Tuesday, November 3, 2009

ஒற்றை காலுடன் பாம்பு! சீனாவில் அதிசயம்

பீஜிங்: சீனாவில் 66 வயதான "டூவான் ஒயிங்சியூ" என்ற பெண்மணி வீட்டில் ஒற்றை கால் கொண்ட அபூர்வ பாம்பு பிடிப்பட்டது. இது குறித்து அந்த பெண்மணி கூறுகையில் நடு இரவில் கண் விழிக்கும் போது, தனது வீட்டின் சுவற்றின் மேல் பாம்பு ஒன்று கண்டதாகவும், பிறகு அதனை வெளிச்சத்தில் பார்த்த போது அதற்கு ஒற்றை கால் இருப்பதைக் கண்டு மிகுந்த ஆச்சரியபட்டதாக கூறினார். மேலும், அந்த பெண்மணி பாம்பை அடித்து கொன்று, ஆல்கஹால் நிறைந்த பாட்டிலுக்குள் அடைத்து வைத்தார். இந்த அபூர்வ பாம்பை பற்றி, லாங் என்ற பாம்பு நிபுணர் கூறுகையில், அபூர்வ பாம்பின் காலின் அளவு 16 அங்குலம் கொண்டதாகவும், இந்த பாம்பு பற்றி முழுமையான தகவல் பாம்பை பிரேத பரிசோதனை செய்து பிறகு தெரிய வரும் எனவும் லாங் கூறினார்.

spl17

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails