Monday, November 23, 2009

உலகின் மிக நீண்ட நேரம் ஓடக்கூடிய திரைப்படம் (150 மணி நேரம்)

terry-gilliam_1505790a உலகின் மிக நீண்ட நேரம் ஓடக்கூடிய திரைப்படம் என்ற பெயரை பிரெஞ்சு மொழி திரைப்படமான சினிமாட்டன் (Cinematon) பெற்றியிருக்கிறது. ஜெராடு கோரண்ட் என்பவர் இயக்கியுள்ள இத்திரைப்படம் சுமார 150 மணி நேரம் ஓடும். அதாவது, நீங்கள் தொடர்ந்து பார்க்க விரும்பினால், நாற்காலியை விட்டு எழுந்திருக்க 6 நாட்கள் ஆகும்.
இதன் படத் தயாரிப்புப் பணிகள் 1978 ஆம் ஆண்டு தொடங்கி, 2008 ஆம் ஆண்டில்தான் முடிந்தது. 30 வருடங்கள் தயாரிப்பில் இருந்த இந்தப் படத்தை ஜெராடு தன்னுடைய நண்பர்களின் நிதி உதவியோடு  முடித்தே விட்டார். அவருடைய நண்பர்கள் அனைவரும் ஓரிரண்டு நிமிடங்கள் இந்தப் படத்தில் வந்துபோகின்றனர்.

சினிமாட்டன் வரும் 2010 ஆம் ஆண்டு ஜனவரியில் திரைக்கு வருகிறது(யார் பார்ப்பார்கள் என்பதுதான் வியப்பான விஷயம்). விரைவில் இந்தப் படம் பிரான்ஸில் திரையிடப்பட இருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி, உலகின் மிக நீண்ட திரைப்படம் 2006 இல் வெளிவந்த மட்ரேஜாஸ்கா (Matrjoschka) 95 மணிநேரம்.
இரண்டாவது இடத்தை 1987 இல் வெளிவந்த தி கியூர் இன்சோம்னியா(The Cure for Insomnia) 87 மணிநேரம், மூன்றாவது இடத்தை 1968 இல் வெளிவந்த அண்டர்கிரவுண்ட்(Underground) 48 மணிநேரம், ஆகிய படங்கள வகிக்கின்றன.

சினிமாட்டன் வெளியானவுடன் இந்த படங்கள் அடுத்தடுத்த நிலைக்குத் தள்ளப்படும்'.

ஆவ்…..

83149093

8 comments:

  1. வியப்பான செய்தி, பகிர்வுக்கு நன்றி நண்பா.

    ReplyDelete
  2. அன்புள்ள மௌனி.. முக்கியமான பல செய்திகளைத் தருகிறீர்கள். அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய நல்ல பகிர்வுகள். உங்கள் இடுகையை தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன். தொடர்ந்து உங்கள் எழுத்தை வாசிக்க ஆர்வமாக இருக்கிறேன். ஓட்டு போட்டாச்சு.

    ReplyDelete
  3. நல்ல தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  4. @ செ.சரவணக்குமார்
    நன்றி சரவணக்குமார்,உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும்,
    எனக்கு வியப்பை தரும் செய்திகள் உங்களுக்கும் தரும் என்ற நம்பிக்கையில்தான் இங்கு தொகுத்து வைத்திருக்கிறேன்.

    @வானம்பாடிகள்
    நன்றி உங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும்

    ReplyDelete
  5. WWW.Tamilaruvy.com wach tamil dvd hq movies 1 on net visit now www.tamilaruvy.com or www.aruvymovies.com

    ReplyDelete
  6. இந்த தகவலை நான் உபயோகபடுத்தி கொள்ளலாமா?

    ReplyDelete
  7. தாரளமாக மணிஜி.. நமக்கே “Copy" Rights தான்

    ReplyDelete
  8. ஓட்டு போட்டாச்சு

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails