமே அவை செயல்பட்டு வெளிப்படுகின்றன. அணுவின் பிரக்ஞை பற்றிய கோட்பாட்டை முன்மொழிந்தவர்கள்கூட ஒரு மனிதன் அல்லது தவளைக்கு இருப்பதுபோல் ஓர் அணுவுக்குப் பிரக்ஞை உண்டு என்று கூறமாட்டார்கள். மனம் என்பது சக்தியின் ஒரு வடிவம் என்றார் ஹாக்கெல்; சக்தியே மனத்தின் வெளிப்பாடுதான் என்பதைப் பிரசங்கி நிறுவிக்காட்டினார்.

‘எல்லாம் ஒன்றே. எல்லாம் கடவுள்’ என்பதே ஸ்பினோஸா, கொய்தே, ஷொப்பன்ஹைர், ஷெல்லி ஆகியோரின் நிலைப்பாடு. வேத, உபநிஷத்துகள் மற்றும் எல்லா மதங்களின் ஞானிகள், புலவர்களின் நம்பிக்கையும் அதுவே. இக்கோட்பாட்டை உணர்த்தும் இரணியன், பிரகலாதன் பற்றிய ஒரு தமிழ்ப் பாடலையும் பிரசங்கி பாடினார். நித்தியத்தின் இன்பத்தை அறிந்தவர்க்கு அச்சம் இல்லை. எல்லா உயிர்களின் ஒருமைத் தன்மையும் தெய்வத்தன்மையும் உலக மதங்கள் எதனுடையதன் சாரத்திற்கும் பொருந்தாததன்று. இந்திய துவைதத்தில் சைவ, வைணவ வழிபாட்டு முறைகள் இதற்குப் போதுமான உதாரணங்களாகும். இவ்வுலகம் கடவுளின் வடிவமல்ல, அவனுடைய சிருஷ்டியே ஆகும் என்றாலும்கூட இவ்வுலகின் தெய்வத்தன்மையை எவரும் மறுக்க இயலாது. கடவுளின் கைவண்ணம் தெய்வீகமானதாகவே இருக்கவியலும். தந்தை கடவுளாயிருக்கும் பட்சத்தில் மைந்தன் தவளையாக இருக்க முடியாது. எவர் ஒருவரும் கடவுளின் மைந்தனாகும் பட்சத்தில் அவனும் கடவுளேயாவான். விஷ்ணு புராணம், ‘நீயே சூரியன்; நீயே கிரஹங்களும்; வடிவம் கொண்டதும் கொள்ளாததும்; காணப்படுவதும் காணப்படாததுமான அனைத்தும் நீயே’ என்று விஷ்ணுவை நோக்கிப் பரவுகின்றது.

வசிஷ்டர்முதல் வாமதேவர்வரை, அரவிந்த கோஷ்முதல் ஸ்ரீமதி அன்னி பெசண்டுவரை ஆன்மிக தேசியவாதிகள் அனைவரும் உண்மையை அதன் தூய வடிவில் நேருக்கு நேர் கண்டனர். ‘இந்த ஒருமைத் தன்மையை அறிவது, எல்லாத் தத்துவங்களின் நோக்கம் மட்டுமல்ல, இயற்கை பற்றிய முழு ஞானத்தின் நோக்கமுமாகும். இறைவனும் உலகமும் ஒன்றே என்ற கோட்பாட்டைச் சில ஞானிகள் கண்டஞ்சியதற்குக் காரணம் பிரபஞ்சம் அழியக் கூடியது, கடவுள் அழியாதவர் என்று அவர்கள் கருதியதாலேயாகும். எல்லா வஸ்துக்களும் எல்லா ஜீவன்களும் ஒன்றேயாகவும் தெய்வீகமானவையாக - சமஅளவில் தெய்வீகமானவையாகையால் மனிதர்கள் தேவ, தேவதைகளை அணுகுவதைப் போலவே மக்கள் அனைவரும் எல்லா வஸ்துக்களையும் ஜீவன்களையும் அணுக வேண்டும். உலகின் பல்வேறுபட்ட தன்மையை, அதாவது கடவுளின் எண்ணற்ற வடிவங்களை அவை எதிர்ப்படும் வகையிலேயே கருத வேண்டும். எல்லா வடிவங்கள், வஸ்துக்களின் அடிப்படையான ஒருமையையும் சம தெய்வீகத்தன்மையையும் உணரும் அதே வேளையில் பரிணாம வளர்ச்சியின் படிநிலைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எல்லாமே தெய்வீகம் என்பதால் சக மனிதரைக் கொல்வதோ ஏன் அடிப்பதோகூடத் தெய்வக் குற்றமும் பாவமுமாகும். ஆனால் ஒரு கல்லை உடைப்பதென்பது பாவமன்று. ஏனெனில் மனிதருள் உள்ள கடவுள் காயப்படுவார்; கல்லினுள் உள்ள கடவுள் காயப்படுவதில்லை. எந்த ஒரு சிருஷ்டியையும் தார்மீகமற்றதெனக் கூறக் கூடாது. எல்லாமே தெய்வீகமானதால், அனைவரும் கடவுளைப் போல் சிந்தித்து, பேசி, செயல்பட வேண்டும். பிரசங்கி பின்வரும் வார்த்தைகளுடன் தன் பேச்சை நிறைவு செய்தார். ‘நாம் எல்லாரும் கடவுளராக உறுதிபூண்டு வேத தீர்க்கதரிசனத்தை மெய்ப்பிப்போம். எல்லாச் சூழ்நிலைகளிலும் நன்மை, அன்பு, வலிமை, உறுதி, விடுதலை, அச்சமின்மை ஆகியவற்றைக் கொண்டிருப்போம். நீங்கள் உங்கள் தெய்வத்தன்மையை உணர்ந்து மற்றவர்களையும் தெய்வங்களாக நடத்தினால் அவர்களும் அவ்வாறே செய்வார்கள். ஏனெனில் அன்பு அன்பை ஈனுகிறது. எந்த உயிரையும் பறிக்காதீர். ஏனெனில் இயற்கை உங்கள் உயிரையும் பறித்துவிடும். எவரையும் துன்புறுத்தாதீர். எல்லார்மீதும் அன்பு செலுத்துக!’

