அவினாசி : அவினாசி அருகே, 20 அடி உயரத்தில் சோளப் பயிர் வளர்ந்துள்ளது. திருப்பூர், அவினாசி அருகே திருமுருகன்பூண்டி, சன்னிதி தெருவை சேர்ந்தவர் கண்ணன்; சிற்ப கலைக்கூடம் நடத்தி வருகிறார். இவரது வீட்டில், ஐந்து மாதத்துக்கு முன் சிறிய அளவில் சோளப் பயிர் வளர்ந்தது. நாட்கள் செல்லச் செல்ல செடி உயரமாக வளர்ந்து கொண்டே போனது. தற்போது, இந்தச் செடி 20 அடி உயரத்துக்கு வளர்ந்து நிற்கிறது. இந்த "மெகா உயர' செடியை அப்பகுதி மக்கள் அதிசயத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
கண்ணன் கூறுகையில், ""ஐந்து மாதமாக செடி வளர்ந்து கொண்டே செல்கிறது. தற்போது 20 அடிக்கும் மேல் வளர்ந்து விட்டது. செடிக்கு கீழே மண்புழு உரத்தை மட்டுமே போடுகிறோம். அடிக்கடி தண்ணீர் ஊற்றி வருகிறோம். விளைந்துள்ள சோளத்தை தாவர ஆராய்ச்சியாளர்கள் கேட்டால், கொடுக்கத் தயார்,'' என்றார்.
இவ்வாறு 20 அடி உயரத்தில் சோள செடி வளர்ந்துள்ளது குறித்து விவசாயத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ""பொதுவாக குறுகிய பரப்பளவில் சோளம் பயிரிட்டால் நல்ல உயரத்தில் வளரும். அதை மஞ்ச சோளம் என்பர். திருமுருகன்பூண்டியில் உள்ள ஒரு வீட்டில் வளர்ந்துள்ள செடிக்கு, அதிகளவில் மண்புழு உரம், தண்ணீர் ஊற்றியதால் 20 அடி வரைக்கும் வளர்ந்துள்ளது. கால் ஏக்கரில் சோளம் விதைத்து தனிப்பட்ட கவனம் செலுத்தினால், குறைந்தபட்சம் 10 அடிக்கு மேல் வளரும் வாய்ப்புள்ளது. மண்புழு உரத்தினால், கூடுதல் சத்து பயிருக்கு கிடைத்துள்ளது,'' என்றார்
No comments:
Post a Comment