Wednesday, November 25, 2009

ராக் பேலன்ஸிங் எனும் அற்புதக்கலை

rb-1.jpg

ர்வர் சுந்தரம் திரைப்படத்தில் நான்கைந்து காபி டம்ளர்களை ஒன்றின்மீது ஒன்றடுக்கி பேலன்ஸ் செய்து எடுத்து வருவார் நாகேஷ்.  அந்தக் காட்சிக்காக எத்தனை டேக் எடுத்தார்களோ தெரியாது.

ஆனால் பில் டான் அப்படியில்லை.கல்லிலே கலைவண்ணம் காணும் சிற்பியான அவர் ராக் பேலன்ஸிங் எனப்படும் கற்களை ஒன்றின்மீது ஒன்றை நிலைநிறுத்தும் கலையில் வல்லவர்.

சான்பிரான்சிஸ்கோ கடற்கரையில் இவருடைய கலை கைவண்ணங்கள் வரிசையாக நின்று காண்போரை வியக்க வைக்கும்.

billdan2

இந்தோனேசியாவில் பிறந்த பில் டான் துவக்கத்தில் சரக்கு கிடங்கு ஒன்றில் வேலை பார்த்தவர். அவருக்குள் இருந்த கலைத் தாகம் உசுப்பிவிட ஊர் சுற்ற ஆரம்பித்தார். கற்பாறைகளை ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கி நிறுத்தும் கலையைக் கற்றுத் தேர்ந்தார்.

ராக் பேலன்ஸிங் என்ற இந்த அரிய சிற்பக்கலைத் துறையில் உலகம் முழுக்க வல்லவர்கள் பலர் இருந்தாலும் வல்லவர்களுக்கெல்லாம் வல்லவர் இந்த பில் டான். அவருடைய ராக் பேலன்ஸிங் அற்புதங்களை நிலை தடுமாறாமல் பார்த்து ரசியுங்கள்.

மேலும் விவரங்களுக்கு: http://www.rock-on-rock-on.com

rb2.jpg

rb3.jpg

rb4.jpg

rb5.jpg

rb6.jpg

rb7.jpg

rb8.jpg

rb9.jpg

rb10.jpg

rb11.jpg

5 comments:

  1. அருமையான தொகுப்பு மௌனி!

    ReplyDelete
  2. ஆச்சர்யம் தான்....மிக நல்ல தொகுப்பு...வாழ்த்துக்கள். தொடருங்கள் :-)

    ReplyDelete
  3. @சென்ஷி, ரோஸ்விக், வானம்பாடிகள்

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

    ReplyDelete
  4. நல்ல படங்கள். நன்றி

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails