Monday, December 20, 2010

சேவல் "கைது'!!!!

சேலம்: சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த வக்கீல் விஜயகுமார் இரு தினங்களுக்கு முன், தேவேந்திரபுரம் எக்ஸ்டென்ஸன் பகுதியில் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது, வழியில் நின்ற சேவல், வக்கீல் விஜயகுமாரை கொத்தியுள்ளது.பொதுவாக கொத்திய சேவலை "கல்'லால் அடித்து துரத்தி விடுவர். ஆனால், சாலையில் நடந்து சென்ற போது சேவல் கொத்தியது குறித்து, வக்கீல் விஜயகுமார் சேலம் செவ்வாய்பேட்டை போலீஸில் புகார் தெரிவித்தார்.செவ்வாய்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, வக்கீல் விஜயகுமாரை கொத்திய சேவலை தேடிப்பிடித்து "கைது' செய்து, ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். large_142299சேவல் கைது செய்யப்பட்டது பற்றி தகவல் அறிந்த சேவலின் உரிமையாளர் கமலா என்பவர் நீதிமன்றத்திற்கு வந்து 200 ரூபாய் அபராதம் செலுத்தி, சேவலை மீட்டுச் சென்றார்.சேவல் மட்டுமல்ல, சாலையில் செல்லும் போது, எந்த விலங்கு தொந்தரவு செய்தாலும், போலீசில் புகார் தெரிவிக்கலாம் என, சேவலை "கைது' செய்த போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது

Tuesday, November 16, 2010

அதிசய வீடியோ: 360 டிகிரியிலும் பார்க்கலாம்!!!

 

ஒரு பாடல் காட்சி ஓடிக்கொண்டு இருக்கும் போது,அந்தக் காட்சியை நம் விருப்பத்திற்கு ஏற்ப camera angle வைக்க முடிந்தால் எப்படி இருக்கும்,இந்த வீடியோவை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப 360 degree-ல் rotate செய்து பார்க்கலாம்,முயன்று பாருங்கள்.....

நன்றி: http://denimmohan.blogspot.com/

Sunday, November 14, 2010

திருமணமானதும் சீன ஜோடிகள் செய்யும் முதல் காரியம்?!!!

ஷாங்காய்: திருமணமானதும் சீன ஜோடிகள் செய்யும் முதல் காரியம் என்ன தெரியுமா... 'முதலிரவுதானே' என்று கேட்டு விடாதீர்கள்.

அதற்கு முன்பே, இந்த ஜோடிகள் நேராக ஸ்டுடியோக்களுக்குப் போகிறார்களாம்.  நிர்வாணமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை எடுத்துக் கொள்கிறார்களாம்.

ஏன் இந்த விபரீதம்?

chinese-naked-wedding-foto-thumb'வேறு ஒன்றுமில்லை... திருமணமான பிறகு கணவன் -மனைவி இருவரின் உடல் அமைப்புமே மாறிப்போகிறது. இளமையாக, வனப்பாக இருக்கும்போதே ஒரு நிர்வாணப் படம்  எடுத்துக் கொண்டால், பின்னாளி்ல் பார்த்து மகிழ உதவுமே.. இன்னொன்று அதில் இருக்கும் கிக்கே தனி...!'

- இதுதான் அந்த ஜோடிகள் தரும் விளக்கம்.

சீன நாட்டு சட்டப்படி, இப்படி நிர்வாண புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது தப்பில்லையாம். அவற்றை பொதுவில் பார்வைக்கு விடுவதுதான் பெரிய குற்றமாம்.

இதற்கிடையே, இந்தமாதிரி படம் எடுக்க எந்த ஸ்டுடியோவையும் இனி அனுமதிக்கக் கூடாது என ஷாங்காய் திருமண வர்த்தக சங்கம் அரசை வலியுறுத்தியுள்ளது. ஆனால் தடைவிதிக்கக் கூடாது என நிர்வாணப் படம் எடுத்துக் கொண்ட ஏராளமான திருமண ஜோடிகள் குரல் கொடுத்துள்ளனர்

Thursday, October 21, 2010

ராசியில்லாத ‘4’-ம் எண்ணுக்கு சீனா தடை

பீஜிங் : சீனாவில் வாகன ஓட்டிகள் "4' என்ற எண்ணை ராசியில்லாததாகக் கருதுவதால், அந்த எண் கொண்ட நம்பர் பிளேட்டை வழங்குவதை அந்நாட்டு அரசு நிறுத்தியுள்ளது.

