Friday, October 30, 2009

30 ஆண்டுகளாக அடக்கம் செய்யாமல் இருந்த பெண் பிணம்

article-1171743-00E93E911000044C-333_468x610 சவுதிஅரேபியாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் 1979-ம் ஆண்டு நர்சாக பணியாற்றி வந்தவர் ஹெலன் ஸ்மித். இவர் கட்டிடம் ஒன்றில் தவறி விழுந்து உயிர் இழந்தார். அப்போது அவரது வயது 23. ஆனால் அவர் சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை ரான்ஸ்மித் புகார் செய்தார்.
ஹெலன்ஸ்மித் டென்மார்க் கப்பல் கேப்டன் ஒருவர் அளித்த விருந்தில் கலந்து கொண்டதாகவும் அப்போது அவர் கற்பழித்து கொல்லப்பட்டதாகவும் புகார் கூறினார். எனவே அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என வற்புறுத்தி வந்தார்.
இதனால் ஹெலன் உடல் அடக்கம் செய்யப்படாமலே 30 ஆண்டுகளாக சவுதி அரேபியா ஆஸ்பத்திரி பிண அறையிலேயே வைக்கப்பட்டு இருந்தது.
அவரது உடலை அக்கம் செய்யும்படி தந்தையிடம் சொன்னதற்கு அதை ஏற்க மறுத்து விட்டார்.
இப்போது தந்தை ரான் ஸ்மித்துக்கு 83 வயதாகி விட்டது. உடல் நலமும் குன்றி விட்டது. இதையடுத்து அவர் தனது பிடிவாதத்தை கைவிட்டு மகள் உடலை பெற்று அடக்கம் செய்ய முன் வந்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன

அப்படியா!

Thursday, October 29, 2009

160 மில்லிகிராம் தங்க காலணி

Vellore%20-%202ஆம்பூரை சேர்ந்த நகைதொழிலாளி லிம்கா சாதனை முயற்சியாக 160 மில்லிகிராம் எடையுள்ள தங்க காலணியை வடிவமைத்துள்ளார்.
ஆம்பூர் கிருஷ்ணாபுரம் முதல் தெருவை சேர்ந்த சென்றாய ஆச்சாரி மகன் தேவன் (45). இவர் கடந்த 23 வருடங்களாக நகை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
தற்போது மிட்டூரில் உள்ள வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில், லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்பதற்காக 160 மில்லிகிராம் எடையில் தங்க காலணியை உருவாக்கியுள்ளார். இதன் நீளம் அரை சென்டி மீட்டர். மிக விரைவில் உலக சாதனை படைப்பேன் என்கிறார் தேவன்.

Tuesday, October 27, 2009

"வெங்கி" குளிக்க ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க அண்டா!!

tblgeneralnews_19458734990 நகரி: திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு, மூன்று கோடி மதிப்புள்ள தங்க அபிஷேக பாத்திரம், காணிக்கையாக வழங்கப்பட்டது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில், கார்த்திகை மாத ஆண்டு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

புதுடில்லியைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத பக்தர் ஒருவர், 17 கிலோ எடையுள்ள, 50 லிட்டர் தண்ணீர் கொள்ளும், மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான தங்க பாத்திரத்தை (அண்டா), நேற்று முன்தினம், திருமலை தேவஸ்தான போர்டு தலைவர் ஆதிகேசவலு நாயுடு, சிறப்பு நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி ஆகியோரிடம் காணிக்கையாக வழங்கினார். மூலவரின் அபிஷேக சேவை, உற்சவ மூர்த்தியின் திருமஞ்சன சேவையின்போது இப்பாத்திரம் உபயோகப்படுத்தப்படும். "திருமலையில் நடைபெறும் பிரம்மோற்சவ விழா போன்று, திருச்சானூரில், நவம்பர் 13 முதல் 21 வரை, கார்த்திகை பிரம்மோற்சவம் நடத்த, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன' என, தேவஸ்தான நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ராவ் தெரிவித்தார்

ஐஸ்வர்யாராயின் சம்பளம் 25 கோடி

abhishekbachchanaishwaryaraimarriage2-285x300 ஐஸ்வர்யாராய்  அபிஷேக் பச்சன் திருமணம் கடந்த 2007 ம் ஆண்டு நடந்தது. அதன்பிறகு இருவரும் இந்திப்படங்களில் அதிகமாக சேர்ந்து நடித்து வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளில் 5 படங்களில் அவர்கள் சேர்ந்து நடித்துள்ளனர்.
தற்போது ஐஸ்வர்யாராய், அபிஷேக்பச்சன் இருவரும் மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். இந்த ஜோடி முதன் முதலாக விளம்பர படம் ஒன்றிலும் நடித்துள்ளது.
லக்ஸ் சோப்பு விளம்பரத்துக்காக அவர்கள் சேர்ந்து நடித்துள்ளனர். கிளுகிளுப்பூட்டும் இந்த விளம்பரம் மிகுந்த பொருட்செலவில் சமீபத்தில் எடுக்கப்பட்டது.
இந்த சோப்பு விளம்பர படத்தில் நடித்ததற்காக ஐஸ்வர்யாராய்  அபிஷேக்பச்சன் ஜோடிக்கு ரூ.25 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் விளம்பர படம் ஒன்றில் நடித்ததற்காக இவ்வளவு பெரிய தொகை வாங்கியது இவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை படஉலகில் பொன் முட்டையிடும் தங்கஜோடி என்று ஐஸ்வர்யாராயும், அபஷேக்பச்சனும் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் நடித்துள்ள லக்ஸ் விளம்பர படம் அடுத்தவாரம் முதல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளது

உங்களுக்காக அந்த விளம்பரம்”

அமெரிக்காவின் தாஜ்மகால் விற்பனைக்கு!

avillataj191

அமெரிக்காவில் இலினாய்ஸ் மாநிலத்தில் பர் ரிட்ஜ் என்ற இடத்தில் வில்லா தாஜ் என்ற பெயரில் ஒரு மாளிகை உள்ளது. இது இலினாய்சின் தாஜ்மகால் என்று அழைக்கப்படுகிறது. இது காதலின் நவீனச்சின்னமாக கருதப்படுகிறது.

இந்திய, ஐரோப்பிய மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் மொராக்கோ பாணியில் 30 ஆயிரம் சதுர அடி பரப்பில் கட்டப்பட்டு உள்ளது. இதில் 6 பெரிய படுக்கை அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையும் 2400 சதுர அடி பரப்பில் இருக்கும். படிக்கட்டுகள் பளிங்கு கற்களாலானது. 20 கார்கள் நிறுத்துவதற்கான ஷெட்டுக்களும் இருக்கின்றன. இதை கட்டி முடிக்க 5 ஆண்டுகள் ஆனது. இதை கட்டுவதற்கு 90 கோடி ரூபாய் செலவானது.

இதன் மார்க்கெட் மதிப்பு ரூ.125 கோடி ஆகும். ஆனால் அவ்வளவு தொகை கொடுத்து வாங்குவதற்கு ஆள் இல்லாததால், இது ஏலத்தில் விடப்பட்டு உள்ளது. தொடக்க விலையாக 31 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வருகிற 4 ந் தேதி ஏலம் தொடங்குகிறது

Monday, October 26, 2009

14 ஆண்டுகளாக ஒரே படத்தை ஒட்டும் தியேட்டர்!!

மும்பையிலுள்ள ஒரு தியேட்டரில், 14 ஆண்டுகளாக மேட்னி ஷோவில் ஒரே படத்தை "ஓட்டி'க் கொண்டிருக்கின்றனர். இது கின்னஸ் சாதனையாகக் கருதப்படுகிறது. "மராத்தா மந்திர்' என்ற தியேட்டரில், "தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே' என்ற படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

tblHumanTrust_26724970341 ஷாருக்கான், கஜோல், மந்திரா பேடி இருவரும் நடித்த இந்தப் படம் வெளிவந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. மேட்னி ஷோவில் மட்டும் இந்தப் படம் தொடர்ந்து 14 ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.குறைந்த டிக்கெட் 18 ரூபாய். பால்கனி 22 ரூபாய். தம்பதிகள் தங்கள் திருமண நாளைக் கொண்டாடுவதற்காக 10 ரூபாயில் பாப்கார்ன் வாங்கிக் கொண்டு இந்தப் படம் பார்க்க வந்து விடுகின்றனர். மணிக்கணக்கில் உட்கார்ந்து படத்தை பார்த்தும், பேசிக்கொண்டிருந்தும் விட்டு கிளம்புகின்றனர். " இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று நான் கணக்கு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால், இந்தப் படத்தை நான் மிகவும் விரும்புகிறேன்' என்று சிலர் கூறியது வித்தியாசமாக இருந்தது.

வாரத்தின் பெரும்பாலான நாட்களில் தியேட்டரில் சுமாரான கூட்டம் தான் இருக்கும்; அப்போதெல்லாம் தியேட்டரின் ஓரளவு வசூலுக்கு கைகொடுப்பது காதலர்கள் தான்; அவர்கள், தங்கள் ரொமான்சை அரங்கேற்றுவதற்காக இந்தத் தியேட்டருக்கு வருகின்றனர். ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இந்தத் தியேட்டர் நிரம்பி வழிகிறது; காரணம், ஷாருக்கின் இந்த படம் அருமையானது என்பதே. இந்தத் தீபாவளியோடு இந்தப் படம் வந்து 730 வாரங்கள் ஓடிவிட்டன. ஆனாலும், இன்னும் இந்தப் படம் இளைஞர்களைக் கவர்ந்து இழுத்துக் கொண்டுதானிருக்கிறது

Sunday, October 25, 2009

ஒரு முத்தம் விலை ரூ.64 லட்சம்

லாஜ்ஏஞ்சல்ஸ், அக். 25-
தென் அமெரிக்காவில் பிறந்த 34 வயது ஹாலிவுட் நடிகை சார்லீஸ் தெரான். இவர் சான்பிரான்சிஸ்கோCharlize%20Theronவில் தொண்டு நிறுவனம் amd_charlize_theron_kissingசார்பில் நன்கொடைக்காக நடந்த ஒரு ஏல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது ஏலத்தொகையை அதிகரிப்பதற்காக அவரிடம் இருந்து 7 வினாடி முத்தம் ஒன்றை யும் பெற்றுக் கொள்ளலாம் என்ற அதிரடி சலுகையை வெளியிட்டார். இதையடுத்து ஒரு நபர் 130 ஆயிரம் டாலருக்கு ஏலம் கேட்டார். அப்போது திடீரென அங்கிருந்த பெண் ஒருவர் 140 ஆயிரம் டாலர் கேட்டு ஏலம் பிடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இந்திய மதிப்பு படி இந்த தொகை ரூ.64 லட்சமாகும். இதையடுத்து தனது காதலன் நடிகர் ஸ்டூவர்ட் டவுன்சென்ட்(36) இங்கு இல்லை என ஜோக் அடித்த படி தெரான் அந்த பெண்ணுக்கு முத்தம் கொடுத்தார்.

நிஜ “கடற்கன்னி”

அமெரிக்காவைச் சேர்ந்த இந்த 10 வயது சிறுமி பெபின், பிறக்கும்போதே இரண்டு கால்கள் ஒட்டிய நிலையில் “கடற்கன்னி” போல் இருந்தாள். பெற்றோர் மிகவும் சிரமப்பட்டு வளர்த்து வந்தனர். இந்நிலையில் இந்த சிறுமி நேற்று முன்தினம் மரணம் அடைந்தாள். இது 2 ஆண்டுகளுக்கு முன்பு பெபின் உற்சாகமாக இருக்கும்போது எடுத்த படம்.

Obit Pepin

இறக்கை இல்லாத மின்விசிறி

133803_1நியூயார்க்;இறக்கை இல்லாத, காற்றை அள்ளி வீசக்கூடிய நவீன மின்விசிறியை பிரிட்டன் தொழிலதிபர் அறிமுகப்படுத்தியுள்ளார்.வீட்டில் குனிந்து பெருக்கும் சிரமத்தை தவிர்த்து "வேக்வம் கிளீனர்' என்ற சாதனத்தை அறிமுகப்படுத்திய பிரிட்டனின் ஜேம்ஸ் டைசன், தற்போது பிளேடு இல்லாத மின்விசிறியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

வட்டவடிவில் உள்ள இந்த மின்விசிறி காற்றை ஒரு பக்கம் வாங்கி மற்றொரு பக்கம் வேகமாக வீசுகிறது. இதற்குரிய வகையில் இந்த மின்விசிறி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்விசிறி மூலம் இறக்கையில் தூசி படியுமே என்ற கவலை இல்லை. குழந்தைகளுக்கும் இந்த மின் விசிறியால் ஆபத்தில்லை.

கதவை திறந்து வைப்பதன் மூலம் இந்த மின்விசிறி அதிகப்படியான காற்றை உறிஞ்சி அறையை குளுமைப் படுத்தும். "ஏசி' மிஷினை விட இந்த மின்விசிறியால் அதிக பலன் உண்டு, என்கிறார் ஜேம்ஸ் டைசன்.தற்போது தான் இந்த மின்விசிறி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதால் 10 ஆயிரம் ரூபாய் வரை இதன் விலை உள்ளது.

9900f_dyson_air_multiplier_live-540x358 133803_2

வீடியோ:

இவர் ஏற்கனவே தயாரித்த “பேக் இல்லாத வேக்கம் கிளீனர்” மார்க்கெட்டில் சூப்பர் ஹிட்.

47757947

ஆச்சர்யமூட்டும் ஐந்து தகவல்கள் - 1

1. ஜப்பான் நாட்டு தட்டெழுத்து இயந்திரத்தில் மொத்தம் 2,863 எழுத்துக்கள் உள்ளன.

Science_&_Society_10314280

2. பிகாலோ எ‌ன்ற ‌மீ‌ன் ‌பி‌ன்புறமாகவு‌ம் ‌நீ‌ந்து‌ம்.

2009-03-12-dracula-fish-01

3. யானை த‌ன் து‌தி‌க்கை‌யி‌ல் 9 ‌லி‌ட்ட‌ர் ‌நீரை உ‌றி‌ஞ்‌சி‌க் கொ‌ள்ளு‌ம். யானைக‌ள் ‌கி‌ட்ட‌ப்பா‌ர்வை உடையவை. தொலைதூர‌த்‌தில‌் இரு‌ப்பது எதுவு‌ம் அத‌ன் க‌ண்களு‌க்கு‌த் தெ‌ரியாது.

1.1237792980.elephant-bath

4. தே‌‌னீ‌க்க‌ள் ஒரு ‌கிலோ தேனை உ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய 50 ல‌ட்ச‌‌ம் பூ‌க்க‌ளி‌ல் தேனை உ‌றி‌ஞ்சு‌‌கி‌ன்றன. இவை வா‌ழ்நா‌ளி‌ல் பற‌க்கு‌ம் மொ‌த்த தூர‌ம், பூ‌மியை 4 முறை வல‌ம் வ‌ந்தத‌ற்கு சமமானதாகு‌ம்.

honey bees

5. ஒரு ‌சில‌ந்‌தி‌யி‌ன் வலை சுமா‌ர் 2000 மை‌ல் ‌நீள‌த்‌தி‌ற்கு வரு‌ம்.

spider_instinct

Saturday, October 24, 2009

நடுவானில் பிறந்த குழந்தைக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசு

கோலாலம்பூர்: நடுவானில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுதும் இலவச விமான  பயணச் சலுகையை ஏர் ஏசியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. மகனின் வருகையால் தாய்க்கும் அந்த அதிர்ஷ்டம் high3கிடைத்துள்ளது. மலேசியாவைச் சேர்ந்தவர் லியூ சியா யா. வயது 31. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், வடக்குப் பகுதி தீவான பினாங்கில் இருந்து போர்னியா நகருக்கு கடந்த புதன்கிழமை ஏர் ஏசியா விமானத்தில் பறந்தார். நடுவானில் லியூவுக்கு பிரசவ வலி வந்தது. விமானத்தை பாதி வழியில் கோலாலம்பூருக்கு திருப்பினார் பைலட். விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாரான நிலையில் 2,000 மீட்டர் உயரத்தில் விமானம் பறந்தபோது, லியூவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. விமானத்தில் இருந்த டாக்டர் பிரசவம் பார்க்க, பணிப்பெண்கள் உதவி செய்தனர். விமானம் தரையிறங்கியதும் தாயும், சேயும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நடுவானில் பிறந்த குழந்தைக்கு பரிசளிக்க விரும்பிய ஏர் ஏசியா நிறுவனம், வாழ்நாள் முழுவதும் குழந்தையும், தாயும் தங்கள் நிறுவன விமானங்களில் இலவச பயணம் செய்ய அனுமதி அளித்தது. இதுகுறித்து ஏர் ஏசியா நிறுவன செயல் இயக்குனர் மோசஸ் தேவநாயகம் கூறுகையில், ”நடுவானில் குழந்தை பிறந்தை கொண்டாட விரும்பினோம். தாய்க்கும் சேய்க்கும் வாழ்நாள் முழுதும் இலவச விமான பாஸ் அளித்துள்ளோம்” என்றா

Friday, October 23, 2009

20 அடி உயரத்தில் அதிசய சோளப் பயிர்

tblgeneralnews_46426028014 அவினாசி : அவினாசி அருகே, 20 அடி உயரத்தில் சோளப் பயிர் வளர்ந்துள்ளது. திருப்பூர், அவினாசி அருகே திருமுருகன்பூண்டி, சன்னிதி தெருவை சேர்ந்தவர் கண்ணன்; சிற்ப கலைக்கூடம் நடத்தி வருகிறார். இவரது வீட்டில், ஐந்து மாதத்துக்கு முன் சிறிய அளவில் சோளப் பயிர் வளர்ந்தது. நாட்கள் செல்லச் செல்ல செடி உயரமாக வளர்ந்து கொண்டே போனது. தற்போது, இந்தச் செடி 20 அடி உயரத்துக்கு வளர்ந்து நிற்கிறது. இந்த "மெகா உயர' செடியை அப்பகுதி மக்கள் அதிசயத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

கண்ணன் கூறுகையில், ""ஐந்து மாதமாக செடி வளர்ந்து கொண்டே செல்கிறது. தற்போது 20 அடிக்கும் மேல் வளர்ந்து விட்டது. செடிக்கு கீழே மண்புழு உரத்தை மட்டுமே போடுகிறோம். அடிக்கடி தண்ணீர் ஊற்றி வருகிறோம். விளைந்துள்ள சோளத்தை தாவர ஆராய்ச்சியாளர்கள் கேட்டால், கொடுக்கத் தயார்,'' என்றார்.

