Tuesday, December 29, 2009

கன்றுக்குட்டி நெற்றியில் சிலுவை

 

holy-cow

மெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது கனக்டிகட் நகரம். இங்குள்ள உள்ள சின்ன ஊர் ஸ்டெர்லிங். இங்குள்ள ‘பட்டர் கப்’ என்ற மாட்டுப்பண்ணையில் கடந்த வாரம் கன்றுக்குட்டி ஒன்று பிறந்தது. இதன் உடல் முழுக்க காப்பி நிறத்தோலால் சூழப்பட்டிருக்க, நெற்றிப்பொட்டில் மட்டும் கிறிஸ்துவின் சின்னமான க்ராஸ் வடிவில் வெண்மையான தோல் அமைந்திருக்கிறது. இதைப்  பார்த்து ஆச்சரியமடைந்த பண்ணை முதலாளி ப்ராடு டேவிஸ், ‘இது புனிதமான கன்றுக்குட்டி. இதன் மூலம் ஆண்டவன் ஏதோ தகவலை பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்’ என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்.  அதிசயத் செய்திகளைத் தேடி அலையும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி சேனல்களும் ‘பட்டர் கப்’  மாட்டுப்பண்ணையில் குவிந்து, மோசஸ் என்ற இந்த அதிசயக் கன்றுக்குட்டி மீது தொடர்ந்து கேமிரா ப்ளாஷை அடித்து வருகின்றன.

ஆயிரம் பெரியார் வந்தாலும்…..

Wednesday, December 16, 2009

காசேதான் கடவுளடா… (உண்மையாகவே)

சென்னிமலை : பக்தர் கனவில் தோன்றி ஆண்டவன் உத்தரவிட்டதன் படி, சிவன்மலை முருகன் கோவிலில், 500 ரூபாய் நோட்டை வைத்து பூஜை நடக்கிறது. இதனால், நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்குமென பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

tblSambavamnews_21900576354 உலகில் எந்த முருகன் கோவிலிலும் இல்லாத சிறப்பு, திருப்பூர் மாவட்டம் சிவன்மலை முருகன் கோவிலுக்கு உண்டு. இங்கு மூலவராக வீற்றிருக்கும் சுவாமி சுப்பிரமணியர், பக்தர்களின் கனவில் தோன்றி கூறும் பொருட்களை, கோவிலில் உள்ள கண்ணாடி பெட்டியில் வைத்து, அதற்கு தினமும் சிறப்பு பூஜை நடத்துவது தொன்றுதொட்டு நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டம் வெள்ளோடு மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது கனவில் தோன்றிய முருகப் பெருமான், "500 ரூபாய் பணத்தை வைத்து பூஜிக்குமாறு' உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி கிருஷ்ணமூர்த்தி, திருக்கோவில் நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தார். முறைப்படி மூலவர் சன்னிதியில் பூ மூலம் உத்தரவு கேட்கப்பட்டது.

பூ உத்தரவு கிடைத்ததால், கடந்த வெள்ளிக்கிழமை முதல், 500 ரூபாய் பணத்தை, கோவிலில் உள்ள கண்ணாடி பெட்டிக்குள் வைத்து தினமும் பூஜை நடக்கிறது. இதன்மூலம் நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என பக்தர்கள் கூறுகின்றனர். கடைசியாக இக்கோவிலில் வெற்றிலை, பாக்கு வைத்து பூஜை நடந்தது. இதனால், நாடெங்கும் சுபகாரியங்கள் அதிகம் நடந்தன. அதற்கு முன் விபூதி வைத்து பூஜை நடந்தது. அப்போது, நாட்டில் அதிகப்படியான கோவில்களில் குடமுழுக்கு நடந்தது; மக்களிடம் ஆன்மிக ஈடுபாடும் அதிகரித்தது. அதற்கு முன், மண்ணை வைத்து பூஜை நடந்த போது, ரியல் எஸ்டேட் தொழில் செழித்து, பூமி விலை பல மடங்கு அதிகரித்தது. அதற்கு முன் ஒரு படி அரிசியும், நூறு ரூபாய் பணமும் வைத்து பூஜை நடந்தது. அதனால், அரிசி விலை பல மடங்கு உயர்ந்தது. இக்கோவிலில் துப்பாக்கியை வைத்து பூஜித்தபோதுதான் கார்கில் யுத்தம் துவங்கி; அது வெற்றியில் முடிந்தது. தற்போது 500 ரூபாய் பணம் வைத்து பூஜை நடப்பதால், அன்னிய செலாவணி பல மடங்கு உயர்ந்து, நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்குமென சிவன்மலை முருக பக்தர்கள் பெரிதும் நம்புகின்றனர்.

வந்தவாசிலேயும், திருச்செந்தூர்லயும், பலன் கிடைச்சிருக்கு. நீங்களும் வேண்டிக்கங்க, உங்க தொகுதில இடைத்தேர்தல் வரணும்னு.

Sunday, December 13, 2009

பாரதியின் இதுவரை வெளிவராத சொற்பொழிவு

பாரதியின் இதுவரை வெளிவராத சொற்பொழிவு
  கல்லினுள் உள்ள கடவுள் காயப்படுவதில்லை

ஆ.இரா. வேங்கடாசலபதி

முதலாம் உலகப் போர் முடிவுற்றதைத் தொடர்ந்து தம் புதுச்சேரி கரந்துறை  வாழ்க்கையை முடித்துக்கொண்டு பிரிட்டிஷ் இந்தியாவுக்குள் 20 நவம்பர் 1918இல் நுழைந்ததும் பாரதி கைதுசெய்யப்பட்டார். அரசியல் வாழ்க்கையைத் துறப்பதாக ஒப்புதல் கடிதம் எழுதி, bharathi-1திருநெல்வேலி மாவட்டத்தின் இரண்டொரு இடங்களில் மட்டுமே உறைவதாகவும் தாம் எழுதுவதையும் பேசுவதையும் சி. ஐ. டி துறையின் தணிக்கைக்கு உட்படுத்த உடன்படுவதாகவும் வாக்குறுதி அளித்ததின்பேரில் 14 டிசம்பர் 1918இல் விடுதலை செய்யப்பட்டு, தம் மனைவியின் சொந்த ஊரான கடையம் சென்றார் பாரதி. 1919 ஜனவரி 30இல் தம் எட்டயபுரம் நண்பர் ஒருவருக்குக் கடையத்திலிருந்து பாரதி எழுதிய கடிதத்தை ரா.அ. பத்மநாபன் வெளியிட்டுள்ளார். 1919 மே 2 அன்று எட்டயபுரம் மன்னருக்குப் பாரதி எழுதிய ஓலைத்தூக்கும் கிடைக்கிறது.

இவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் பாரதி சென்னைக்கு வந்திருக்கிறார். மணி அய்யர் என்று அழைக்கப்பட்ட எஸ். சுப்பிரமணிய அய்யரின் தலைமையில் சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் 2 மார்ச் 1919 ஞாயிற்றுக்கிழமையன்று உரையாற்றியிருக்கிறார். சிறையிலிருந்து விடுதலையான பின்பு பாரதி கலந்துகொண்ட முதல் பொதுநிகழ்ச்சி இதுவேயாகலாம்.

எஸ். சுப்பிரமணிய அய்யர் (1842-1924) காங்கிரசின் முதல் மாநாட்டில் (1885) கலந்து கொண்டவர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி. அன்னி பெசண்டின் பிரம்ம ஞான சபையிலும் ஹோம் ரூல் இயக்கத்திலும் முக்கியப் பங்காற்றியவர். ரவுலட் சட்டத்தைக் கண்டித்தவர். பாரதி சிறைபட்டபொழுது அவர் விடுதலை பெற முயன்றவர்களில் இவரும் ஒருவர்.

பாரதி தம் இறுதிக் காலத்தில் கொண்டிருந்த தத்துவ, ஆன்மிகப் போக்கை இவ்வுரை புலப்படுத்துகிறது. இதில் பாரதி வெளிப்படுத்தும் கருத்துகள் ‘பாரதி அறுபத்தாறு’ என அறியலாகும் பாடல்களோடு ஒத்திசைகின்றன. இவ்வுரையினிடையே பாரதி பாடிய இரணியன்-பிரகலாதன் தொடர்பான பாடல் ‘பாரதி அறுபத்தா’றில் (பாடல் எண்: 15) இடம்பெறும் செய்யுளாகலாம். இதன்வழி ‘பாரதி அறுபத்தாறு’ பாடல்கள் இயற்றப்பட்ட காலத்தைக் கணக்கிடலாம்.

பாரதியின் உரை முதன்முறையாக இங்கு அச்சேறுகிறது.

திரு. சுப்பிரமணிய பாரதி, தாம் இயற்றிய தேசபக்திப் பாடல்களைக் கணீரென்ற குரலில் பாடியவாறு தம் உரையைத் தொடங்கினார். ‘எல்லா உயிர்களும் ஒன்று’ என்பதை அவர் முதலில் ஸ்தாபித்தார். சக்தி இல்லாமல் வஸ்து இல்லை, வஸ்து இல்லாமல் சக்தி இல்லை’ என்றார் ஹாக்கெல். இவ்வுலகை வியாபித்திருக்கும் தெய்வாம்சத்தின் - பிரபஞ்சசாரத்தின் - இரு அடிப்படையான தன்மைகள் வஸ்துவும் ஜீவனுமாம். (ஹாக்கெல் எழுதிய) ‘புதிர்’ பிரசுரமான பிறகு வேதியியலில் பல முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஹாக்கெல் தம் ‘புதிர்’ என்ற நூலைப் பிரசுரித்தபோது அணுக்கள், எலெக்ட்ரான்கள் பற்றிய நவீனக் கோட்பாட்டையும் அதன் முழு முக்கியத்துவத்தையும் கணக்கிலெடுத்துக்கொள்ள இயலவில்லை. வஸ்துவின் பிளவுபடாத்தன்மையை எலெக்ட்ரான் கோட்பாடு மிகத் தெளிவாக நிறுவியுள்ளது. மிக அடிப்படையான கூறு மின்தன்மை உடையது என்பது கண்டறியப்பட்டு, வஸ்து என்பது சரீரமற்ற மின்தன்மைகளின் கூட்டு என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ‘சரீரமற்ற’ எனில் அலௌகீகம் எனப் பொருள்படும். லார்மர் மற்றும் லாரெஞ்சு, தாம்சன் மற்றும் ஆலிவர் லாட்ஜ் ஆகியோரின் ஆராய்ச்சிகளின் மொத்த விளைவு என்னவென்றால் ‘வஸ்து’ என்பது சக்தியின் செம்மைப்படாத வடிவம் என்பதே. சக்தி என்பது மனத்தின் வெளிப்பாடே என்றும் பிரசங்கி மேலும் கூறினார். வஸ்துவின் முந்திய நிலையே சக்தி என்பதால், மனமே சக்தியின் மூல வடிவமாகும். ஒரு தனி மனம் பிரபஞ்சமாக வெளிப் படுவதில்லை; எல்லாம் தழுவிய பிரபஞ்ச மனமே எப்போதும் தன்னை வெவ்வேறு பிரபஞ்ச - பௌதீக, ஜீவாதாரமான, மனரீதியான, ஆன்மிக - மண்டலங்களாக வெளிப்படுத்திக்கொள்கின்றது. நெருப்பும் வெப்பமும் எங்கும் பொதிந்துள்ளது போலவே, உயிரும் பிரக்ஞையும் பிரபஞ்சத்தில் பொதிந்துள்ளன; ஆனால் சில குறிப்பிட்ட சூழல்களில் மட்டுமே அவை செயல்பட்டு வெளிப்படுகின்றன. அணுவின் பிரக்ஞை பற்றிய கோட்பாட்டை முன்மொழிந்தவர்கள்கூட ஒரு மனிதன் அல்லது தவளைக்கு இருப்பதுபோல் ஓர் அணுவுக்குப் பிரக்ஞை உண்டு என்று கூறமாட்டார்கள். மனம் என்பது சக்தியின் ஒரு வடிவம் என்றார் ஹாக்கெல்; சக்தியே மனத்தின் வெளிப்பாடுதான் என்பதைப் பிரசங்கி நிறுவிக்காட்டினார்.