‘தி ஹிந்து’, 4 மார்ச் 1919

ஆ. இரா. வேங்கடாசலபதி பதிப்பித்துள்ள ‘பாரதி கருவூலம்’ (காலச்சுவடு வெளியீடு) நூலின் இரண்டாம் பதிப்பிலிருந்து இந்தப் பகுதி வெளியிடப்படுகின்றது. பாரதி உரையாற்றிய இக்கூட்ட நடவடிக்கைகளின் முழு விவரத்தை இந்நூலில் காணலாம்

நன்றி : kc-logo

Saturday, December 12, 2009

குடிக்க வேணாம் - விழுங்கலாம்: மாத்திரை வடிவில் வோட்கா

1_Absolut Vodka- quelle PR_0  மாஸ்கோ : பிரபல சர்வதேச மதுபானம் "வோட்கா' மாத்திரை வடிவில் விற்பனைக்கு வரப்போகிறது."வோட்கா' மதுபானம், இப்போது பாட்டிலில் திரவ வடிவில் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை மாத்திரை வடிவில் விற்பனை செய்ய முயற்சி மேற் கொள்ளப்பட்டு வருகிறது.ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் இவேஜினி மோஸ்கலேவ். இவர் இது தொடர்பாக புது தொழில்நுட்பம் கண்டுபிடித்துள்ளார்."இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, வோட்கா மட்டுமல்ல, எந்த வித மதுபானத்தையும் திரவ நிலையில் இருந்து படிக நிலைக்கு கொண்டு வரலாம்' என்று இவர் கூறியுள்ளார்.vodka-pillsDRUNKARD

Tuesday, December 8, 2009

விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர்

spread eagle females, Bald Eagle, Haliaeetus leucocephalus, Alaska, Homer, USAதலச்சேரி : மருத்துவமனையில் பணியாற்றும் வாலிபரை பழிதீர்க்கும் எண்ணத்துடன் பருந்து ஒன்று விடாமல் துரத்தி துரத்தி கொத்தி வருகிறது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி அடுத்த கோடியேறியில் உள்ள மலபார் புற்றுநோய் மைய கேன்டீனில் பணியாற்றி வருபவர் ஷிஜின்ராஜ். இவர், எப்போது வெளியே சென்றாலும் அவருக்காக காத்திருக்கும் பருந்து ஒன்று பறந்து வந்து அவரை கொத்த தொடங்கி விடும்.

கடந்தாண்டு வரை அம்மருத்துவமனை கேன்டீனில் அவருடன் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவாலிபரும் பணியாற்றி வந்தார். இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பார்கள். அப்போது, கேன்டீனில் இருந்து வெளியே வீசப்படும் உணவுக் கழிவுகளை தின்ன பருந்து கூட்டம் அங்கே வருவதுண்டு. அவ்வாறு பறந்து வந்த பருந்தின் மீது வங்கதேசத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருநாள் வென்னீர் ஊற்றினார். அதற்கு பிறகு தான் இதுபோன்ற சம்பவம் தொடர்கதையாகி விட்டது. ஆனால், பருந்தின் மீது வென்னீர் ஊற்றிய வங்கதேச வாலிபர், கேன்டீன் கட்டடப் பணி முடிந்ததும் தாயகம் திரும்பி விட்டார். அவரை போலவே தோற்றமளிக்கும் ஷிஜின்ராஜ் மீது பருந்தின் பழி வாங்கும் எண்ணம் திரும்பி விட்டது.

ஒரு வருடமாக பருந்தின் தாக்குதல் காரணமாக பலரும், "பருந்து ஷிஜின்' என்றே அவரை அழைக்கத் தொடங்கி விட்டனர். பருந்தின் தாக்குதல் காரணமாக அவரது உடலின் பல இடங்களில் காயங்கள், தழும்புகள் தோன்றி விட்டன. களறி சண்டை பயிற்சி முடித்துள்ள அவர், பல முறை அதை பயன்படுத்தி தான் பருந்தின் தாக்குதலில் இருந்து தப்பி வந்துள்ளார். அவர் வெளியே செல் லும்போது சாக்குப்பையால் முகத்தை மூடிக் கொண்டு செல்ல வேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவருடன் செல்பவர்களை பருந்து தாக்குவதில்லை என்று மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் பல நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் தெரிவித்தனர

LinkWithin

Related Posts with Thumbnails