இவ்வாறு 20 அடி உயரத்தில் சோள செடி வளர்ந்துள்ளது குறித்து விவசாயத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ""பொதுவாக குறுகிய பரப்பளவில் சோளம் பயிரிட்டால் நல்ல உயரத்தில் வளரும். அதை மஞ்ச சோளம் என்பர். திருமுருகன்பூண்டியில் உள்ள ஒரு வீட்டில் வளர்ந்துள்ள செடிக்கு, அதிகளவில் மண்புழு உரம், தண்ணீர் ஊற்றியதால் 20 அடி வரைக்கும் வளர்ந்துள்ளது. கால் ஏக்கரில் சோளம் விதைத்து தனிப்பட்ட கவனம் செலுத்தினால், குறைந்தபட்சம் 10 அடிக்கு மேல் வளரும் வாய்ப்புள்ளது. மண்புழு உரத்தினால், கூடுதல் சத்து பயிருக்கு கிடைத்துள்ளது,'' என்றார்

5 ரூபா டாக்டர்

புனிதமாகப் போற்றப்படும் மருத்துவத்துறை வணிகமயமாகி வரும் இந்தக் காலத்தில் சேவை நோக்கத்தோடு செயல்படும் மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ஓய்வுபெற்ற அரசு மருத்துவ அதிகாரி ஜி.புஷ்பவனம்.

11k35சாதாரணமாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்குச் சென்றாலே "கணினி பில்' போட்டு பணம் கறக்கும் இந்த ஹைடெக் "மெடி' யுகத்தில், வெறும் 5 ரூபாய்க்கு மருத்துவச் சிகிச்சை அளித்து வருகிறார் இவர்.

தற்போது 63 வயதாகும் புஷ்பவனம், மதுரை மாவட்டம், சோழவந்தானில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கிளினிக் நடத்தி வருகிறார்.

  எப்படி இந்த 5 ரூபாய் சிகிச்சை? என அவரிடம்  கேட்டோம்.

""மருத்துவம் என்பது நோயாளியின் நோயைத் தீர்க்கும் பணியாக இருக்க வேண்டுமே ஒழிய, பணத்தைப் பறிக்கும் ஒரு கருவியாக இருக்கக்கூடாது என்பது என் எண்ணம்.

எப்பொருளும் விலையின்றி கொடுத்தால் மதிப்பிருக்காது. அதனால்தான், குறைந்த கட்டணமாவது வாங்கி இச் சேவையை அளித்து வருகிறேன்.

28 ஆண்டுகளாக குறைந்த கட்டணத்தில் இச் சேவையைச் செய்து வருகிறேன். தொடக்கத்தில் ரூ.3 கட்டணம்தான் வசூலித்தேன். தற்போது ரூ.5 வசூலிக்கிறேன். இக்குறைந்த கட்டணத்தில் சிசிச்சை அளிப்பதற்கு போதும் என்ற மனநிறைவுதான் காரணம்.

  நான் வசித்த பகுதிகள் பெரும்பாலும் கிராமப்புற பின்னணி கொண்டதால், மருத்துவத்துக்கு பல ஆயிரம் பணம் செலவழிக்கும் நிலையில் பெரும்பாலானோரும் இல்லை என்பதை நன்கறிவேன்.

இதனால், புற்றுநோயாளிகள், மனவளர்ச்சி குன்றியோர், தொழுநோயாளிகள், காசநோயாளிகள் என்றால் கட்டணம் வாங்குவதில்லை.

  இதுதவிர, அவசர நேரத்தில் தொலைபேசி மூலமும் தெரிந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பேன்'' என்று கூறும் புஷ்பவனம், தொழுநோயாளிகள், காசநோயாளிகளுக்கு தரமான இலவச சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லும்படி பரிந்துரையும் செய்கிறாராம்.

500-க்கும் மேற்பட்ட இலவச மருத்துவ முகாம்களில் கலந்துகொண்டுள்ளதாக கூறும் இவர், இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் சேவை செய்ய விரும்புவதாக தெரிவிக்கிறார் இந்த வித்தியாசமான மருத்துவர்.

Thursday, October 22, 2009

தனியாக உலகம் சுற்றும் வாலிபி

tblworldnews_46753656865 சிட்னி: ஆஸ்திரேலியாவை சேர்ந்த 16 வயது பெண்,  உலகம் முழுவதும் படகில் தனியாக  சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஜெசிகா  வாட்சன். 16 வயதான ஜெசிகா, படகு ஓட்டுவதில் வல்லவர். மின்னணு உபகரணங்களை கையால்வதிலும், கடல் பயணம் செய்வதிலும் தேர்ந்தவர். இந்த திறமையை வைத்து கொண்டு உலகம் முழுவதும் 240 நாட்களில் 38 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை படகில் சுற்றி வர கிளம்பி விட்டார்.

கடந்த வாரம் சிட்னி துறைமுகத்தில், தனது பயணத்தை துவக்கிய ஜெசிகாவை, அவரது பெற்றோர் கட்டி தழுவி கண்ணீர் மல்க விடை கொடுத்தனர்.  வழியனுப்ப வந்த துணை பிரதமர் ஜூலியா கிலார்டு குறிப்பிடுகையில்,  "ஜெசிகாவின் துணிச்சல் எனக்கு நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும், அவர் பாதுகாப்பாக இந்த பயணத்தை முடித்து திரும்ப வாழ்த்துகிறேன்' என்றார். எந்தவித பயமும் இல்லாமல், 34 அடி நீளமுள்ள பாய்மர படகை லாவகமாக இயக்கி தன் பயணத்தை தொடர்ந்துள்ள ஜெசிகா, தான் செல்லும் இடங்களை பற்றிய தகவல்களை, தன் நண்பர்கள் மற்றும் கடற்படை வல்லுனர்களிடம் தெரிவித்து வருகிறார்.

40 அங்குல 'டிவி'க்கு அமெரிக்காவில் தடை

lg-xcanvas-david-led-hdtv

சாக்ரமேன்ட்டோ: அதிக மின்சாரத்தை விழுங்கி, உலக வெப்பமயமாதலுக்கு காரணமாகிறது  என்று கூறி, 40 அங்குல அகலத்துக்கு மேல் உள்ள பெரிய்ய்ய "டிவி'க் களுக்கு கலிபோர்னியா மாநிலம் தடை விதிக்க முடிவு செய்துள்ளது. உலக வெப்பமயமாதலுக்கு மின்சார பயன்பாடு முக்கிய காரணமாகிறது. அதை குறைக்க வேண்டும் என்று, கலிபோர்னியாவை சேர்ந்த பல சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.  மின்சார பயன்பாடு குறித்த ஆய்வை மேற்கொண்ட இந்த மாநில எரிசக்தி கமிஷன்,"பெரிய "டிவி'க் களால் அதிக மின்சாரம் செலவாகிறது. அதை தடை செய்யலாம்' என்று பரிந்துரை செய்தது.

கவர்னர் ஆர்னால்டு ஷூவர்ஸ்நெக்கர், பிரபல ஹாலிவுட் நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர். குடியரசு கட்சி சார்பில் கவர்னராக பொறுப்பேற்றவர். டெர்மினேட்டர் உட்பட பல படங்களில் நடித்தவர். எரிசக்தி கட்டுப்பாட்டுக்கு இவர் ஆதரவு தெரிவித்து வருகிறார்.  கமிஷன் பரிந்துரையை ஏற்று, விரைவில் ஓட்டெடுப்பு நடத்தி தீர்மானம் போட திட்டமிட்டுள்ளார்.   இது நிறைவேறினால், சட்டமாக அமலுக்கு வரும். அமலுக்கு வந்தால், 2013 முதல் 40 அங்குல அகலத்துக்கு மேல் உள்ள "டிவி'க்களை தயாரித்து விற்க முடியாது.

கமிஷனின் இந்த  முடிவை "டிவி' தயாரிப் பாளர்கள் எதிர்த்துள்ளனர். "பெரிய "டிவி' என்பது தொழில்நுட்ப வளர்ச்சியை காட்டுகிறது. அதை தடை செய்யக்கூடாது; மேலும், மற்ற  "டிவி'க்களை விட, அதன் பயன்பாடு குறைவு தான். அதனால், மின்சார தேவையும் குறைவாகத்தான் இருக் கும். இப்படி இருக்கும் போது, இதை தடை செய் வது சரியான முடிவல்ல' என்று தெரிவித்துள்ளனர். கலிபோர்னியா முக்கிய மாநிலம். அந்த மாநிலத்தில் கொண்டு வரப்படும் சட்ட முடிவுகள், மற்ற மாநிலங்களை  பின்பற்ற வைக்கும். அதனால், பெரிய "டிவி'க்கு வரும் தடையும் மற்ற மாநிலங்களில்  சட்டமாக கொண்டு வரப்படும் என்பதால், "டிவி' தயாரிப்பாளர்கள் வரிந்து கட்டி எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.

பாம்பு மசாஜ் பண்ணலாமா?!!!!

high2

மெல்போர்ன்: பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பதெல்லாம் பழசு. நெளியும் பாம்புகளை உடலின் மீது விட்டு மசாஜ் செய்து கொள்வது புதுசு. ஆஸ்திரேலியாவில் இந்த புதுமையான பிசினஸ் இப்போது சக்கை போடு போடுகிறது. மெல்போர்ன் நகரைச் சேர்ந்த பிசியோதெரபி நிபுணர் அடா பராக். இவரது பண்ணை வீட்டின் செடிகளில் விஷம் இல்லாத பாம்புகளை தவழ விட்டு வளர்த்து வருகிறார். அவர் வீட்டுக்கு சிகிச்சை பெற வருவோரில் பலர், செடியில் ஊர்ந்து கொண்டிருக்கும் பாம்புகளை (விஷம் இல்லை என்று தெரிந்ததால்) தொட்டுப் பார்த்து சிலிர்ப்பதுண்டு. இதை பல நாட்கள் கவனித்தார் அடா. அடடா, இதையே ஒரு பிசினஸ் ஆக்கிவிடலாமே. எவ்வளவு நாள்தான் கை வலிக்க நாமே மசாஜ் செய்வது, என்று துள்ளி குதித்தார். உடனே பிசினசை தொடங்கினார். ”இவ்விடம் பாம்பு மசாஜ் செய்யப்படும். அத்தனை வலிகளும் பறந்து விடும்” என்று அறிவித்தார். அடா செய்த மசாஜுக்கு வந்தவர்களைவிட இப்போது அதிக கூட்டம் வருகிறதாம். இதுபற்றி அடா பராக் கூறுகையில், ”பாம்பு மசாஜை மக்கள் விரும்புகின்றனர். உடல் மீது விஷமற்ற பாம்புகளை ஊர்ந்து செல்ல விடுவதால் மனம் லேசாவதாகவும், உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதாகவும் இங்கு வருபவர்கள் கூறுகின்றனர்” என்றார். இந்த நூதன மசாஜுக்காக 6 பல ரக பாம்புகளை வைத்துள்ள அடா, ஒரு முறை சிகிச்சைக்கு ரூ.3,750 கட்டணம் வசூலிக்கிறார். செலவைக் கேட்டதும் விஷமுள்ள பாம்பைக்கூட கையில் பிடிக்கலாம் என்று தோன்றுகிறதா?

ரூம் போட்டு யோசிப்பாங்களோ!!! 

 