‘எல்லாம் ஒன்றே. எல்லாம் கடவுள்’ என்பதே ஸ்பினோஸா, கொய்தே, ஷொப்பன்ஹைர், ஷெல்லி ஆகியோரின் நிலைப்பாடு. வேத, உபநிஷத்துகள் மற்றும் எல்லா மதங்களின் ஞானிகள், புலவர்களின் நம்பிக்கையும் அதுவே. இக்கோட்பாட்டை உணர்த்தும் இரணியன், பிரகலாதன் பற்றிய ஒரு தமிழ்ப் பாடலையும் பிரசங்கி பாடினார். நித்தியத்தின் இன்பத்தை அறிந்தவர்க்கு அச்சம் இல்லை. எல்லா உயிர்களின் ஒருமைத் தன்மையும் தெய்வத்தன்மையும் உலக மதங்கள் எதனுடையதன் சாரத்திற்கும் பொருந்தாததன்று. இந்திய துவைதத்தில் சைவ, வைணவ வழிபாட்டு முறைகள் இதற்குப் போதுமான உதாரணங்களாகும். இவ்வுலகம் கடவுளின் வடிவமல்ல, அவனுடைய சிருஷ்டியே ஆகும் என்றாலும்கூட இவ்வுலகின் தெய்வத்தன்மையை எவரும் மறுக்க இயலாது. கடவுளின் கைவண்ணம் தெய்வீகமானதாகவே இருக்கவியலும். தந்தை கடவுளாயிருக்கும் பட்சத்தில் மைந்தன் தவளையாக இருக்க முடியாது. எவர் ஒருவரும் கடவுளின் மைந்தனாகும் பட்சத்தில் அவனும் கடவுளேயாவான். விஷ்ணு புராணம், ‘நீயே சூரியன்; நீயே கிரஹங்களும்; வடிவம் கொண்டதும் கொள்ளாததும்; காணப்படுவதும் காணப்படாததுமான அனைத்தும் நீயே’ என்று விஷ்ணுவை நோக்கிப் பரவுகின்றது.

வசிஷ்டர்முதல் வாமதேவர்வரை, அரவிந்த கோஷ்முதல் ஸ்ரீமதி அன்னி பெசண்டுவரை ஆன்மிக தேசியவாதிகள் அனைவரும் உண்மையை அதன் தூய வடிவில் நேருக்கு நேர் கண்டனர். ‘இந்த ஒருமைத் தன்மையை அறிவது, எல்லாத் தத்துவங்களின் நோக்கம் மட்டுமல்ல, இயற்கை பற்றிய முழு ஞானத்தின் நோக்கமுமாகும். இறைவனும் உலகமும் ஒன்றே என்ற கோட்பாட்டைச் சில ஞானிகள் கண்டஞ்சியதற்குக் காரணம் பிரபஞ்சம் அழியக் கூடியது, கடவுள் அழியாதவர் என்று அவர்கள் கருதியதாலேயாகும். எல்லா வஸ்துக்களும் எல்லா ஜீவன்களும் ஒன்றேயாகவும் தெய்வீகமானவையாக - சமஅளவில் தெய்வீகமானவையாகையால் மனிதர்கள் தேவ, தேவதைகளை அணுகுவதைப் போலவே மக்கள் அனைவரும் எல்லா வஸ்துக்களையும் ஜீவன்களையும் அணுக வேண்டும். உலகின் பல்வேறுபட்ட தன்மையை, அதாவது கடவுளின் எண்ணற்ற வடிவங்களை அவை எதிர்ப்படும் வகையிலேயே கருத வேண்டும். எல்லா வடிவங்கள், வஸ்துக்களின் அடிப்படையான ஒருமையையும் சம தெய்வீகத்தன்மையையும் உணரும் அதே வேளையில் பரிணாம வளர்ச்சியின் படிநிலைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எல்லாமே தெய்வீகம் என்பதால் சக மனிதரைக் கொல்வதோ ஏன் அடிப்பதோகூடத் தெய்வக் குற்றமும் பாவமுமாகும். ஆனால் ஒரு கல்லை உடைப்பதென்பது பாவமன்று. ஏனெனில் மனிதருள் உள்ள கடவுள் காயப்படுவார்; கல்லினுள் உள்ள கடவுள் காயப்படுவதில்லை. எந்த ஒரு சிருஷ்டியையும் தார்மீகமற்றதெனக் கூறக் கூடாது. எல்லாமே தெய்வீகமானதால், அனைவரும் கடவுளைப் போல் சிந்தித்து, பேசி, செயல்பட வேண்டும். பிரசங்கி பின்வரும் வார்த்தைகளுடன் தன் பேச்சை நிறைவு செய்தார். ‘நாம் எல்லாரும் கடவுளராக உறுதிபூண்டு வேத தீர்க்கதரிசனத்தை மெய்ப்பிப்போம். எல்லாச் சூழ்நிலைகளிலும் நன்மை, அன்பு, வலிமை, உறுதி, விடுதலை, அச்சமின்மை ஆகியவற்றைக் கொண்டிருப்போம். நீங்கள் உங்கள் தெய்வத்தன்மையை உணர்ந்து மற்றவர்களையும் தெய்வங்களாக நடத்தினால் அவர்களும் அவ்வாறே செய்வார்கள். ஏனெனில் அன்பு அன்பை ஈனுகிறது. எந்த உயிரையும் பறிக்காதீர். ஏனெனில் இயற்கை உங்கள் உயிரையும் பறித்துவிடும். எவரையும் துன்புறுத்தாதீர். எல்லார்மீதும் அன்பு செலுத்துக!’

‘தி ஹிந்து’, 4 மார்ச் 1919

ஆ. இரா. வேங்கடாசலபதி பதிப்பித்துள்ள ‘பாரதி கருவூலம்’ (காலச்சுவடு வெளியீடு) நூலின் இரண்டாம் பதிப்பிலிருந்து இந்தப் பகுதி வெளியிடப்படுகின்றது. பாரதி உரையாற்றிய இக்கூட்ட நடவடிக்கைகளின் முழு விவரத்தை இந்நூலில் காணலாம்

நன்றி : kc-logo

Saturday, December 12, 2009

குடிக்க வேணாம் - விழுங்கலாம்: மாத்திரை வடிவில் வோட்கா

1_Absolut Vodka- quelle PR_0  மாஸ்கோ : பிரபல சர்வதேச மதுபானம் "வோட்கா' மாத்திரை வடிவில் விற்பனைக்கு வரப்போகிறது."வோட்கா' மதுபானம், இப்போது பாட்டிலில் திரவ வடிவில் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை மாத்திரை வடிவில் விற்பனை செய்ய முயற்சி மேற் கொள்ளப்பட்டு வருகிறது.ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் இவேஜினி மோஸ்கலேவ். இவர் இது தொடர்பாக புது தொழில்நுட்பம் கண்டுபிடித்துள்ளார்."இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, வோட்கா மட்டுமல்ல, எந்த வித மதுபானத்தையும் திரவ நிலையில் இருந்து படிக நிலைக்கு கொண்டு வரலாம்' என்று இவர் கூறியுள்ளார்.vodka-pillsDRUNKARD

Tuesday, December 8, 2009

விடாமல் துரத்தும் பருந்து : பயந்து வாழும் வாலிபர்

spread eagle females, Bald Eagle, Haliaeetus leucocephalus, Alaska, Homer, USAதலச்சேரி : மருத்துவமனையில் பணியாற்றும் வாலிபரை பழிதீர்க்கும் எண்ணத்துடன் பருந்து ஒன்று விடாமல் துரத்தி துரத்தி கொத்தி வருகிறது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி அடுத்த கோடியேறியில் உள்ள மலபார் புற்றுநோய் மைய கேன்டீனில் பணியாற்றி வருபவர் ஷிஜின்ராஜ். இவர், எப்போது வெளியே சென்றாலும் அவருக்காக காத்திருக்கும் பருந்து ஒன்று பறந்து வந்து அவரை கொத்த தொடங்கி விடும்.

கடந்தாண்டு வரை அம்மருத்துவமனை கேன்டீனில் அவருடன் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவாலிபரும் பணியாற்றி வந்தார். இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பார்கள். அப்போது, கேன்டீனில் இருந்து வெளியே வீசப்படும் உணவுக் கழிவுகளை தின்ன பருந்து கூட்டம் அங்கே வருவதுண்டு. அவ்வாறு பறந்து வந்த பருந்தின் மீது வங்கதேசத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருநாள் வென்னீர் ஊற்றினார். அதற்கு பிறகு தான் இதுபோன்ற சம்பவம் தொடர்கதையாகி விட்டது. ஆனால், பருந்தின் மீது வென்னீர் ஊற்றிய வங்கதேச வாலிபர், கேன்டீன் கட்டடப் பணி முடிந்ததும் தாயகம் திரும்பி விட்டார். அவரை போலவே தோற்றமளிக்கும் ஷிஜின்ராஜ் மீது பருந்தின் பழி வாங்கும் எண்ணம் திரும்பி விட்டது.

ஒரு வருடமாக பருந்தின் தாக்குதல் காரணமாக பலரும், "பருந்து ஷிஜின்' என்றே அவரை அழைக்கத் தொடங்கி விட்டனர். பருந்தின் தாக்குதல் காரணமாக அவரது உடலின் பல இடங்களில் காயங்கள், தழும்புகள் தோன்றி விட்டன. களறி சண்டை பயிற்சி முடித்துள்ள அவர், பல முறை அதை பயன்படுத்தி தான் பருந்தின் தாக்குதலில் இருந்து தப்பி வந்துள்ளார். அவர் வெளியே செல் லும்போது சாக்குப்பையால் முகத்தை மூடிக் கொண்டு செல்ல வேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவருடன் செல்பவர்களை பருந்து தாக்குவதில்லை என்று மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் பல நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் தெரிவித்தனர

Thursday, November 26, 2009

பாபர் அலி(16) -மிக இளமையான தலைமை ஆசிரியர்

babar_ali 16 வயதில் உலகையே தன்னை பார்க்கச்  செய்யும் அளவுக்கு ஒரு சமூக மாற்றத்தை செய்திருக்கும், உலகின் மிக இளமையான தலைமை ஆசிரியர் பாபர் அலி.

கல்வியில் மிகவும் பின்தங்கிய மேற்குவங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் தான் என்னுடைய சொந்த ஊர். போக்குவரத்து வசதி சரிவர செய்யப் படாத கிராமத்தில், 10 கிலோ மீட்டர் தொலை வில் இருக்கும் பள்ளிக்கு, அதிகாலை 6 மணிக்கே நடைப் பயணத்தை தொடங்கி விடுவேன்.

மாலை வீடு திரும்பியதும், நான் படிச்சதை, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பேன். பள்ளிக்கூடம் போறதே பெரிய கனவா எனக்கு இருந்துச்சு. ஏன்_46536176_pupils_226னா, அரசாங்க பள்ளிக்கூடத்துல படிச்சாலும், சீருடை, புத்தகம், போக்குவரத்துன்னு, மாசம் 1,800 ரூபாய்  தேவைப்பட்டுச்சு. இந்த மிகப்பெரிய தொகையை கட்ட முடியாததால, பல பேரால பள்ளிக் கூடத் துக்கு போக முடியலை. ஆனா, எனக்கு கல்வியறிவு கொடுத்தே ஆகணும்ங்கிற என் பெற்றோரோட உறுதியும், ஆசிரியர்களோட ஊக்கமும் தான், என்னை இன்னிக்கு பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிச்சிட்டிருக்கு.

நான் தான், குடும்பத் தின் முதல் படிப்பாளியும் கூட. அப்படி எனக்கு கிடைக்கிற இந்த படிப்பு, என்னோட நண்பர்களுக்கும் கிடைக்கணும்னு நினைச்சேன். அதனால, சும்மா விளையாடிட்டிருக்கும் போது, ஸ்கூல்ல படிச்சதை எல்லாம், நண்பர் களுக்கு சொல்லிக் கொடுத்துட்டே இருப்பேன். ஸ்கூலுக்கு போகாமலேயே படிப்பு கிடைக்குதேன்னு, என் நண்பர்களும், வீட்டுலயே வந்து ஆசையா படிக்க ஆரம்பிச்சாங்க.

அப்படி தானா உருவாகிட்டது தான் இந்த ஸ்கூல்.என்னோட பள்ளியில், இன்றைக்கு 800 மாணவர்கள் படிக்கின்றனர். இன்னைக்கு வரைக்கும், வெட்டவெளி, மரத்தடியில தான் கிளாஸ் நடக்குது. இந்த நிலைமையை பார்த்துட்டு, நிறைய பேர் உதவுறாங்க. அதனால, சீக்கிரமே நல்லது நடக்கும்ன்னு எதிர்பார்க்கறேன். கல்வியறிவு இல்லாத நாடு, வளமான நாடாக மாறும் வாய்ப்புகள் குறைவு. எனவே, எனது இந்தியாவை வளமாக மாற்ற, நான் செய்யும் சிறு பணி இது.

பாபர் அலி பற்றிய  BBC Coverage இங்கே…

கார்ட்டூன் குரலுக்கு சொந்தகாரர்கள்

நியூஸ், சீரியல் என்று எதையும் பார்க்க விடாமல், கார்ட்டூன் சானலை மாற்றினால் “வீல்” என்று அலறும் குழந்தைகள் அனேகமாக எல்லார் வீட்டிலும் இருக்கும். கார்ட்டூனின் வசீகரம், படத்தில் மட்டுமல்ல, அதன் குரல்களிலும் இருக்கிறது என்பது சானலை Mute செய்தால் புரியும். முக்கியமாக Dora –வுடன், கூட பேசும், குழந்தைகளை கவனியுங்கள். அது மட்டுமல்ல பிரபல கார்ட்டூன்களின் குரல்கள் மாறினாலும் அது நமக்கு உறுத்தலாக தெரியும்.   (மைக் மோகனின் சுரேந்தர் குரல் போல்)

அப்படி, குழந்தைகளை கட்டுக்குள் வைத்திருக்கும் கார்ட்டூன்களின் குரல்கள்களுக்கு சொந்தகாரர்களைதான் கீழே பார்க்கிறீர்கள்.

டிஸ்கி: இது குழந்தைகளுக்கான பதிவு.. ( ”பெரியவர்கள்” Meg Griffin குரலுக்கு சொந்தகாரர்களை பார்த்து ஜொள்ளு விடவேண்டாம் )

Kathleen Herles as Dora
cartoon_voices_16
Alexander Gould as Nemo
cartoon_voices_06
Jonathan Katz as Dr. Katz
cartoon_voices_17
Tom Kenny as Spongebob Squarepants
cartoon_voices_04
James Avery “Uncle Phil” as The Shredder
cartoon_voices_05 
Rachael MacFarlane as Meg Griffin (Pilot Episode), Hayley Smith (American Dad)
cartoon_voices_07
  Lacey Chabert as Meg Griffin (1999 – 2000) cartoon_voices_09 Mila Kunis as Meg Griffin (2000-Present) cartoon_voices_08
Lorenzo Music as Garfield
cartoon_voices_11
Adam West as Adam West
cartoon_voices_10

 
Elizabeth Daily as Tommy Pickles
cartoon_voices_13
Trey Parker as Stan Marsh, Eric Cartman, Satan, Mr. Garrison, Randy Marsh, Mr. Mackey
cartoon_voices_14
Matt Stone as Kyle Broflovski, Kenny McCormick, Saddam Hussein, Gerald Broflovski, Leopold “Butters” Stotch, and Tweek
cartoon_voices_15 
Dan Castellaneta as Homer Simpson
cartoon_voices_12
Pamela Segall Adlon as Bobby Hill
cartoon_voices_02
Seth MacFarlane as Peter, Brian and Stewie Griffin
cartoon_voices_03
 Yeardley Smith as Lisa Simpson
cartoon_voices_01
 
   

Wednesday, November 25, 2009

ராக் பேலன்ஸிங் எனும் அற்புதக்கலை

rb-1.jpg

ர்வர் சுந்தரம் திரைப்படத்தில் நான்கைந்து காபி டம்ளர்களை ஒன்றின்மீது ஒன்றடுக்கி பேலன்ஸ் செய்து எடுத்து வருவார் நாகேஷ்.  அந்தக் காட்சிக்காக எத்தனை டேக் எடுத்தார்களோ தெரியாது.

ஆனால் பில் டான் அப்படியில்லை.கல்லிலே கலைவண்ணம் காணும் சிற்பியான அவர் ராக் பேலன்ஸிங் எனப்படும் கற்களை ஒன்றின்மீது ஒன்றை நிலைநிறுத்தும் கலையில் வல்லவர்.

சான்பிரான்சிஸ்கோ கடற்கரையில் இவருடைய கலை கைவண்ணங்கள் வரிசையாக நின்று காண்போரை வியக்க வைக்கும்.

billdan2

இந்தோனேசியாவில் பிறந்த பில் டான் துவக்கத்தில் சரக்கு கிடங்கு ஒன்றில் வேலை பார்த்தவர். அவருக்குள் இருந்த கலைத் தாகம் உசுப்பிவிட ஊர் சுற்ற ஆரம்பித்தார். கற்பாறைகளை ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கி நிறுத்தும் கலையைக் கற்றுத் தேர்ந்தார்.

ராக் பேலன்ஸிங் என்ற இந்த அரிய சிற்பக்கலைத் துறையில் உலகம் முழுக்க வல்லவர்கள் பலர் இருந்தாலும் வல்லவர்களுக்கெல்லாம் வல்லவர் இந்த பில் டான். அவருடைய ராக் பேலன்ஸிங் அற்புதங்களை நிலை தடுமாறாமல் பார்த்து ரசியுங்கள்.

மேலும் விவரங்களுக்கு: http://www.rock-on-rock-on.com

rb2.jpg

rb3.jpg

rb4.jpg

rb5.jpg

rb6.jpg

rb7.jpg

rb8.jpg

rb9.jpg

rb10.jpg

rb11.jpg

Tuesday, November 24, 2009

9999999? இப்படியும் ஒரு சாதனை

mirracle-babyடைசியில் அந்த அதிசயம் நிகழ்ந்தே விட்டது. 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் 09/09/2009 ஆம் தேதி காலை 9 மணி 9 நிமிடங்களுக்கு குழந்தை ஒன்றை பெற்று சாதித்து விட்டனர் பெரண்டஸும் அவருடைய மனைவி போலியும். இது அவர்களின் மூன்றாவது குழந்தை.

அமெரிக்காவில் உள்ள லா குரூஸ் பகுதியைச் சேர்ந்த பெரண்டாசின் மனைவி போலி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

லாகுரூஸில் உள்ள ஸ்கெம்ப் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த போலிக்கு கடந்த புதன்கிழமை அதாவது 9 ஆம் தேதி காலை 9 மணி 9 நிமிடங்களுக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பிக்கப்பட்டது.

தன்னுடைய குழந்தையின் பிறந்த தினத்தை மறக்கவே முடியாது என்ற தித்திப்பில் உருகிப்போகிக் கிடந்த பெரண்டஸ் - போலி தம்பதியினருக்கு மற்றொரு மகிழ்ச்சியான ஷாக் செய்தியை கொடுத்தார் செவிலி.

அது… அந்த குழந்தையின் எடை 9 பவுண்ட் 9 அவுன்ஸ் என்பது!

9999999 என்ற அடையாளத்தோடு பிறந்திருக்கும் இந்த குழந்தைக்கு ஹென்றி என்று பெயரிட்டுள்ளனர்.

நீளமான ஷாட்!: பேஸ்கட்பாலில் சாதனை?

மெரிக்காவில் பிரசித்தி பெற்ற விளையாட்டு பேஸ்கட்பால். அதில் தன்னுடைய அதிரடியான ஆட்டம் மூலம் ரசிகர்களில் மனதில் இடம் பிடித்திருப்பது டியூட் பெர்ஃபெக்ட் அணி.

சமீபத்தில், இந்த அணியைச் சேர்ந்த வீரர் ஒருவர் டெக்சாஸ் A&M மைதானத்தின் உச்சியில் ஏறி, அங்கிருந்தபடியே பேஸ்கட் பாலை வேகமாக எறிந்தார். வானத்தில் பறந்த பந்து மிகச் சரியாக இலக்கை அடைந்து வளைக்குள் விழுந்து பூமியைத் தொட்டது. இதுதான் பேஸ்கட்பால் விளையாட்டில் அதிக தூரத்தில் இருந்து எறியப்பட்டு வளைக்குள் விழ வைக்கப்பட்ட அடி எனக் கருதப்படுகிறது. இது உண்மையா என்பதை கின்னஸ் நிறுவனம் தான் உறுதிப்படுத்த வேண்டும் என்கிறார்கள்.

பந்து பொய் சொல்லாது என்பது ஒரு பக்க உண்மை என்றால் பந்து எறியப்படுவதும், பந்து வானத்தில் பயணிப்பதும் ஒரே ஷாட்டில் வந்திருக்கிறது. அதனால் இதில் புகைப்பட வித்தை எதுவும் இல்லை என்கிறார்கள். அத்துடன் இந்நிகழ்வைத் தொடர்ந்த வீரர்களின் உணர்ச்சி வெளிப்பாட்டில் எந்தவித பாசாங்கும் காணப்படவில்லை என்பதும் இதை நம்பலாம் என்ற நம்பிக்கையை வரவழைக்கிறது.

அதுமட்டுமல்ல இந்த விடியோ காட்சியை ட்யூட் பெர்ஃபெக்ட் அணி தன்னுடைய இணையதளத்தில் அரங்கேற்றி இருப்பதுடன், ஒவ்வொரு லட்ச ஹிட்டுக்கு பதிலாக, பரிசாக ஒரு குழந்தை வீரரைத் தத்தெடுத்து பயிற்சி அளிக்கவும் உள்ளதாம்.

நல்ல நோக்கம் என்பதால் உண்மையான ஷாட்தான் என்று நம்பலாம்.

Monday, November 23, 2009

உலகின் மிக நீண்ட நேரம் ஓடக்கூடிய திரைப்படம் (150 மணி நேரம்)

terry-gilliam_1505790a உலகின் மிக நீண்ட நேரம் ஓடக்கூடிய திரைப்படம் என்ற பெயரை பிரெஞ்சு மொழி திரைப்படமான சினிமாட்டன் (Cinematon) பெற்றியிருக்கிறது. ஜெராடு கோரண்ட் என்பவர் இயக்கியுள்ள இத்திரைப்படம் சுமார 150 மணி நேரம் ஓடும். அதாவது, நீங்கள் தொடர்ந்து பார்க்க விரும்பினால், நாற்காலியை விட்டு எழுந்திருக்க 6 நாட்கள் ஆகும்.
இதன் படத் தயாரிப்புப் பணிகள் 1978 ஆம் ஆண்டு தொடங்கி, 2008 ஆம் ஆண்டில்தான் முடிந்தது. 30 வருடங்கள் தயாரிப்பில் இருந்த இந்தப் படத்தை ஜெராடு தன்னுடைய நண்பர்களின் நிதி உதவியோடு  முடித்தே விட்டார். அவருடைய நண்பர்கள் அனைவரும் ஓரிரண்டு நிமிடங்கள் இந்தப் படத்தில் வந்துபோகின்றனர்.

சினிமாட்டன் வரும் 2010 ஆம் ஆண்டு ஜனவரியில் திரைக்கு வருகிறது(யார் பார்ப்பார்கள் என்பதுதான் வியப்பான விஷயம்). விரைவில் இந்தப் படம் பிரான்ஸில் திரையிடப்பட இருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி, உலகின் மிக நீண்ட திரைப்படம் 2006 இல் வெளிவந்த மட்ரேஜாஸ்கா (Matrjoschka) 95 மணிநேரம்.
இரண்டாவது இடத்தை 1987 இல் வெளிவந்த தி கியூர் இன்சோம்னியா(The Cure for Insomnia) 87 மணிநேரம், மூன்றாவது இடத்தை 1968 இல் வெளிவந்த அண்டர்கிரவுண்ட்(Underground) 48 மணிநேரம், ஆகிய படங்கள வகிக்கின்றன.

சினிமாட்டன் வெளியானவுடன் இந்த படங்கள் அடுத்தடுத்த நிலைக்குத் தள்ளப்படும்'.

ஆவ்…..

83149093

Friday, November 20, 2009

தங்க ஜாக்கெட் (ரூ.65 லட்சம்.)

21gold டாடா நிறுவனத்தின் அங்கமான கோல்டு பிளஸ் ஜுவல்லரியின் விழுப்புரம் கிளை சார்பில் தங்கத்திலாலான கோல்டு ஜாக்கெட் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த தங்க ஜாக்கெட் 3 கைவினையர்களால் சுமார் 40 நாள்களில் தயாரிக்கப்பட்டது.  இது 22 காரட் நகையில் செய்யப்பட்டது. இதன் இன்றைய மதிப்பு சுமார் ரூ.65 லட்சம். இந்த சட்டை மிகவும் சுலபாக அணியக் கூடியது என்று இந் நிறுவனத்தில் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Wednesday, November 18, 2009

பாரதியின் முதல் பாடல்

image மகாகவி பாரதியாரின் வாழ்வில் 1897முதல் 1904 முடிய உள்ள எட்டு ஆண்டுகள் இன்பமும், துன்பமும் கலந்தது என்றே சொல்லலாம். 1897ல் செல்லம்மாளுடன் திருமணம் நடந்த மகிழ்ச்சி, 1898ல் தந்தையாரின் மரணம் தந்த அதிர்ச்சி என்று தத்தளித்த சிறு வயது பாரதியை அவரது அத்தை குப்பம்மாள் அடைக்கலம் தந்து காசிக்கு அழைத்து சென்றார்.

அங்கு பாரதி ஆங்கிலக்கவிஞர் ஷெல்லியின் மீது ஈடுபாடு கொண்டு அவரது கவிதைகளை படிக்க தொடங்கினார். பின்னர் எட்டையபுரbharathi22த்துக்கு வந்த அவர் ஷெல்லியின் கில்டு என்று ரசி கர் மன்றத்தை தொடங்கி, ஷெல்லிதாசன் என்று தனக்கு புனைப்பெயரும் சூட்டி கொண்டார்.

இந்த ஆர்வம்தான் அவரை ஆங்கிலக்கவிதை வடிவான ஸானெட் என்ற 14 வரிகளில் அமையும் பாடலின் வடிவத்தை தமிழில் எழுதிப் பார்க்க வைத்தது. அப்படி எழுதிய பாடல் ஒன்று, 1904ம் ஆண்டு ஜூலை மாதம் தனிமை இரக்கம் என்ற தலைப்பில் மதுரையில் மு.ரா.கந்தசாமி கவிராயர் நடத்தி வந்த விவேகபாநு என்ற பத்திரிகையில் வெளிவந்தது. இதுவே அச்சேரிய பாரதியின் முதல் பாடலாகும். இதன் பிரதி ஒன்றைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள்

அப்படியா?

மாரடைப்பில் சுருண்ட எஜமானரை காப்பாற்றிய நாய்

வார்சா : மாரடைப்பால் தரையில் சுருண்டு விழுந்த எஜமானரை காப்பாற்றியது செல்ல நாய். போலந்து நாட்டில் வார்ஸா நகரில் வசித்து வருபவர் ஸ்ட்ரைகன் பையோடர் வேக்னர் (50), இவர் வளர்க்கும் செல்ல நாய் ஜேக் ரஸ்ஸல். இரண்டு வயது ஆகிறது. சமீபத்தில், வீட்டில் "டிவி' 1545711பார்த்துக் கொண்டிருந்தார். அப் போது வீட்டில் யாரும் இல்லை. செல்ல நாய் மட்டும் இவருடன் இருந்தது. ரசித்து பார்த்துக் கொண்டிருந்த இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. வலி தாங்கமுடியாமல் மார்பை பிடித்துக் கொண்டு சாய்ந்து விட்டார். எஜமான் மார்பை பிடித்து கொண்டு சாய்கிறாரே; ஏதோ வலியால் துடிக்கிறார் என்று உணர்ந்த நாய், தனது பின்னங்காலுக்கு மேல் உள்ள "இதய' வடிவிலான சதை பகுதியை வைத்து அவர் மார்பில் இறுக தேய்த்துள்ளது. அதனால் வேக்னர் படிப்படியாக வலி குறைந்து பழைய நிலைக்கு வந் துள்ளார். பின்னர், மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றார்.

டாக்டர்கள் கூறுகையில், "வேக்னருக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது நாய் சமயோசிதமாக செயல்பட்டு அவரது வலியை குறைத்துள்ளது. "அதனால் தான் அவரால் இங்கு வந்து சிகிச்சை பெற முடிந்தது. நாய் செய்த செயலால் அவர் உயிர் பிழைத்துள்ளார்' என்றனர். வேக்னர் தனது செல்லப்பிராணி பற்றி கூறுகையில், "எனது நாயின் செயல் கண்டு பிரமித்து போய் உள்ளேன்' என்றார்

Tuesday, November 17, 2009

51 ஆண்டுக்கு பின் லைப்ரரிக்கு அபராதத்துடன் புத்தகங்களை திரும்பி தந்த புண்ணியவான்

Dollar Books 3 shelves

நியூயார்க் : அமெரிக்காவில் 51 ஆண்டுகளுக்கு முன் லைப்ரரியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட 2 புத்தகங்கள், ரூ.47,000 அபராத தொகையுடன் இப்போது பத்திரமாக தபாலில் திரும்பி வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போனிக்ஸ் நகரின் கேமல்பேக் உயர்நிலைப் பள்ளி லைப்ரரி பொறுப்பாளர் ஜார்ஜெட் பார்டைன் கூறியதாவது: லைப்ரரிக்கு நேற்று முன்தினம் வந்த தபாலில், 2 புத்தகங்கள் இருந்தன. அத்துடன் ரூ.47,000க்கான (1000 டாலர்) மணி ஆர்டரும் வந்து சேர்ந்தது. அதனுடன் இருந்த கடிதம் என்னை ஆச்சரியப்படுத்தியது. 1959ம் ஆண்டு இதே லைப்ரரியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட 2 புத்தகங்கள் அவை. 51 ஆண்டுகள் கழித்து பத்திரமாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

இந்த பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதை அனுப்பியுள்ளனர். யாரென குறிப்பிட விரும்பாத அவர்கள், பள்ளி லைப்ரரியில் புத்தகம் எடுத்த பிறகு வேறு மாநிலத்துக்கு இடம் மாறி சென்றதாக கூறியுள்ளனர். பிறகு, புத்தகங்களை மாணவர் திருப்பி அனுப்பத் தவறி, பரணில் போட்டு வைத்துள்ளார். சமீபத்தில் அதைக் கண்டதும், அப்போதைய ஒருநாள் அபராதத் தொகையான 2 சென்ட் கணக்கிட்டு மணி ஆர்டர் அனுப்பியதாக கடிதத்தில் எழுதியுள்ளனர். தினசரி 2 சென்ட் என்றாலும் 51 ஆண்டுகளில் அபராதம் ரூ.35,000 (745 டாலர்) ஆகிறது. ஆனால், இடைப்பட்ட காலத்தில் அபராத தொகை அதிகரித்திருக்கலாம் என்பதால், ரூ.47,000 அனுப்பியதாக குறிப்பிட்டுள்ளனர். இது வரவேற்கத்தக்கது. இந்தப் பணத்தில் புதிய புத்தகங்கள் வாங்கப்படும் என்றார்.

Monday, November 16, 2009

5 லட்சம் விலங்குகள், பறவைகள் ஒரே இடத்தில் கொல்லப்படும் விழா!!!

நேபாள நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள பர மாவட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு தடவை விலங்குகளை பலியிடும் பிரமாண்ட விழா நடந்து வருகிறது.

wpa912198f_0f லட்சக்கணக்கான ஆடு, மாடு, கோழி, பன்றி, புறா போன்றவை இந்த விழாவில் பலியிடப்படும். நேபாள பெண் கடவுளான காதிமையை சாந்தப்படுத்த இந்த பரிகார பூஜை நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு நவம்பர் 24-ந்தேதி விலங்குகளை பலியிடும் விழா நடக்கிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சுமார் 5 லட்சம் ஆடு, மாடு, கோழி, பன்றி, புறா, வாத்து போன்றவை பலியிடப்படும். பர மாவட்டத்தில் உள்ள பரியாபூர் என்ற ஊரில் இந்த பரிகார விழாவுக்கு பிரமாண்ட எற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த விழாவில் சுமார் 50 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 லட்சம் விலங்குகள், பறவைகள் ஒரே இடத்தில் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று உலகின் பல்வேறு அமைப்புகள் நேபாள நாட்டுக்கு கோரிக்கை விடுத்தன. மேனகா காந்தியும் நேபாள பிரதமர் மாதவ்குமாருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால் 5 லட்சம் விலங்குகள் பலியிடப்படும் விழாவை தடுக்க இயலாது என்று நேபாள உள்துறை மந்திரி பிம்ரவல் கூறி விட்டார். மக்களின் ஆன்மீக நம்பிக்கையில் தலையிட அரசு விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார்.

உலகிலேயே அதிக அளவு விலங்குகள் ஒரே சமயத்தில் பலியிடப்படுவது இந்த விழாவில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இருந்து பீகார், உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

Friday, November 13, 2009

10 வயது பொடியன் 2 கம்பெனிக்கு C.E.O, 1 மணி நேர லெக்சருக்கு ரூ.82,000

world1 கோலாலம்பூர் : மலேசியாவை சேர்ந்த 10 வயது பொடியன், 2 கம்பெனிகளுக்கு தலைமை செயல் அதிகாரியாக கலக்குகிறான். படிப்பை பாதியில் விட்ட அவனுக்கு, கல்லூரிகளில் 1 மணி நேரம் விரிவுரையாற்ற ரூ.82,000 தரப்படுகிறது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்தவர் செரியனா அலியாஸ். இவரது மகன் ஆதி புத்ர அப்துல் கனி. வயது 10. செரியானா 2 நிறுவனங்களைத் தொடங்கி ஆதி என்ற பெயரில் விட்டமின் மாத்திரைகளை விற்பனை செய்து வருகிறார். அப்துல் கனி, 3ம் வகுப்பு வரை படித்தான். ஆனால், தனது பாடத் திட்டத்துக்கு மீறி, இயற்பியல், வேதியியல், கணிதம், புவியியல், உயிரியல் ஆகிய பிரிவுகளில் அடுக்கடுக்கான அறிவை வெளிப்படுத்தினான். இன்டர்நெட்டில் புகுந்து எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தான்.

அறிவுத் தேடலுக்கு இடையே, அன்னையின் பிசினசையும் கவனித்துக் கொள்ளத் தொடங்கினான். இப்போது 2 நிறுவனங்களின் செயல்பாட்டையும் ஏறக்குறைய தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளான் அப்துல் கனி. அதனால், அந்த கம்பெனிகளின் தலைமைச் செயல் அதிகாரி என அவனை அழைக்கின்றனர்.வயதுக்கு மீறிய அறிவாளித்தனம் காரணமாக, மூன்றாம் வகுப்போடு படிப்பை நிறுத்திய அப்துல் கனி, பாடப் புத்தகங்களைப் படிப்பதை விட இன்டர்நெட்டில் அதிகம் அறிய முடிகிறது என்கிறான்.

இதற்கிடையே, பல பாடப் பிரிவுகளில் அவனுக்கு உள்ள அபார ஞானத்தை அறிந்த மலேசிய கல்லூரிகள், அவனை பகுதி நேர விரிவுரையாளராக அழைக்கின்றன.அம்மாவின் கம்பெனி நிர்வாகத்தைக் கவனிப்பதுடன், கல்லூரிகளில் விரிவுரை ஆற்றுவது, இன்டர்நெட்டில் மூழ்குவது என இருக்கிறான் அப்துல் கனி. ஒரு மணி நேர விரிவுரைக்கு ரூ.82,300 ஊதியம் பெறுகிறான். இஸ்லாமிய ஆய்வுக் கல்வியில் விரிவுரையாளராக விரும்புவதாக கூறும் சிறுவனை, கனடா, சிங்கப்பூர், அமெரிக்காவில் படிக்க வைக்க அவனது தாய் திட்டமிட்டுள்ளார்

குழந்தைகள் தின வாழ்த்துகள்!!!

Thursday, November 12, 2009

ஒரு நாளைக்கு 12000 தும்மல் போடும் சிறுமி (காணொளி)

 

Washington: Lauren Johnson, 12, from Virginia has baffled doctors because she sneezes over 12,000 times in a day.

"I can't stop sneezing. It goes off about eight to nine times a minute," Fox News quoted Lauren, as saying.

The syndrome known as "machine gun sneezing," started nearly two weeks ago when Lauren caught a cold.

Her mum, Lynn Johnson said:"I know this is terrible for her."

The sixth-grader has had to stay away from school because of her condition and has seen six doctors since the sneezing began.

A neurologist said Lauren's condition may be "irretractable psychogenic disorder," which could have been caused due to stress, according to the report.

Lynn said: "There's less than 40 cases ever documented ever in the entire world...Nobody really knows how to treat it, what's going to work, and even in the cases where it might have worked or turned the sneezing off for awhile, a lot of times it comes back again and then you're right back to where you started."

She added: "It turns off when she sleeps...Only in a deep REM sleep it turns off."

Tuesday, November 10, 2009

First (C)Glass கோயில்

மலேசியாவில் ஜலன் டெப்ரா என்னும் இடத்தில் ஸ்ரீ ராஜ காளியம்மன் கோயிலை கட்டி முடித்திருக்கிறார்கள். இதில் என்ன பிரமாதம்? உலகத்தின் பல நாடுகளிலும்தான் இந்துக் கடவுளின் திருக்கோயில்கள் இருக்கின்றதே... என்று நீங்கள் நினைக்கலாம். இந்தக் கோயில் உருவாகியிருப்பது முழுக்க முழுக்க கண்ணாடியால் என்பதுதான் இதில் ஆச்சரியமான விஷயமே!

கோயிலின் கூரை, சுவர்கள், கோபுரங்கள் என அனைத்தும் வண்ணக் கண்ணாடித் துண்டுகளைக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதற்குப் பயன்படுத்தியுள்ள கண்ணாடிகள் அனைத்தும் தாய்லாந்து, ஜப்பான், பெல்ஜியம் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டனவாம். இந்தக் கோயிலை நிர்மாணிக்க மலேசிய மதிப்பில் மூன்று மில்லியன் ரிங்கிட்ஸ் (இந்திய மதிப்பில் 39 மில்லியன் ரூபாய்!) பணம் செலவானதாம்.

இந்தக் கோயிலை நிர்மாணிப்பதற்கு தாய்லாந்தில் தான் பார்த்த கண்ணாடிக் கோயிலே முன் மாதிரியாக இருந்தது என்கிறார் அறங்காவலரான எஸ். சின்னதம்பி.

 

  05072009184820h2eqt 050720091843 050720091845050720091853 050720091852 050720091854 050720091849050720091855 050720091860 050720091877 f4mhrn

LinkWithin

Related Posts with Thumbnails