4 கம்யூனிச நாடான சீனாவில், மூட நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஆனால், சமீப காலமாக அந்நாட்டு மக்கள் மூடப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். 10-10-10 என்ற எண்ணில் வரும் தேதியன்று திருமணம் செய்து கொள்வதை அரிய வாய்ப்பாகக் கருதுகின்றனர். இதே போல அங்குள்ள வாகன ஓட்டிகள், நம்பர் பிளேட்டில் 4 என்ற எண் இடம் பெறுவதை விரும்புவதில்லை. இந்த எண்ணை புறக்கணித்து வந்தனர். இதனால், எந்த நம்பர் பிளேட்டிலும் 4ம் எண் வராதவாறு பதிவு செய்யும்படி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறையை பீஜிங் போக்குவரத்து நிர்வாகம் உடனடியாகச் செயல்படுத்தியுள்ளது. இந்த நடைமுறையை பலரும் வரவேற்றுள்ளனர். இருப்பினும் 4ம் எண்ணை ராசி எண்ணாகக் கருதுவோரும் அங்கு இருக்கத்தான் செய்கின்றனர். இது குறித்து குய் வென்(24) என்பவர் குறிப்பிடுகையில், "நான் 4ம் தேதி பிறந்தேன்; எனவே, எனக்கு ராசியான எண் 4. இந்த எண்ணை நம்பர் பிளேட்டிலிருந்து நீக்கிய அரசின் நடைமுறை ஏற்கத்தக்கதல்ல' என்கிறார்.

‘பகுத்தறிவுள்ள’ கம்னியூச நாட்டிலும் மூடநம்பிக்கையா?

Wednesday, September 8, 2010

'கோடீஸ்வரர் ஒன்லி' பாங்க்

ஹைதராபாத்: கோடீஸ்வர கஸ்மர்களுக்கு மட்டுமே சேவை வழங்கும் சிறப்புக் imagesகிளையை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தொடங்கியுள்ளது.
இந்த சிறப்புக் கிளை முதலில் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது. பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள இந்தக் கிளையில் அக்கெளண்ட் தொடங்க குறைந்தபட்சம் ரூ. 1 கோடி செலுத்த வேண்டும். இந்தக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பே ரூ. 1 கோடியாக இருக்க வேண்டும். அதுவும் வங்கியிலிருந்து அழைப்பு வந்தால் மட்டுமே யாரும் கணக்குத் தொடங்க முடியும்.

'Kohinoor Banjara Premium Banking Centre' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கிளை 4,000 சதுர அடியில் மிக நவீன பைவ் ஸ்டார் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.


இங்கு கணக்கு வைக்கும் வாடிக்கையாளர்களுக்கு வரிகள், சார்ட்டர்ட் அக்கெளண்டன்ட் தொடர்பான உதவிகளையும் ஸ்டேட் பாங்க் வழங்கும். லாக்கர் வசதி, வீட்டுக்கே வந்து கார்களில் வங்கிக்கு அழைத்துச் செல்லும் வசதியும் உண்டு.வீடியோ கான்பரன்ஸ் வசதிகள், கம்பியில்லா இண்டர்நெட் வசதி, காபி பார்கள் என வங்கியில் ஏகபபட்ட வசதிகள்.

இந்தக் கிளைக்காக ரூ. 80 லட்சத்தை செலவிட்டுள்ளது வங்கி

Thursday, June 10, 2010

"ஒரே ஒரு மாணவர்' மட்டும் படிக்கும் பள்ளி

வடமதுரை:வடமதுரை அருகே, அரசு துவக்க பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டும் படிக்கிறார். அவரும், வெளியேற இருப்பதால் பள்ளி மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை பேரூராட்சியிலுள்ள சீத்தப்பட்டியில், பல ஆண்டுகளாக அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. உள்ளூர் மக்கள் வேலைவாய்ப்பு உட்பட காரணங்களால், அருகிலுள்ள நகர பகுதியில் குடியேறிவிட்டனர். விவசாயம் சார்ந்துள்ள மக்கள் மட்டுமே இங்கு தங்கியுள்ளனர்.கடந்த கல்வியாண்டு வரை, இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆறு மாணவர்கள் படித்தனர்.

large_16625

தற்போது ஐந்தாம் வகுப்பு முடித்தவர்கள், வேறு பள்ளிக்கு சென்றுவிட்டதால், இந்த கல்வியாண்டில் ஒரு மாணவர், ஒரு மாணவி மட்டும் இருந்தனர்.இதில் மாணவி இரண்டு நாட்களுக்கு முன்பு, வடமதுரை தனியார் பள்ளிக்கு மாறி சென்று விட்டார். எஞ்சியுள்ள தினேஷ்குமார் என்ற இரண்டாம் வகுப்பு மாணவர் மட்டுமே பள்ளியில் உள்ளார்.அவருக்கு மட்டும் தலைமையாசிரியர் தமிழரசி பாடம் சொல்லி தருகிறார்.ஓரிரு நாட்களில் கூடுதலாக மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்படவில்லை எனில், தினேஷ்குமாருக்கும் டி.சி., தர வேண்டுமென, அவரது பெற்றோர் கெடு விதித்துள்ளனர்.

கல்வி அதிகாரிகள் கூறியதாவது:இக்கிராமத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை எட்டு தான். ஒருவர் மட்டும் இங்கு படிக்கிறார். மற்றவர்கள் அருகிலுள்ள தென்னம்பட்டி, வடமதுரை தனியார் பள்ளிக்கு செல்கின்றனர். எவ்வளவோ எடுத்துக்கூறியும், உள்ளூர் அரசு பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுக்கின்றனர். இதனால் பள்ளியை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு கல்வி அதிகாரிகள் கூறினர்.

LinkWithin

Related Posts with Thumbnails