xin_33210052414226563111148 Snake_Massage_1bizarre-spa-01-g snake_1

Monday, October 19, 2009

கடலுக்கு அடியில் அமைச்சரவை கூட்டம் - video

scuba-diving-introduction
scubadiving

புவி வெப்பமயமாவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, கடலுக்கடியில்,  அமைச்சரவை கூட்டம் நடத்தும் புதுமையான திட்டத்தை செயல்படுத்த மாலத் தீவு அதிபர் முகமது நசீத் முடிவு செய்துள்ளார். உலக நாடுகள் கார்பனை அதிகம் வெளியிடுவதால், புவி வேகமாக வெப்பமயமாகி வருவதாக சுற்றுச்சூழல் துறை நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால், கடல்நீர் மட்டம் அதிகரித்து, கடலோரத்தில் உள்ள தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர். இதில் அதிக அபாயத்தில் இருப்பது, மாலத் தீவில் உள்ள சிறிய தீவுகள் தான், என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து, மாலத் தீவு அதிபர் முகமது நசீத், புவி வெப்பமயமாவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக, மாலத் தீவில் உள்ள தீவுகள் கடலுக்குள் மூழ்கும் சூழ்நிலை ஏற்படுமானால், மக்களை பாதுகாப்பான ஒரு இடத்தில் குடியமர்த்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.
இதற்காக, உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அதிரடியாக புதுமையான ஒரு திட்டத்தை செயல்படுத்த அதிபர் முகமது நசீத் முடிவு செய்துள்ளார்.
இதன்படி, அக்டோபர் 17ம் தேதி, கடலுக்கு அடியில் 20 அடி ஆழத்தில் தனது அமைச்சரவை கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளார். இதில், அமைச்சரவையில் உள்ள 14 அமைச்சர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதுகுறித்து, மாலத் தீவு அதிபர் மாளிகை அதிகாரி அமிதான் சவுனா கூறியதாவது:
கிருபிஷி என்ற தீவுப் பகுதியில் கடலுக்கு அடியில் அமைச்சரவை கூட்டம் நடக்கவுள்ளது. இதில், பங்கேற்பதற்காக, அமைச்சர்கள் அனைவரும் தலைநகர் மாலேயில் இருந்து அதிவிரைவு படகில் அந்த தீவுக்கு செல்லவுள்ளனர். 20 நிமிட பயணத்திற்கு பின், கிருபிஷி தீவை அடையும் அமைச்சர்கள், அங்கு கடலுக்கு அடியில் 20 மீட்டர் ஆழத்தில் ஆலோசனை நடத்துவர். தண்ணீருக்கு அடியில் கருத்துக்களை எப்படி பகிர்ந்து கொள்வது, நீச்சலடிப்பது என்பது குறித்த சிறப்பு பயிற்சிகளை தற்போது மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அமிதான் சவுனா  கூறினார்
கேட்கறதுக்கே ஆச்சரியமா இல்ல!!

Monday, October 12, 2009

எங்க கிராமத்த காணோம்- மீண்டும் ஒரு அத்திப்பட்டி

tblSambavamnews_56838625670 TN_Districts_Thoothukudi

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே, காணாமல் போன கிராமத்தை மீட்டுத்தரக்கோரி, பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி, மனு கொடுத்தனர். மாவட்ட கால்நடை வளர்ப்போர் மற்றும் பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் பொன்கருப்பசாமி தலைமையில் சங்கரப்பேரி ஊராட்சி பொதுமக்கள் ஏராளமானோர், நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

"அந்த ஊராட்சிக்குட்பட்ட 247.10 ஏக்கர் நிலத்தைக்கொண்ட புலிப்பாஞ்சன்குளம் கிராமத்தை காணவில்லை. மேலும் அந்த ஊரில் இருந்த புலிப்பாஞ்சன்குளம், நித்ய கல்யாணி குளங்களை தனிநபர் ஒருவர் போலி ஆவணம் தயாரித்து, வேறு நபர்களுக்கு பட்டா போட்டு விற்பனை செய்து வருகிறார். எனவே, காணாமல் போன கிராமத்தை மீட்டு, மோசடியாக குளங்களை விற்றுவரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோரிக்கை மனுவை டி.ஆர்.ஓ., துரை.ரவிச்சந்திரனிடம் அளித்தனர்.

நடந்தது என்ன: இதுகுறித்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ""புலிப்பாஞ்சன்குளம் கிராமத்தில் வசித்தவர்கள் அங்கு ஏற்பட்ட வறட்சி காரணமாக பக்கத்து ஊர்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன் இடம் பெயர்ந்து சென்றுவிட்டனர். அங்கு யாரும் வசிக்காததால் அந்த கிராமம் காணாமல் போய்விட்டது என்பது சரியல்ல. அந்த பகுதி அப்படியேதான் உள்ளது. மேலும் அங்குள்ள குளங்களை தனி நபர் ஆக்ரமித்தது தொடர்பாக வழக்கு உள்ளது'' என்றார். இந்த வித்தியாசமான காரணத்தால், கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பலரும் ஆச்சரியப்பட்டனர்.

கல்லூரி பெண் விரிவுரையாளரின் மறுபக்கம்

நக்சலைட் இயக்கத்தின் உறுப்பினர்களான வெர்னன் கோன்சால்வேஸ் மற்றும் அருண் பெரைரா ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் கைது செய்யப் பட்டனர். அதன் பிறகு மும்பையில் நக்சலைட்டுகள் பிரச்னையில்லாமல் இருந்தது. இந்நிலையில் மும்பையில் மிக naxal1ரகசியமாக செயல்படும் நக்சல் இயக்கத்தின் பிரிவுக்கு முதுகலை பட்டதாரி பெண் ஒருவர் தலைமை தாங்குவது பற்றிய தகவல் தெரியவந்துள்ளது.

நக்சல் இயக்கத்தின் மும்பை பகுதி கமிட்டி செயலாளராக இருக்கும் இந்த பெண்ணின் பெயர் அஞ்சலா சோன்தக்கே. அஞ்சனா, முதுகலை பட்டப்படிப்பை முடித்து சந்த்ராப்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றியவர்.


1990களில் நக்சல் இயக்கத்தில் சேர்ந்தார். இன்ஜிஞ்சினியரான இவரது கணவர் மிலிந்த் தெல்தும்டே. மகாராஷ்டிரா மாநில செயலாளராக இருந்து வருகிறார். மாநில அளவில் நக்சல் இயக்கத்துக்கு நிதி திரட்டுவது மற்றும் ஆட்களை சேர்ப்பதை மிலிந்த் கவனித்து கொள்ள மும்பையில் இருந்து நிதி திரட்டுவது மற்றும் ஆட்களை சேர்க்கும் வேலையை அவரது மனைவி அஞ்சலா கவனித்து வருகிறார். சந்த்ராப்பூரில் இருந்து மும்பை வந்த பிறகு இந்த தம்பதி, ரகசியமாகவே வசித்து வருகின்றனர். ஆனால் மும்பையில் எந்த இடத்தில் இருக்கின்றனர் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி ஒரு போலீஸ் அதிகாரியிடம் கேட்ட போது,‘‘நக்சல் இயக்கத்தின் மூத்த நிர்வாகிகளில் அஞ்சனாவும் ஒருவர். அவர் மும்பையில் இருந்து கொண்டு ஆசிரியப் பணி செய்து வருவது பற்றி எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அஞ்சனா மற்றும் அவரது கணவரை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக உள்ளது‘‘ என்றார்.

கேட்கவே அதிர்ச்சியாயில்லை!!!

சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்

ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள சதாம் அரண்மனையில்தான் அமெரிக்க வீரர்களின் முகாம் உள்ளது. போர்ப் பணியை முடித்துவிட்டு நாடு திரும்பும் அமெரிக்க வீரர்கள், ஞாபகார்த்தமாக சதாம் உசேன் இருக்கையில் அமர்ந்து போட்டோ எடுத்துக் கொள்கின்றனர்.

இதத்தான் : ”சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்”  ன்னு சொல்வாங்க..

IRAQ-US-ARMY-CHAIR

Sunday, October 11, 2009

6 கிலோ தங்கத்தில் பிரமாண்ட நகை..

தீபாவளி மற்றும் துர்கா பூஜையை முன்னிட்டு கொல்கத்தாவில் உள்ள ஒரு நகைக்கடை நிறுவனம் 6 கிலோ தங்கத்தில் பிரமாண்ட நகையை உருவாக்கியுள்ளது.

இன்றைய விலையில் : 6*1000=6000/8=750 பவுன், 750 *11824 =88,68,000                 88 லட்சத்து 68 ஆயிரம் (செய்கூலி, சேதாரம் தனி)… 

தீபாவளிக்கு உங்க வீட்டம்மாவுக்கு வாங்கி கொடுங்க சந்தோஷ படுவாங்க :)

IND1037A

Saturday, October 10, 2009

ஊராட்சி தலைவரானார் உ.பி., பிச்சைக்காரர்

Beggar Extends his hand for Money 

மீரட் : சிறுவயதிலிருந்து பிச்சை எடுத்துத் திரிந்தவர், ஊராட்சி தலைவராக ஆகியிருக்கிறார். உ.பி., மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்திலுள்ள கைகேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தரம்வீர். "நாட்' என்ற நாடோடி இனத்தைச் சேர்ந்த இவர், தனது பத்தாவது வயதில் பள்ளிக்குச் செல்வதை விடுத்து பிச்சை எடுக்க ஆரம்பித்தார். இவரது வருமானத்தில்தான் குடும்பம் நாட்களைக் கடத்தி வந்தது. இவர் தனது பிச்சையில் ஒரு பகுதியைச் சேமித்து ,தன் தம்பியைப் படிக்க வைத்தார். இவரது தம்பி இப்போது மாநிலப் பொதுப்பணித்துறையில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றுகிறார்.

கடந்த 2005ல் இவரது கிராமத்தில் ஊராட்சி தேர்தல் நடந்தது. பிற்படுத்தப்பட்ட மற்றும் உயர்குடியினர் இவரைத் தங்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்து தேர்தலில் நிற்கவைத்தனர். தரம்வீரை எதிர்த்து ஜாதவ் இனத்தைச் சேர்ந்தவர் போட்டியிட்டார். தரம்வீர் வெற்றி பெற்றார். தனது கிராமத்தின் நலனுக்காக உழைத்து வரும் தரம்வீர்," முன்பு எனக்காகப் பிச்சை எடுத்தேன். இப்போது எனது கிராம மக்களுக்காகப் பிச்சை எடுக்கிறேன். இதுவரை 25 லட்ச ரூபாய் வரை கிராம வளர்ச்சிப் பணிகளுக்காக செலவழித்திருக்கிறேன். கிராமத்தின் சாலைகளை சிமென்ட் சாலைகளாக மாற்றுவதுதான் எனது இப்போதைய கனவு' என்று நெகிழ்கிறார். தரம்வீரின் நேர்மை, அர்ப்பணிப்பு குறித்து கிராம மக்களும் மாவட்ட அதிகாரிகளும் பெருமிதம் கொள்கின்றனர்.

ஆச்சரியமா இல்லை?

இப்படியும் ஒரு கிராமம்

திண்டுக்கல் : கிராம மக்களின் கூட்டு முயற்சியால் கடின உப்பு நீர் சுத்திகரிக்கப்பட்டு நல்ல குடிநீராக மாறியுள்ளது. பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதால் ஊராட்சி நிர்வாகத்திற்கும் வருமானம் கிடைக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் கோவிலூர் ஊராட்சிக்குட்பட்டது கோ.ராமநாதபுரம். இந்த ஊருக்கு நம்பிநாயக்கன்குளம், சுடுகாடு அருகில் இரண்டு இடங்களில் போர்வெல் அமைக்கப்பட்டு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்த தண்ணீர் மிகவும் உவர்ப்பு தன்மையுடன் காணப்பட்டதால் குடிக்க முடியாமல் மக்கள் மூன்று கி.மீ., சென்று குடிநீர் எடுத்து வந்தனர்.

tblHumanTrust_93192690611இந்த அவல நிலையை போக்க ஊராட்சி தலைவர் கண்ணன்(எ) விஜயபானு, நாட்டாமை ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி முடிவெடுத்தனர். சுவஜல்தாரா திட்டத்தின் கீழ் உப்பு நீரை நல்ல தண்ணீராக மாற்றி குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறுவது என முடிவு செய்யப்பட்டது. கிராம மக்கள் தங்கள் பங்களிப்பாக 50 ஆயிரம் ரூபாய் அளித்தனர். மத்திய, மாநில அரசு நிதியாக 4 லட்சத்து 50 ஆயிரம் அளிக்கப்பட்டது. மொத்தம் 5 லட்சம் ரூபாயில், உப்பு நீரை நல்ல நீராக மாற்றும் சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் தொட்டி அருகே அமைக்கப்பட்டது. போர்வெல் மூலம் கிடைக்கும் உப்பு தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு நல்ல நீராக ( மினரல் வாட்டராக) மாற்றப்படுகிறது. இந்த நிலையத்தில், மக்கள் ஒரு ரூபாய் காயின் போட்டால் 10 லிட்டர் நல்ல தண்ணீர் கிடைக்கும்.

இந்த சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் ஒரு மணி நேரத்தில் 500 லிட்டர் நல்ல தண்ணீர் பெற முடியும். இதன் மூலம் கிராம மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதன் மூலம், ஊராட்சிக்கும் வருமானம் கிடைக்கிறது. இந்த பணத்தில் ஊராட்சியின் சுகாதாரத்தையும் காக்க முடிகிறது. அனைத்திற்கும் மாவட்ட நிர்வாகத்தை எதிர்பார்க்காமல் இதுபோன்று அனைத்து கிராம ஊராட்சிகளும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பெறுவதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.

இந்த கிராமத்தைச் சேர்ந்த மங்கம்மாள்(62) கூறியதாவது: சுத்திகரிக்கப்படாத குடிநீரை குடித்த பலருக்கு கிட்னியில் கல் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தோம். தற்போது நல்ல குடிநீர் கிடைத்தது எங்களுக்கு மகிழ்ச்சி.

ராதாகிருஷ்ணன்(52): தண்ணீர் தான் அனைத்து நோய்களுக்கும் காரணம். இதனால் கிராம மக்களாகிய நாங்களே முடிவு செய்து நல்ல தண்ணீர் பெற சுத்திகரிப்பு நிலையம் அமைத்தோம். இந்த தண்ணீரை குடிக்கும் போது காய்ச்சல், சளி, தலைவலி எதுவும் ஏற்படவில்லை. ஆரோக்கியமாக இருக்கிறது.

சுதா(32): டாக்டரிடம் சென்று பல ஆயிரக்கணக்கில் செலவழிப்பதற்கு பதிலாக ஒரு ரூபாய்க்கு நல்ல தண்ணீர் கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஊராட்சி தலைவர் கண்ணன்(எ) விஜயபானு கூறியதாவது: எங்கள் கிராமத்திற்கு மட்டுமல்லாமல் சுற்றியுள்ள தங்கச்சியம்மாபட்டி, புளியம்பட்டி, கோவிலூர், கதிரனம்பட்டி, உட்பட பல ஊர்களை சேர்ந்த மக்களும் இங்கு வந்து நீரை பிடித்து செல்கின்றனர். 20 ஆயிரம் லிட்டரில் தனி தொட்டியும் அமைக்கப்படுகிறது. நான் தலைவராக இருந்து நல்ல குடிநீர் வழங்குகிறோம் என்று எண்ணும் போது எனக்கு பெருமையாக உள்ளது என்றார்

இப்படியும் ஒரு கிராமம். கேட்கறதுக்கே ஆச்சரியமா இல்ல!!!

Thursday, October 8, 2009

காம அனுபவங்களைப் பேட்டியளித்தவருக்கு 1000 சவுக்கடி, ஐந்து ஆண்டு சிறை

saudiflogcps get_prisson--200x150

08 அக்டோபர் 2009,தனது காம சல்லாப அனுபவங்களை வெளிப்படையாய் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சவூதி நாட்டைச் சேர்ந்த அப்துல் ஜவாத் என்பவருக்கு ஆயிரம் கசையடியும், ஐந்து வருட சிறைத் தண்டனையும் அளித்து சவூதி நாட்டு நீதிமன்றம் புதனன்று தீர்ப்பளித்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட மற்ற மூன்று நபர்களுக்கும், முறைகேடான காம சங்கதிகளை பகிரங்கமாய் பேசியதால் 300 கசையடிகளும் இரண்டு வருட சிறைத் தண்டனையும் அளித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

LBC எனப்படும் லெபனான் நாட்டு தொலைக்காட்சி நிறுவனம் "Bold Red Line" எனப்படும் நிகழ்ச்சியொன்றில் சவூதியைச் சேர்ந்த அப்துல் ஜவாத் என்பவரின் காம சல்லாப அனுபவங்களின் வெளிப்படையான பேட்டியை ஜூலை 15 ஒளிபரப்பியிருந்தது. ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட சவூதி மக்களிடையே இது பெருத்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இஸ்லாம் பிறந்த பூமியான சவூதி அரேபியாவில் தனிநபர் ஒழுங்கு, மதம் சார்ந்த வரையறைக்குட்பட்டது. உறவுமுறை தொடர்பல்லாத ஆண்களும் பெண்களும் சமமாய் கலந்து பழகவே வரம்புகள் உள்ள நிலையில் இத்தகைய பேட்டி பெருத்த சர்ச்சையை கிளப்பியது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கில் மேற்சொன்ன தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அப்துல் ஜவாத் சார்பாய் வாதாடிய வழக்கறிஞர் சுலைமான அல் ஜுமை (Sulaiman al-Jumeii) தனது கட்சிக்காரர் லெபனான் நாட்டு தொலைக்காட்சி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டுள்ளார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன் என்று தெரிவித்துள்ளார்

பார்வையற்ற வாலிபரை காதலித்து மணம் முடித்தார் முதுகலை பட்டதாரி பெண்

tblHumanTrust_94246637822

கோபிசெட்டிபாளையம் : ஈரோடு அருகே, பார்வையற்ற வாலிபரைக் காதலித்து திருமணம் செய்து,"காதலுக்கு கண் தேவை இல்லை' என்று நிரூபித்துள்ளார், முதுகலை பட்டதாரிப் பெண். ஈரோடு மாவட்டம், நம்பியூரை சேர்ந்தவர் கருப்பசாமி (33); பார்வையற்றவர். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். பள்ளிக் குழந்தைகளுக்கு இசைப் பயிற்சி அளித்து வருகிறார். கோபி அருகே, காசிப்பாளையம் இண்டியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரங்கன் மகள் ரத்தினாள் (25); எ.காம்., பட்டதாரி. இவர்கள் இருவரும், இரண்டு ஆண்டுகளுக்கு முன், நண்பர் திருமணத்தில் முதன் முறையாக சந்தித்தனர். நட்பாக பேசத் துவங்கிய இருவரும், நாளடைவில் தீவிரமாக காதலிக்கத் துவங்கினர். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த போது, ரத்தினாள் குடும்பத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதைப் பொருட்படுத்தாமல், ரத்தினாள் கருப்பசாமியை அழைத்துக் கொண்டு, கோபியில் உள்ள கோவிலில் நேற்று திருமணம் செய்து கொண்டார். பின் பாதுகாப்பு கேட்டு, கோபி அனைத்து மகளிர் போலீசில் மனு கொடுத்தனர்

வாழ்க உங்க நல்ல மனம்

LinkWithin

Related Posts with Thumbnails